இன்றைய நாளிலும், அண்ணன்- தம்பிகள் ஒருவருக்கொருவர் பாசத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து, அண்ணன் சொல்வதை தம்பி தட்டாமல் கேட்டு செயல் பட்டு வாழ்பவர்கள், போனபிறவியிலும் அண்ணன்- தம்பிகளாகப் பிறந்திருப்பார்கள். இந்தப் பிறவியில் இராமனைப்போல் அண்ணனாகப் பிறந்தவன், போனபிறவியில் லட்சுமணன்போல் தம்பியாகப் பிறந்து அண்ணனுக்கு உதவிகளைச் செய்திருப்பான். போனபிறவியில் தம்பியாகப் பிறந்தவன் இந்தப் பிறவியில் அண்ணனாகப் பிறந்திருப் பான்.
கிருஷ்ணாவதாரம் பற்றி மைத்ரேயருக்கு பராசர முனிவர் கூறிவருகிறார்.
"வசுதேவன், தேவகியுடன் கிருஷ்ணர் ஒன்றாக வசித்தால், கம்சனால் தனது தாய்- தந்தையருக்கு கஷ்டங்கள் உண்டாகும் என்பதை அறிந்து, அவர்களைவிட்டு வேறிடத்தில் வசித்தால் கம்சனால் துன்பம் ஏற்படாது என்ற எண்ணம்கொண்டு, தன் சகோதரன் பலராமன் வசிக்கும் ஆயர்பாடியில் பெற்றவர்களைப் பிரிந்துவந்து வசித்தார்.
இன்றையநாளில் எந்த வேலையையும் செய்யத் தெரியாதவனை, "நீ மாடு மேய்க்கத்தான் சரியானவன்' என்று மிகவும் தாழ்வாகக் கூறுவார்கள். மக்கள் மிகவும் தாழ்ந்த தொழில் செய்பவர்கள் என்று கூறுவது ஆடு, மாடு மேய்ப்பவர்களைத்தான். வேதம், சாஸ்திரம், மதம், சாதி, இனமென்று மக்களை வேறுபடுத்தும் சனாதன தர்மம், ஆடு, மாடு மேய்பதை, சூத்திரத் தொழில் என்றும், இந்தத் தொழிலைச் செய்பவர்கள் தீண்டத்தகாத மக்கள் என்றும் கூறுகிறது.
வேதம், சாஸ்திரம், சனாதன தர்ம நூல்கள் கூறும் சூத்திர சாதியில், கிருஷ்ண ரும் பலராமரும் சூத்திர சாதியைச் சேர்ந்தவர் களாகவே வளர்ந்தார்கள்; வாழ்ந்தார்கள். எந்தக் கடவுளும் சனாதன தர்மக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதுமில்லை; இவை கூறும் கருத்துகளை கடைப்பிடிப்பதுமில்லை. இந்த பூமியில் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவே, மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் சூத்திரனாக வாழ்ந்து நிரூபித்தார். கடவுள் சாதி, மதம், இனம் என மக்களைப் பிரித்து வைக்க வில்லை. கடவுள் பெயரைச் சொல்லிப் பிழைப்பவர்கள்தான் மக்களிடையே பிரிவினை, பேதத்தை உருவாக்கி வைத்தார்கள்.
கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர், பதினாறா யிரத்து நூறு பெண்களை மணந்தார். இந்த மனைவிகள்மூலம், லட்சத்து எண்பதினாயி ரம் குழந்தைகளைப் பெற்றார். இந்தக் குழந்தைகள்மூலம் அனேகமாயிரம், கிளைகள் மூலம் யாதவ மக்களை விருத்திசெய்தார். அதனால் யாதவ குல புத்திரர்களை, மக்களைக் கணக்கிட்டு சொல்லமுடியாது.
யாதவ குலத்துப் பிள்ளைகளுக்கு கல்வி, வில்வித்தை, போர்க்கலை என சகல கலைகளையும், வித்தைகளையும் கற்பிக்க எண்பத்தெட்டு லட்சம் குருமார்களை நியமித்தார். பதினாயிரம் லட்சம் யாதவ குலத்தினர், கிருஷ்ணரின் வம்சத்தில் தோன்றினார்கள்.
