திலட்சுமியின் தந்தை ஸ்ரீ பிருகு முனிவரின் திருப்பாதம் பணிந்து வரைகிறேன் சில சுக்கிர ரகசியங்களை... இவை மறைந்த மாமேதை 'அதிர்ஷ்டம்' சி. சுப்ரமணியம் தந்த ஞானம்.

நம் அனைவருக்கும் கவர்ச்சி, காம ஈடுபாடு, சுக சுபிட்சம், வசதியான வாழ்க்கையைத் தர கடமைப்பட்டவர் சுக்கிரன்தான். மீன ராசியில் 27 பாகைவரை மட்டுமே சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பார். கடைசி மூன்று பாகையில் உச்சபலன் தருவதில்லை. துணை ஆர்ட்டிஸ்ட்கள் (Medias Extras) பலரது சுக்கிரன் 357 பாகை முதல் 360 வரை உச்சபலமோ ஆட்சிபலமோ பெறாத காரணத்தால், கவார்ச்சிப் பாவையானபோதும் ரேவதி 4-ல் சுக்கிரன் அமைந்தால், சுக்கிர காராகப் பலன்களை தாராளமாக அனுபவிக்க முடிவதில்லை. மீனத்தில் ரேவதி 4-ல் வர்க்கோத்தமம் என்று குழம்பி, எவரும் பலன் சொல்லக்கூடாது. முன்னனி நடிகர்- நடிகைகளுக்குக்கூட சுக்கிரன் 7-ல் ராகுவுடன் இணைந்தால், சமூகக் கட்டுக்குள் உறவுநிலை இருப்பதில்லை. மதம், இனம் மாறிய காதல், கலப்புத் திருமணமே தருகிறது.

d

கன்னியில் நீசமான சுக்கிரன் கடைசி மூன்று பாகையில் அமைந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு புக்தி அந்தர காலங்களில் சுக்கிரக் கருணை மிகப் பிரமாதமாக வழங்கப்படும். ஆசைப்பட்டவை அரங்கேறும். விதிவிலக் காக சிம்மம் மற்றும் கடக ராசிகளில் பகைபெற்ற சுக்கிரனுக்கு தீய (12, 8, 6) ஆதிபத்தியமும் அமைந்தால், சுக்கிர அம்சங்களால் அல்லல், தொல்லைதான். இல்லற மஞ்சதிற்குப் பஞ்சநிலை தரும். பாடுபட்டு கட்டிய வீட்டில் குடியேற முடியாத நிலை தரும். ஆசைகள்- அபிலாஷைகள் தடை, தாமதமாகும்.

Advertisment

2 அல்லது 4-ல் கலைஞர்களின் சுக்கிரனுடன் ராகு சேர நல்ல பணவரவு (Bank Balances), பேச்சாற்றல், பகட்டான வாழ்க்கை தந்தபோதும், இல்லறத்தில் தடம்புரளும் சிலருக்கு ஏழிலும் வேறு பாவிகள் சம்பந்த மானால், மிதுனம், மகரம், கும்ப ராசி- லக்ன இளம்பெண்களின் 6-ஆமிட சுக்கிரன்- ராகு இணைவு பிறர் ஸ்பரிசத்திற்கும் (Touching) சல்லாப உறவுக்கும் ஏங்கச் செய்யும்தான். இவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் சுய வர்க்கப் பரல்களில் 5, 6, 7, 8 பரல் பெற, அதீத சுக சௌகரியங்கள்(Luxurious Comforts), அன்பான துணைவர் (Made For Each Other) அமைந்து நிறைவாழ்வு அனுபவிக்கி றார்கள்.

சூப்பர் யோக ஜாதகமேயானா லும் சுக்கிரன் பங்கப்பட்டுவிட்டால் வாழ்வில் ஒளியில்லை. மன நிம்மதியும் இராது. சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன் தனது காரகப் பலன்களான வசதியான வீடு, கவர்ச்சிகர ஆடை, ஆபரணச் சேர்க்கை போன்ற வகையில் குறைபாடேதான் தருகிறார்.

இல்லறம் இனிப்பதில்லை பலருக்கும். மனம் விரும்பிய உல்லாச வாழ்க்கை அமைவதில்லை. ரிஷபம், துலா லக்னத்தார் தவிர்த்து, மிதுனம், கன்னி, மகரம், கும்ப லக்னங்களுக்கு சுக்கிரன் தனித்தாலும், கேதுவின் சாரமானாலும் சுக்கிர தசை ராஜயோகப் பலன் தரும். திடீர் முன்னேற் றம், அந்தஸ்து, உயர்வு பெற்றவர் பலர்.

Advertisment

கன்னி ராசி சின்னத்திரைக் கலைஞர்களுக்கு 2 , 9-ன் அதிபதி யான சுக்கிரன் 7-ல் உச்சநிலை பெற்று மாளவ்ய யோகத்தால் தனது தசையில் கோடிகளை வழங்கத் தவறுவதில்லை. இது கோடம்பாக்கம் அனுபவம்.

சுக்கிரன் மற்றும் 4-ஆமிட அதிபதியை குரு வலுத்துப் பார்த்தால், காண்பவர் வியக்கின்ற மாளிகை வீடும், உலகம் புகழும், சொகுசு வாகனமும், கத்தை பணமும் மெத்தை சுகமும் என அனுபவிக்க முடியும். குரு- சுக்கிர அந்தர காலங்களில் ஜோதிட அரிச்சுவடியின்படி 4-ஆம் அதிபதி சுக்கிரன் 11, 10, 9-ஆம் ராசிகளில் நின்றால் பலவித வாகனங் களுக்கு அதிபதிதான். பலம் வாய்ந்த சுக்கிரன் 2, 10-ஆம் பாவகங் களில் சம்பந்தம்பெற அடுத்த அம்பானிகூட இவர்கள்தான்.

முடிவுரையாக, வாசகர்களுக்கும் சின்னத்திரை, வெள்ளித்திரை நாயகர்களுக்கும் ரிஷபத்தின் 11-ல் (உச்ச) சுக்கிரன் சுயவர்க்கப் பரலில் 8 பரல் பலத்துடன் அமைந்தவர்களுக்கு பல பட வாய்ப்பு வாசல்தேடி வரும். சிரமம் ஏதுமின்றி சுலபமாக கோடிகளைக் குவிக்கவைத்து சொகுசு வாழ்வைப் பரிசளிப்பார். 3, 7, 11-ல் நின்ற சூரியன், சனி, ராகுவுக்கு சுக்கிரனின் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு விவாகரத்து துயர் இல்லை. மனம் நிறைந்த துணைவரையே இறைவன் ஆசிர்வதிப்பார். சுபிட்ச வாழ்வை சுக்கிரன் அருளட்டும் அனைவருக்கும்!

செல்: 83000 97766