க்னத்தில், தன் சுய ராசியான மகர ராசியில் சனி இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். தைரியசாலியாகத் திகழ்வார். பெயர், புகழ் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவியால் கவலை உண்டாகும். வியாபாரத்தில் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். அரசாங்க விஷயத்தில் லாபம் கிடைக்கும். அதில் நல்ல பெயர் ஏற்படும்.

2-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான கும்பத்தில் சனி இருந்தால் ஜாதகர் பணத்தை சேமிப்ப தில் மிகவும் கவனமாக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல்நலம் நன்றாக இருக்கும். எனினும் சிறிய சிறிய தடைகள் ஏற்படும். கடுமையாக உழைத்து நிறைய பணம் சம்பாதிப்பார். ஜாதகர் பெயர், புகழுக்காக உழைப்பார். சுயநலவாதியாக இருப்பார்.

3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சனி இருந்தால் உடன்பிறந் தோருடன் பல பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகர் தைரியசாலியாகவும், கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். குடும்ப சந்தோஷத்தில் சிறிய குறையிருக்கும்.

Advertisment

bb

4-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சனி நீசமடைகிறது. அதனால், தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். பூமி, வீடு வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். உடல்நலனில் குறையிருக்கும். குடும்ப சந்தோஷத்தில் பிரச்சினை உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பணம் சம்பாதிப்பதிலேயே எப்போதும் மனம் ஈடுபடும்.

5-ஆம் பாவத்தில் தன் நண்பரான சுக்கிரனின் ரிஷப ராசியில் சனி இருந்தால் ஜாதகர் புத்திக் கூர்மையுடன் இருப்பார். பிள்ளைகளால் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் சுயநலவாதியாக இருப்பார். அதிகமாகப் பேசுவார்.குடும்பத்தை நன்கு பராமரிப்பார்.

6-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனி இருந்தால் உடல்நலத்தில் சிறிய குறையிருக்கும். பித்தநோய் ஏற்படும். குடும்பத்தில் இருப்போருடன் கருத்து வேறுபாடு நிலவும். பணத்தை சேமிப்பதில் பிரச்சினை ஏற்படும். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

7-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சனி இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் சந்தோஷம் கிட்டும்.

ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். சொந்தமாக வீடு வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். ஜாதகர் சுயமரியாதையுடன் வாழ்வார்.

8-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சனி இருந்தால் நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலத்தில் சிறிய குறையுண்டு. குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். அரசாங்க வேலைகள் அனுகூலமாக இருக்கும். அதன்மூலம் வளர்ச்சியுண்டாகும். அறிவு பலமாக வேலை செய்யும்.

9-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சனி இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் எதிரிகளை வெல்வார். சண்டை, சச்சரவில் வெற்றி கிடைக்கும். பண வரவிருக்கும்.

10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சனி உச்சமடைகிறது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தில் பல தடைகளைக் கடந்து, வெற்றிபெறுவார். மனைவியுடனான உறவில் சில தடைகள் ஏற்படும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாகவும் தைரியசாலியாகவும் இருப்பார்.

11-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி இருந்தால் நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் அழகான தோற்றம் கொண்டவர்.

மனபலம் இருக்கும். பெயர், புகழ் கிட்டும். எப்போதும் பணத்தைச் சேமிப்பதைப் பற்றிய சிந்தனையுடனே ஜாதகர் இருப்பார். கலைத் திறன் உள்ளவர். நீண்டகாலம் வாழவேண்டுமென்ற ஆவல்கொண்டவர். நல்ல வசதி படைத்தவராக- சந்தோஷமாக வாழ்வார்.

12-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனி இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும்.

ஜாதகருக்கு வெளித் தொடர்புகளின்மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய குறையுண்டு. பணம் சம்பாதிப்பதற்காகக் கடுமையாக உழைக்க நேரும். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். நல்ல பண வரவிருக்கும்.

செல்: 98401 11534