இன்றையநாளில் யாதவர், கோனார் என்று கூறிக்கொள்ளும் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் கிருஷ்ணரின் வம்சவழியில் பிறந்த வம்ச வாரிசுகள் ஆவார்கள். இவர்களுக்கே கிருஷ்ணரை தன்னைச் சேர்ந்தவர் என்று கொண்டாட, கூறிக்கொள்ள உரிமையுண்டு. இவர்களே உண்மையான வைஷ்ணவர்கள் ஆவார்கள் என்பது விஷ்ணு புராணக்கூற்று.''
"பராசர முனிவரே, மகாவிஷ்ணு தன்
அவதாரங்களில் உண்டான பித்ரு- புத்திர சாபத்தை எவ்வாறு நிவர்த்தி செய்தார்?''
"மைத்ரேயா, பித்ரு சாபம் பெற்றவர்கள் தனது முற்பிறவியில், பெற்ற தாய்- தந்தையை வயது முதிர்ந்த காலத்தில் அன்னம், தண்ணீர், ஆடை, இருப்பிடம் தந்து காப்பாற்றாமல், பசியும் பட்டினியுமாய் அலையவிட்டு அவர்களை கஷ்டப்பட வைத்ததால், பெற்றவர்களே மனம் வெறுத்துவிட்ட சாபம் பித்ரு (தந்தை, பாட்டன்) சாபமாகும்.
முற்பிறவிகளில் பெற்றவர்கள்விட்ட சாபத்தால் இப்பிறவியில் தந்தையின் பாசம் கிடைக்காது. பூர்வீக சொத்துகளால் நன்மை இராது. தந்தை பகையாவான். பெற்றவர்களைப் பிரிந்து வாழநேரிடும். பெற்ற தாய்- தந்தையே புறக்கணித்து ஒதுக்கிவிடுவார்கள். தந்தைவழி உறவுகளால் எந்த நன்மையும் இராது. சொந்த இனத்து மக்களாலும் நன்மை, உதவி இராது.
பகவான், தனக்கு ஏற்பட்ட பித்ரு சாபத்தை அனுபவித்து நிவர்த்திசெய்ய, தாய்- தந்தையைவிட்டுப் பிரிந்து, பெற்றவர்கள் பாசமில்லாமல், மூன்றாம் மனிதர்களான மாற்று இனத்தவர்களான யாதவர்களுடன், ஆயர்பாடியில் நந்தகோபன், யசோதையின் ஆதரவில் வாழ்ந்து, பித்ரு சாபப்பலனை அனுபவித்துத் தீர்த்தார்.
முந்தைய அவதாரங்களில பல அரசர்களைக் கொன்று, அவர்களின் குழந்தைகளுக்கு தந்தைப் பாசம் கிடைக்காமல் செய்ததால், அந்தக் குழந்தைகள் விட்ட வாக்கு புத்திர சாபமாக கிருஷ்ணருக்குத் தொடர்ந்து. இந்த அவதாரத்தில் கிருஷ்ணருக்குப் பிறந்த பிள்ளைகளால் கிருஷ்ணர் எந்த நன்மையையும், சுகத்தையும் அனுபவிக்கவில்லை. ஆயுள்வரை தன் அறிவு, திறமை, உழைப்பால் அவரே வாழ்ந்து புத்திர சாபத்தை நிவர்த்திசெய்தார்.
