மூன்றாம் நிலை தொடர்கிறது...

(இது 37-54 வரையான காலம்)

சிறு வயதில் சகோதரர்களிடம் சிறு மனக்கசப்பு இருந்தாலும் உடன்பிறந்தவர்களுடன் அனுசரித்து வாழ்வதே சிறப்பு என்ற அனுபவ பாடத்தை உணரும் காலம். பெண்கள் கணவரை முழுமையாக புரிந்து கொள்ளும் காலம். மண், பொன், பெண் ஆசை ஏற்படும் காலம் என்பதால் வீடு, வாசல், வாகனம் என வாழ்விற்கு தேவையான பொருட்களை வாங்க ஆர்வம் ஏற்படும். தான் பெத்த பிள்ளைகளை கரை சேர்க்கப் போராடும் காலம். இந்த 54 வயது முடிவு காலத்தில் பலருக்கு கடுமையான உடல் நல பாதிப்பு இருக்கும். சுயஜாதக ரீதியான தசாபுக்தி சாதகமாக இருப்பவர்கள் பிள்ளைகளின் திருமணம் போன்ற சுப விசேஷங்கள் செய்து மகிழ்வார்கள். சாதகமற்றவர்கள் மறுபடியும் விதியின் பிடியில் சிக்குவார்கள். இதில் 36 வயதை கடக்கும்போது அசௌகரியத்தை சந்தித்தவர்கள் 54 வயதில் இன்பத்தை அனுபவிப்பார்கள். 36 வயதில் இன்பத்தை அனுபவித்தவர்கள் 54 வயதை நெருங்கும்போது போராட்டத்தை சந்திக்க நேரிடும். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டில் வாழ்ந்த வர்கள் பூர்வீகத்தில் வந்து செட்டிலாக வேண்டும் என்ற மனநிலையை அதிகரிக்கக்கூடிய காலம்.

Advertisment

நான்காம் நிலை

(இது 54 முதல் 72 வயது வரையான காலகட்டம்)

ஒரு உயிரை ஜனிக்க செய்வது சூரிய ஒளி என்றால் உயிரை தாங்கும் உடல் சந்திரன். இந்த இந்த கால கட்டத்தில் பலர் தாய்- தந்தை வாழ்ந்த பூர்வீகத்தில் வாழ விரும்புவார்கள். பிறந்த மண்ணில் முன்னோர்களின் சுவாசக் காற்றில் தன் சுவாசத்தை கலக்க மனம் ஏங்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பலருக்கு தலைதூக்கும். இதுவரை நட்பு பாராட்டிய உறவுகள் பூர்வீக சொத்துக்கு உரிமை கொண்டாட ஆரம்பித்தவுடன் தனது சுய ரூபத்தை வெளிப்படுத்துவார்கள்.

Advertisment

தன் கணக்கை கூட்டி கழித்து லாப நஷ்டங்களை மனிதன் பார்க்கும் காலம். தொழில், உத்தியோகத்திலிருந்து விடுபட வேண்டிய காலம்.

இதுவரை சம்பாதிக்க தவறியவர்களுக்கு பிள்ளைகளின் கல்விக் கடன், மகளின் திருமண செலவு, மனைவியின் நச்சரிப்பால் வங்கியில் வீட்டுக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சிலர் பூர்வீகத்திற்கு செல்லமுடியாத சூழ்நிலை இருந்தால் தனது பிள்ளைகளுடன் வயோதிகத்தில் அவர்கள் வசிக்கும் ஊருக்கு நாட்டுக்கு சென்று வாழவேண்டிய நிலையையும் உருவாக்கும். இந்தக் காலத்தில் அனைவரையும் அனுசரித்துப்போகும் கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர். குடும்பத்திற்கு பாரமாக இருக்கி றோம் என்ற எண்ணம் மிகும். ஒரே இடத்தில் பொழுதைக் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஓரளவு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் காசி, இராமேஸ்வரம், மானசரோவர் போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று முக்திக்கு முயற்சி செய்வார்கள். சிலர் தள்ளாத வயதிலும் தனது பேரப் பிள்ளைகளை தான் பெற்ற பிள்ளைகளின் நலனுக்காக வளர்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மிகச்சுருக்கமாக சூழ்நிலை கைதியாக வெறுப்புடன் வாழ்வார்கள். பல குடும்பங்களில் வயோதிகர்களை வீட்டுக் காவலர்களாகவே பயன்படுத்துகி றார்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. இன்னும் ஒருபடிமேல் சிலர் வீட்டில் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். இது சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு பார்க்கப்பட்ட பிரசன்னம். 54 வயதான ஒரு நபருக்கு பார்க்கப்பட்ட பிரசன்னம்.

ss

தான் பூர்வீகத்தில் சென்று வாழமுடியுமா?

