sivan

செல்வங்களுக்கெல்லாம் முதல் செல்வம் குழந்தைச் செல்வமாகும். நம் அனைத்து செல்வங்களுக்கும் உரிமைக் குரியவர்கள் நம் சந்ததிகள்தான். திருமண பந்தத்தின் அடிப்படையானது இந்த செல்வம்தான். ஒருவரை நாம் முதன்முதலில் பார்க்கும்பொழுது, அவர் நம்மிடம் நலம் விசாரிக்கும் பொழுது, எவ்வளவு சொத்து வைத்திருக்கிறீர்கள்? எத்தனை வீடு வைத்திருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். எத்தனை குழந்தைகள் என்றுதான் முதலில் கேட்பார்கள். இதிலிருந்தே நமக்குத் தெரியவருவது குழந்தைச்செல்வம் என்பது எவ்வளவு முக்கியமான செல்வம் என்பது.

நமது முந்தைய தலைமுறையினரிடம் குழந்தை பாக்கியம் நிரம்பியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் "அவருக்குக் குழந்தை இல்லை...' "இவருக்குக் குழந்தை இல்லை' என்ற பேச்சு இருந்தது. அதைத்தவிர்த்து சமூகத்தில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

Advertisment

இந்தக் காலகட்டத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிக்கொண்டுள்ளது. குழந்தைப்பேறுக்காக தவமிருக்கும் நிலையும், ஊருக்கு ஊர் நவீன கருத்தரிப்பு மையங்களும் பெருகிவருகிறது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. தாமதத் திருமணம். ஆம், இப்போது திருமணம் என்பது கல்வி, வேலை, பொருளாதார வளர்ச்சி போன்ற எல்லாவற்றையும் அடைந்தபின் திருமணம் செய்துகொள்ள வேண்டு மென்ற எண்ணம் இருபாலரிடமும் அதிகரித் துள்ளது.

திருமணத்திற்குப் பிறகும் சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு இன்றைய இளைய தலைமுறை வந்துள்ளது. இதற்கும் மேலாக மற்றொரு காரணம் என்று ஒன்றைப் பார்த்தால் அது நமது உணவு பழக்க வழக்கங் களும் தற்கால சூழ்நிலைகளுமாகும். இவற்றுக்கெல்லாம் மேலாக ஜாதகரீதியாகவும் குழந்தை பேறுக்கு சில தடைகள் இருக்கிறது. சிலருக்கு திருமணம் முடிந்ததும் சரியான காலத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும் அமைப்புள்ளது. ஜாதகரீதியாக குழந்தைப் பேறு கிடைக்கும் காலம் எப்போது என்று முதலில் பார்ப்போம்....

ஐந்தாம் அதிபதி அல்லது அந்த பாவத்தில் நிற்கின்ற கிரகத்தின் தசா புக்தி நடக்கும்போது, ஐந்தாம் அதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகங்கள், அல்லது ஐந்தில் நின்ற கிரகத்தின் நட்சத்திரத்தில் நின்ற கிரகங்களின் தசா புக்தியின்போது, ஐந்தாம் அதிபதியுடன் இணைந்த கிரகம் அல்லது ஐந்தாம் பாவ அதிபதி, நட்சத்திர அதிபதியுடன் இணைந்திருக்கும் கிரகத்தின் தசா புக்தியின்போது, கோட்சார குரு ஐந்தாம் பாவத்தை பார்த்தாலோ அல்லது ஐந்தாம் அதிபதியை பார்த்தாலோ அல்லது ஐந்தாம் பாவத்திற்கு குரு வரும்போதோ குழந்தைப் பேறு உண்டாகும்.

Advertisment

சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம், பிரச்சினை, சிலருக்கு அதற்குரிய அறிகுறியே இல்லாமல் இருப்பது, இதுபோன்ற அமைப்புகளும் இப்போது நிறைய உள்ளது. சிலருக்கு புத்திர தோஷம் ஏற்படும். சிலருக்கு புத்திர சோகம் ஏற்படும். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. புத்திர தோஷம் என்பது குழந்தை உண்டாவதிலுள்ள பிரச்சினைகளாகும். புத்திர சோகம் என்பது குழந்தைகள் ஏற்பட்டு அதற்குப்பின் அந்தக் குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளாகும்.