புத்திர சாபம் உள்ளவர்கள் வாழ்க்கை யில், புத்திரப் பேறு குறையக்கூடும். பெற்ற பிள்ளைகளால் நன்மை இராது. பிள்ளை பகையாவான். பிள்ளைகளால் ஒதுக்கப்படுவான். பிள்ளைகள் சம்பாதித்த சொத்து பணத்தில் சாப்பிட முடியாது. பிள்ளையைப் பிரிந்து வாழநேரிடும். தந்தை உயிருடன் இருக்கும்போதே பிள்ளை இறக்க நேரிடும். கிருஷ்ணர் உயிருடன் இருக்கும்போதே அவரின் பிள்ளைகள் இறந்து விட்டனர். அதனால் புத்திர சோகத்தையும் அனுபவித்தார். கிருஷ்ணர் தன் கடவுள் சக்தியாலோ அல்லது பூஜை, ஹோமம், வழிபாடு, பரிகாரங்கள் செய்தோ தனது பித்ரு, புத்திர சாபத்தைத் தீர்த்துக்கொள்ளவில்லை.
மைத்ரேயனே, சகோதர உறவைப்போல், சகோதரர்கள் பகையாவதற்கும் காரணம் உண்டு. அதனையும் தெரிந்துகொள்.
இராமாவதாரத்தில், வானர அரசன் வாலி அண்ணனாகவும் சுக்ரீவன் தம்பியாகவும் கிஷ்கிந்தையில் வாழ்ந்தார்கள். அப்போது அண்ணன் வாலியினால் தம்பி சுக்ரீவன் விரட்டப்பட்டு, பல துன்பங்களுக்கு ஆளா னான். கிருஷ்ணாவதாரத்தில் அண்ணன் வாலி தம்பி அர்ஜுனனாகவும், தம்பி சுக்ரீவன் அண்ணன் கர்ணனாகவும் குந்திதேவிக்கு மகன்களாகப் பிறந்து சகோதரர்களானார்கள்.
கிருஷ்ணாவதாரத்தில் முற்பிறவி சகோதரப் பகையால், அண்ணன் கர்ணன், தம்பி அர்ஜுனனால் கொல்லப்பட்டான். முற்பிறவி யில் அண்ணனாகப் பிறந்து தம்பிக்குச் செய்த பாவத்தால் அடுத்த பிறவியில் தம்பியால் அண்ணன் கொல்லப்பட்டான். இது முற்பிறவி சகோதர சாபப்பலன்.
முற்பிறவியில் அண்ணனாகப் பிறந்தவன், சொத்தை அபகரித்து தம்பியை ஏமாற்றினால், இந்தப் பிறவியில் தம்பி அண்ணனாகப் பிறப் பான். அண்ணனாகப் பிறந்தவன் தம்பியாகப் பிறந்துவிடுவான். அண்ணன் தம்பிக்கு சொத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிடுவான்.
முற்பிறவியில் தம்பியாகப் பிறந்தவன் தனது அண்ணனுக்குரிய சொத்துப் பங்கினைக் கொடுக்காமல், அண்ணனை ஏமாற்றி வாழ்ந்திருந்தால், இப்பிறவியில் அண்ணன்- தம்பியாகவும், தம்பி- அண்ணனாகவும் பிறப் பார்கள். தம்பி- அண்ணனுக்கு சொத்துப் பங்கினைத்தராமல் ஏமாற்றிவிடுவான். அண்ணன் குடும்பம் கஷ்டப்படும். இது பூர்வஜென்ம சகோதர சாபமாகும். ஒருவன் வாழ்க்கையில் ஏற்படும் இந்த நிலைக்கு, ஜாதகமோ கிரகங்களோ காரணமல்ல. முன்வினை சகோதர சாபம்தான் காரணம்.
ஒரு குடும்பத்தில் அண்ணன்- தம்பி ஒற்றுமையாக வாழ்ந்தால் முன்ஜென்மத்தில் ஒருவருக்கொருவர் பாசத்துடன் இருந்தார்கள் என்றும், சகோதரர்கள் பகையுடன் வாழ்ந்தால் முன்ஜென்மத்திலும் ஒருவரையொருவர் ஏமாற்றி பகையாக வாழ்ந்தார்கள் என்று அறிந்துகொள்ளலாம்.''
"பராசரரே, கிருஷ்ணர் அசுரர்களை அழித்து, பூமி பாரத்தை எவ்வாறு தீர்த்தார் என்பதைப் பற்றிக் கூறுங்கள்.''
(தொடரும்)
செல்: 99441 13267