ஜோதிட நிலையில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சம்பந்த மில்லாமல் இருந்தால் அந்த கிரகம் ஆட்சி, உச்சம் என்று எந்த நிலையில் இருந்தாலும், யோகம் தரும் தசாபுக்திகள் நடந் தாலும் அந்த கிரகம் நன்மை- தீமை என எந்தப் பலனையும் வழங்காது. எந்தவொரு கிரகத்திற்கும் 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் ஏதாவ தொரு கிரகம் இருந்து சம்பந்தம் பெற்றால்தான் அந்த கிரகம் செயல்பட்டு பலன்களைத் தரமுடியு மென்று சித்தர்கள் தமிழ் முறை ஜோதிடத்தில் கூறுகின்றனர்.
இந்த மண்ணுலகில் வாழும் ஆண்- பெண் இருவரின் இப்பிறவி வாழ்வில், அவர்கள் அடை யப்போகும் நன்மை- தீமை களை, அவர்களது பிறப்பு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு- கேது ஆகிய கிரகங்கள் இருக்கும் நிலையினையும், ஒரு கிரகத்துடன் எந்தெந்த கிரகங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்து, இப்பிறவி விதி நிலையை அறிந்துகொள்ளவேண்டும். பாரம்பரிய வேத முறைக் கணிதத்தில் பலனறியும் முறை வேறு; சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்தில் பலனறியும் முறை வேறு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramayanam_14.jpg)
உதாரணமாக, ஒருவர் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையையும் அதனுடன் சம்பந்தம் பெற்றுள்ள கிரகங்களின் தன்மைகளையும் கொண்டு அவரது தந்தை, மகன் உறவு நிலையை அறிந்துகொள்ளமுடியும் சந்திரன் இருக்கும் நிலையையும், அதனுடன் இணைந்துள்ள கிரகங்களின் தன்மையையும் கொண்டு தாய் பற்றிய விளக்கத்தை அறிந்துகொள்ளலாம். செவ்வாய் மற்றும் அதனுடன் இணைந்துள்ள கிரகங்களைக்கொண்டு சகோதர உறவுநிலை பற்றி அறியலாம். புதன் மற்றும் அதனுடன் சேர்ந்த கிரகங்களைக்கொண்டு கல்வி, தாய் மாமன், தம்பி, தங்கை, வியாபாரம், தரகுத் தொழில், பொது அறிவு போன்றவற்றை அறியலாம்.
குரு மற்றும் அதனுடன் சேர்ந்திருக்கும் கிரகங் களின் தன்மைகளைக் கொண்டு அவரின் இப்பிறவி வாழ்வின் அனைத்துப் பலன்களை யும், விதி, வினைகளையும், மோட்ச நிலையை யும் தெரிந்துகொள்ளவேண்டும். சுக்கிரன் மற்றும் அதனுடன் சேர்ந்துள்ள கிரகங்களைக் கொண்டு மனைவி, வீடு, பணம், சுகபோகம் போன்றவற்றை அறியலாம்.
சனி மற்றும் அதனுடன் இணைந்துள்ள கிரகங்களின் தன்மையைக் கொண்டு தொழில், வேலை, வேலையின் நிலை, வேலையாட்கள், வருமானம், வாழ்வில் உயர்வு அல்லது சம்பாதித்த சொத்து, பணத்தை இழந்து வறுமையை அடையும் நிலை போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். ராகு மற்றும் அதனுடன் சேர்ந்த கிரகங்களின் தன்மையைக்கொண்டு முற்பிறவிகளில் நாம் செய்த பாவம், நம் முன் னோர்கள் செய்த பாவம், வம்ச வாரிசுகளுக்கு சாபத் தொடர்ச்சி போன்றவற்றை அறியலாம். கேது மற்றும் அதனுடன் இணைந்துள்ள கிரகங்களைக்கொண்டு முற்பிறவி களில் நாம் பெற்ற சாபம், முன்னோர்கள் பெற்ற சாபம், வம்சத் தொடர்ச்சி, அதனால் நாம் அனுபவிக்கும் பலன்களை அறிந்துகொள்ளலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramayanam1_0.jpg)
இராமபிரானின் ஜாதகத்தில் அவரரைக் குறிப்பிடும் உதாரண கிரகமான குரு அமைந்துள்ள நிலையையும், அந்த குருவுடன் சம்பந்தம் பெற்றுள்ள கிரகங் களையும், அதேபோன்று குருவுக்கு எதிர்ப்புறம் இருக்கும் கிரகங்கள் தந்த பலன்களையும் இங்கு காண்போம். ஒருவரின் ஜாதகத்தில் பலனறியும்போது, அந்த ஜாதகத்தை இரண்டு பாகமாகப் பிரித்துப் பலனறிய வேண்டுமென்பது தமிழ் முறை ஜோதிடத்தின் விதியாகும். இராமரின் ஜாதகத்தில் ராகுவிலிருந்து கேதுவரை ஒரு பகுதியாகவும், கேதுவிலிருந்து ராகுவரை மற்றொரு பகுதியாகவும் பிரித்துக்கொள்ளவேண்டும்.
