சென்ற வாரம் குரு வட்டம் பற்றிய தகவல்கள் குறிப்புகளைப் பார்த்தோம்.

இந்த வாரம் ராகு- கேது வட்டம் பற்றிய சில தகவல்களையும் ஒரு பிரசன்ன அனுபவத்தையும் பார்க்கலாம். குரு வட்டம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும். ராகு- கேது வட்டம் என்பது 18 ஆண்டுகள் கொண்டது. சனி வட்டம் என்பது 30 ஆண்டு காலமாகும். அனுபவரீதியாக பலர் குரு மட்டுமே நன்மை செய்வார். ராகு- கேதுக்கள் சனிபகவான் தீமையை வழங்குவார்கள் என்ற ஒரு தவறான வதந்தி உள்ளது. அதில் ஒரு 50 சதவிகிதம் மட்டுமே உண்மை. ஆனால் இழந்த இன்பங்களை மீட்டுக் கொடுக்க குருவைவிட ராகுவே சிறந்தவர். சாதாரண மனிதன் ஒருவன் சாதனையாளராக மாறுகிறான் என்றால் அங்கு ராகுவே முன்னணியில் நிற்பார்.வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளவன் ஆணவத்தால் ஆடினால் அவனை அடக்க ராகு தயங்கமாட்டார். முடி சார்ந்த மன்னனும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே என்பதை உணர்த்துபவர் கேது.

ராகு லௌகீகம் என்றால் கேது மோட்சம் ஆன்மிகம். ராகு அழிவு கிரகம். கேது தடை கிரகம். கண் இமைக்கும் நேரத்தில் நன்மையை தீமையாகவும் தீமையை நன்மையாவும் மாற்றக்கூடிய சக்தி படைத்த கிரகம் ராகு. அதேபோல் ஒருவரின் விருப்பத்தை கேதுவும் நிறைவு செய்வார். ஆனால் விருப்பத்திற்கான தகுநிலையை வழங்கி தடை, தாமதத்தை தந்து காலதாமதமாகப் பலன் தருபவர் கேது. எதிரும் புதிருமான பலன்களைத் தரும் ராகு- கேதுகளுடன் கோட்சாரம் மற்றும் தசாகாலம் 18 வருடம். ராகு மற்றும் கேது என்பது நம் முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்துவரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தைவழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய்வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.

ss

அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய்வழி பாவத்தைக் குறிக்கிறார்.

ராகு சூரியனை பாதிப்பதால், தந்தைவழி முன்னோர்களின் பாவங்களை உணர்த்துவார்.

இந்தப் பதினெட்டு வருடகால தசா வருடம் மற்றும் கோட்சார காலத்தில் மிகப் பெரிய தார்பரியம் உண்மைகள் பொதிந்து உள்ளது. ஜோதிடம் என்பது அறிவியல் சார்ந்த நிகழ்வு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒர் ஆணோ- பெண்ணோ 18 வயது நிறைவடையும் காலத்தில்தான் அனைத்து உடல் உறுப்புகளும் முழுமையாக வளர்ச்சி அடையமுடியும். 18 வயதில்தான் அரசாங்கம் ஓட்டுரிமை வழங்குகிறது. ஏனெனில் 18 வயதில்தான் ஒருவன் முழுமையாக சிந்தித்துச் செயல்பட தயாராகிறான். அதனால்தான் அரசாங்கம் 18 வயதில் ஓட்டுரிமையை வழங்குகிறது. அரசின் சட்டப்படி பெண்ணின் திருமண காலம் 18 வயது என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இப்படி 18 வயதிற்கும் ராகு- கேதுவிற்கும் பல நெருங்கிய சம்பந்தங்கள் உள்ளது.

பொதுவாக 18 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் அடியெடுத்து வைக்கக்கூடிய காலமாக இருக்கும். ஒவ்வொரு 18 வருட முடிவிலும் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு மறக்க முடியாத சம்பவம் உண்டு. ஏன் வெகு சிலருக்கு மறுபிறப்பு எடுப்பதற்கு இணையான சம்பவங்கள் நடக்கும். சிலரின் வாழ்க்கை முழுமையாக மாறும். சுமார் 40 வருடங்களுக்கு முன்புவரை பெரும்பான்மையாக பெண்களுக்கு 18 வயதில் திருமணம் நடந்துதான் பிறந்து வாழும் சூழ்நிலையில் இருந்து வேறு சூழ்நிலையில் வாழ துவங்கியிருக்கிறார் கள். இப்படி பருவத்திற்கு ஏற்ற வாழ்க்கை யில் மாற்றத்தை தரக்கூடியவர்கள் ராகு- கேதுக்கள். வாழ்வின் முதலாவது மற்றும் அடிப்படை நிலை குழந்தைப் பருவத்தில் தட்டுத்தடுமாறி நடை பழகுவதில் தொடங்கி சமுதாயத்தை எப்படி எதிர் கொள்வது என பெற்றோர் மூலம் புதிது புதிதாக பல விஷயங்களை கற்றுக் கொள்கின்ற காலம். 18 வயதுவரை தாய்- தந்தை கற்றுக்கொடுக்கும் நல்ல போதனைகளே மனிதனின் இறுதிக் காலம் வரைக்கும் தேவையான ஞானத்தை கொடுக்கும் என்பதால் 18 வயதுவரை தாய்- தந்தையின் அன்பு மிக முக்கியம்.வாழ்வின் அடித்தளமான குழந்தைப் பருவம் ஒவ்வொரு வருக்கும் சிறப்பாக அமைய வேண்டியது அவசியமாகும்.