புத்திர தோஷம்

ஒருவருக்கு குழந்தை உருவாகும். ஆனால், தொடர்ந்து அவருக்கு கரு தங்காமல் கலைந்துகொண்டே இருக்கும். குழந்தை உருவாவதில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணம் அவருடைய ஜாதக அமைப்பும் கிரக சஞ்சார நிலைகளும், இணைவுகளும்தான். அதுபற்றி பார்ப்போம். இரண்டு பகை கிரகங்களுக்கு இடையில் ஐந்தாம் அதிபதி இருப்பது. ஐந்தாம் பாவத்தில் பாப கிரகங்களான ராகு, கேது, சனி இருப்பது. புத்திரக்காரகனான குருபகவான், பாப கிரகங்களுடன் இணைவது.

ஐந்தாம் அதிபதி நீசமடைவது அல்லது அஸ்தமனம் அடைவது. ஐந்தாம் அதிபதி 6, 8, 12-ஆம் பாவத்தில் இருப்பது. ஐந்தாம் அதிபதி வக்ரம் பெறுவது. பெண்ணுடைய ஜாதகத்தின் ஒன்பதாம் பாவத்தில் பாப கிரகங்கள் இருப்பது. ஆணுடைய ஜாதகத்தின் மூன்றாம் இடம், ஐந்தாம் இடம் பலவீனமாக இருப்பது. சூரியனுடன் நெருங்கிய பாகையில் சுக்கிரன் இருப்பது. இதுபோன்ற அமைப்புகள் புத்திர தோஷத்தைத் தருகிறது

புத்திர சோகம்

குழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பது. எடைக் குறைவாக அல்லது உடல் ஊனமாக பிறப்பது. மனவளர்ச்சிக் குன்றி குழந்தை பிறப்பது. சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பது. சிலருக்கு குழந்தை பிறந்தபிறகு அவர்கள் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் அதிகமான பிரச்சினைகளை சந்திப்பார்கள். இதுவும் ஒருவகை புத்திர சோகம்தான்.

ஐந்தாம் அதிபதியுடன் எட்டாம் அதிபதி தொடர்புகொள்ளும்பொழுதும், பாப கிரகங்கள் தொடர்புகொள்ளும்பொழுதும் அந்தக் குழந்தைகளால் அவர்களுக்கு அவமானம், பிரச்சினைகள், இழப்பு எல்லாம் ஏற்படுகிறது.

ஐந்தாம் அதிபதியுடன் பாப கிரகங்கள் தொடர்புபெறும்போது. குழந்தைகளால் இவர்களுக்கு எந்தவொரு பயனும் இருக்காது.

மன வேதனைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு அதன்வழியே குழந்தைப் பெறு உண்டாகும். இத்தகைய ஜாதக அமைப்புகளைப் பார்த்தால் ஐந்தில் ராகு இருந்து கோட்சார குரு அந்த ராகுமீது வரும் காலகட்டத்தில் டெஸ்ட் டியூப் பேபி முயற்சி செய்தால் குழந்தைப் பேறு உண்டாகும் காலமாகும்.

குருவும் ராகுவும் தொடர்புபெறும்

பொழுது செயற்கை முறையில் கருத்தரிப்பு முயற்சி செய்தால் குழந்தைப்பேறு உண்டா கும். ஒருவரின் பிறந்த கால குருவை கோட்சார சனியும் அல்லது பிறந்தகால ஜாதகரின் சனியை கோட்சார குருவும் பார்வை செய்யும் பொழுதும் செயற்கை கருத்தரிப்பிற்கான மருத்துவம் பயன் அளிக்கிறது.

புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் நட்சத்திரம் மிருகசீரிடம், அஸ்தம், உத்திராடம். இவை குருவின் கர்மப் பதிவினைகொண்ட நட்சத்திரங்களாகும். இவை முதல்தரம். இந்த நட்சத்திரங்களின் லக்னப்புள்ளி லக்னாதிபதி நட்சத்திரமாக இருந்தாலும், ஐந்தாம் அதிபதி இந்த நட்சத்திரங்களில் நின்றாலும் புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு பரிகாரமாக

குரு ஸ்தலம் என்று சொல்லக்கூடிய திருச்செந்தூருக்கு வியாழக்கிழமையில் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகிறது. சஷ்டி திதியன்று விரதமிருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலமாக குழந்தை பாக்கியம் ஏற்படும். குரு ஸ்தானத்திலுள்ள அனைவருக்கும் உதவிசெய்வது, அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதன் வழியாக இந்த தோஷத்தின் தீவிரம் மாறும்.

செல்: 9080273877