கேதுவிலிருந்து ராகுவரை உள்ள ராசிகளில் கேது, சந்திரன், குரு, சனி ஆகிய நான்கு கிரகங் கள் உள்ளன. ராகுவிலிருந்து கேதுவரை உள்ள ராசிகளில் ராகு, செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங் கள் குருவுக்கு எதிர்ப்பக்கம் உள்ளதால், இவை குறிப்பிடும் குடும்ப உறவுகள் ஜாதகருக்கு எதிராக செயல்படும். இந்த உறவுகளால் எந்த நன்மையையும் அடையமுடியாது.
குருவுக்கு எதிர்ப்புறம் சூரியன் உள்ளதால், இராமரின் வம்ச முன்னோர்கள் செய்த செயல்கள், அவரது முந்தைய அவதாரங்களில் செய்த வினைகளின் பயன்கள், அவரது தந்தை தசரதன் செய்த பாவத்தால் உண்டான பலன் களை அனுபவித்துத் தீர்க்கவேண்டிய நிலையை இராமர் அடைந்தார். தன் தந்தையாலும், தான் பெற்ற மகன்களாலும் எந்தவித நன்மை களையும் இராமரால் அனுபவிக்க முடியாத வகையில் ஜாதகத்தில் சூரியனின் நிலை அமைந் துள்ளது.
குருவுக்கு எதிர்ப்புறம் செவ்வாய் இருப்ப தால் சகோதரர்களாலும் இராம ருக்கு பெரிய நன்மைகள் கிடைக்க வில்லை. இராமருக்கு முறையாகக் கிடைக்கவேண்டிய அரச பதவி, நாடு, நகரம் என எதுவும் கிடைக்காமல் போனது. அவரது சகோதரருக்கே கிடைத்தது.
குருவுக்கு எதிர்ப்புறம் புதன் இருந்ததால், அவரது இளைய தாயார் கைகேயி இராமனை நேரடியாக எதிர்த்து, தன் மகன் பரதனுக்கு அயோத்தி மன்னனாகப் பட்டம் சூட்ட வைத்தாள். மேலும் தன் மகன் பரதனுக்கு, மூத்த மனைவியின் மகனான இராமனால் எவ்வித இடையூறும் வரக்கூடாதென்று சாதுர்ய மாக செயல்பட்டு, இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வைத்தாள்.
இத்தகைய நிகழ்வுகள் வாழ்வில் நடை பெறப் போவதையும், நடைபெறப் போகும் காலத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளும்வகையில் கிரகங்கள் ஜாதகத்தில் அமைந்துவிடும். இதனை சரியாகப் பார்த்து பலனைத் தெரிந்துகொண்டால் வினையின் செயலறிந்து, விதியைத் தடுத்து நல்வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளலாம்.
குரு இருக்கும் பகுதியில், குருவுடன் இணைந்த கிரகங்கள் இராமனுக்கு ஏற்படுத்திய பலன்களை அடுத்த இதழில் அறிவோம்.
(தொடரும்)
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/ramayanam-t.jpg)