இந்த குழந்தைப் பருவம் சரியாக அமையாத பலரின் வாழ்க்கை முதல் காலகட்டத்தில் துவங்கி வாழ்நாள் இறுதிவரை மீளமுடியாத பல தாக்கத்தைத் தருகிறது. இந்த காலத்தில் சில உயர் கல்விக்காக பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தங்கி படிக்கிறார்கள். தற்போதும் சிலர் 18 வயதில் தவறான காதல் திருமண வாழ்க்கையை தேர்வு செய்து அவஸ்த்தையில் வாழ்கிறார்கள்.

இரண்டாம் நிலை (இது 19 வயதுமுதல் 36 வயதுவரையான காலகட்டம்)

டீன் ஏஜ் எனப்படும் வளரிளம் பருவத்தை நெருங்கும் சமயம் குழந்தைப் பருவத்திலிருந்து இரண்டாவது நிலையை அடியெடுத்து வைப்பார்கள். டீன் ஏஜ் - முடிவில் வாழ்வின் இரண்டாம் நிலையில் அடியெடுத்து வைக்கும் காலம். இதில் 16 வயதுமுதல் 25 முப்பது வயதுவரை தொடரும் இப்பருவத்தை நினைத்தாலே இனிக்கும் பருவமெனச் சொல்லலாம். புதிய நண்பர்களின் அறிமுகம், அவர்களுடன் கேலி, கொண்டாட்டங்கள், நள்ளிரவு விருந்துகள், வாலிபமிடுக்குடன் தனக்கு எல்லாம் தெரியும் என வாழ ஆரம்பிக்கும் காலம். இப்பருவத்தில்தான் நல்லது எது கெட்டது என புரிந்துகொண்டு தவறுகளிலிருந்து பாடங்கள் கற்கவேண்டிய காலமாகும். புத்தியுடையவன் பலவான் என்பது பழமொழி. சுய ஜாதகத்தில் புதன் பலம்பெற்றவன் தன் புக்திசாலித்தனம் நிறைந்தவன். எந்த சூழ்நிலையிலும் தன் புக்தியால் தன்னை தற்காத்துக் கொள்வான். சுய ஜாதகத்தில் புதன் நன்றாக இருக்கும் ஜாதகன் முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சிபெறுவான். அதற் கான அஸ்திவாரம் அமையும் காலம் இது. தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை என வாழ்க்கையின் அனைத்து முக்கியமான நிகழ்வுகளும் அவரவரின் தசா புக்திக்கு ஏற்ப நடக்கும் காலம். இந்த இரண்டாம் சுற்று முடிவில் 90 சதவிகிதம் தொழில் நஷ்டம், வேலை இழப்பு, திருமண வாழ்க்கை தோல்வி, விபத்து அல்லது வாழ்வில் மீள முடியாத மிகப்பெரிய இழப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அதிகப்படியாக இருக்கும். 18 வயதில் திருமணம் நடந்தவர்களுக்கு 34 முதல் 36 வயதிற்குள் மறு விவாகம் நடக்கும்.

கால சர்ப்ப தோஷமுள்ளவர்கள் ஜாதகம் இரண்டாவது சுற்று பிறகு பல நன்மைகளைத் தரும். ராகு- கேதுக்கள் ஒருமுறை ராசிக் கட்டத்தை வலம்வர 18 ஆண்டுகளாகும். ஜனனம் முதல் இரண்டு முறை ராசிக் கட்டத்தை வலம் வந்தபிறகே தோஷம் நிவர்த்தியாகும். (18ஷ்2=36).

36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்திலுள்ள யோகப் பலன்களைத் தருகிறது. கல்வி, திருமணத் தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிஷ்டமின்மை, குடும்பத்தில் குழப்பம், உறவினர் களுடன் ஒற்றுமையின்மை என சில இடையூறுகளையும், தடை, தாமங்களையும் காலசர்ப்ப தோஷம் ஏற்படுத்தி மன நிமைதியை இழக்கச் செய்யும். 18-36 வரையான காலத்தில்தான் மனிதனுக்கு உயர்கல்வி, உத்தியோகம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும். ஜாதகருக்கு சுப பலன்களை உரிய காலத்தில் தாராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரப்படுவதால் காலசர்ப்ப தோஷம் எனப்படுகிறது.

மூன்றாம் நிலை (இது 37-54 வரையான காலம்)

கடந்தகால இழப்பிலிருந்து தன்னை நிலைநிறுத்த முதல் படியில் இருந்து மீண்டும் வாழ்க்கையை துவங்குவார்கள். தான் பெற்ற அனுபவத்துடன் பல அனுபவங்களை பெற்றோர்களின் ஆலோசனையுடன் மீண்டும் சமுதாயத்துடன் போராடுவார்கள். பிரச்சினைகள் வரவரத்தான் மனிதன் தெளிவை நோக்கி முன்னேற முடிகிறது. சிற்றின்ப நாட்டத்தை குறைத்து தொழில், வேலையில் வாழ்வாதாரத்தை தேடி அலையும் மிக முக்கியமான காலம். மனிதன் தன் திறமை களை ஆற்றல்களை வெளிப்படுத்தி வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம்.

மூன்று, நான்கு, ஐந்தாம் நிலைகள்

அடுத்த இதழிலும் தொடர்கிறது!

செல்: 98652 20406