பூர்வீக சொத்து அவருக்கு கிடைக்குமா என்று பார்க் கப்பட்ட பிரசன்னம். ஒருவர் பூர்வீகத்தில் சென்றுவாழ ஐந்தாமிடம் பலம் பெறவேண்டும். ஐந்தாம் அதிபதி 6, 8, 12-ஆம் பாவங்களுடன் சம்பந்தப்பட்டால் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டில் வாழ்கிறார் கள். ஐந்தாம் அதிபதி அல்லது ஐந்தில் நின்றால் கிரகம் வக்ரம் பெற்றால் அந்திம காலத்தில் பூர்வீகத்தை வந்தடைகிறார்கள். ஐந்துக்குடையவன் சர ராசியிலோ உபய ராசியிலோ நின்றால் பூர்வீகத்திற்கு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

26-8-2024 அன்று பகல் 12.34-க்கு ஆன்லைனில் பார்க்கப்பட்ட பிரசன்னம். தனது உடல்நிலை காரணமாக தன்னால் நேரில் அலைய முடியாது என்று ஜாதகர் கூறியதால் போன்மூலம் கேள்வி கேட்ட நேரத்தை வைத்து பார்க் கப்பட்ட பிரசன்னம்.

நாள்: 26-8-2024 (ஆவணி 10)

கிழமை: திங்கள்

நட்சத்திரம்: கிருத்திகை

திதி: தேய்பிறை அஷ்டமி

யோகம்: வியாகாதம்

பிரசன்னம் கேட்ட நேரம் விருச்சிக லக்னம்.

லக்னத்தை சனி குரு சந்திரன், செவ்வாய் பார்த் தது. அதாவது சனியின் பத்தாம் பார்வை (கர்ம பார்வை) விதி என்று கூறப்படும் லக்னமான விருச்சிகத்தை பார்த்தது. லக்னாதிபதி செவ்வாய் பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி குரு மற்றும் பாக்கியாதிபதி சந்திரனும் இணைந்து விருச்சிக லக்னத்தைப் பார்த்தது. 1, 5, 9 பூர்வீகம் செல்வ தற்கு உகந்த கிரக இணைவு என்றா லும் ஒன்பதாம் அதிபதி சந்திரன் பாதகாதி.

பாக்கியமே பாதக மானதால் ஆறு மாத காலத்திற்குப் பிறகு மீண்டும் பிரசன் னம் பார்க்கக் கூறப் பட்டது. பாக்கி யமே ஜாதகருக்கு பாதகமான கிரக நிலவரம் என்பதால் பூர்வீகத்திற்கு தற் போது செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டது. பூர்வீகத் தைப் பற்றி கூறக்கூடிய காரக கிரகமான சனி பகவான் கோட்சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரித் தார். மேலும் அன்றைய லக்னத்தை பாதகாதி பதியாக சந்திரன் பார்த்தால் ஜாதகருக்கு ஆறுமாத காலம் விரும்பிய மாற்றத்தை தரக் கூடிய காலம் அல்ல. இதில் சனி மற்றும் சந்திரனின் பார்வை லக்னத்தில் பதிந்தது சில விபரீதங்களை உணர்த்தியது. மேலும் 54 வயதில் சுய ஜாதக ராகு- கேதுவும் கோட்சார ராகு கேதுவும் ஒன்றை ஒன்று கடக்கும் காலம் என்பதால் சிறிது கால அவகாசத் திற்கு பிறகு மீண்டும் பிரசன்னம் பார்க்கக் கூறப் பட்டது. ஒருவர் கேட்டது கிடைக்கவில்லை என்றால் கெட்டது கிடைக்கவில்லை என்று நம்மை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஐந்தாம் நிலை

(இது 73 - 90 வயது வரையான காலம்)

தற்போதைய காலகட்டத்திலுள்ள உணவு முறை மற்றும் முறை தவறிய கலாச்சார மாற்றம் போன்றவற்றால் யாருடைய ஆயுளுக்கு உத்தர வாதம் வழங்கமுடியாது. அதே நேரத்தில் 70 வயதிற்குமேல் வாழ்பவர்கள் எல்லாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள்.

தன் வாழ்நாள் முழுவதும் தனது பெற்றோர் களுக்கும் மனைவி மக்களுக்கும் உரிய கடமைகளை செய்து யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்தால் இந்த உலகிலேயே பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகுந்தவர் என்று கூறவேண்டும். அப்படி மனிதர்களும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந் தாலும் எவ்வளவு நல்லவராக இருந் தாலும் ஏமாற்றங் கள், துரோகங்கள், ரோகங்களால் அவதி யுறும் காலம். இது வரை பாடுபட்ட நம்மை மனைவி, மக்கள், உற்றார்-

உறவினர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ என நினைக்கும் காலம். இந்தப் பருவத் தில் வெகுசிலரே வாழ்க்கைத் துணையுடன் இணைந்து வாழ்கிறார்கள். பலர் தங்களது இளமைக்கால நினைவுடன் வாழ்க்கைத் துணையை மனதில் சுமந்து வேண்டா வெறுப் பாக வாழ்கிறார்கள். தனது வாழ்நாளில் செய்த தவறுக்கு பிரபஞ்ச சக்தியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்காத மனிதர்களே இருக்கமுடியாது.

ஒவ்வொரு 18 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தை மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்துபவர்கள் ராகு- கேதுக்கள். சுய ஜாதகத்தில் தசாபுக்தி சாதகமானால் அது இன்பமான சம்பவமாக இருக்கும். தசாபுக்தி சாதகமற்று இருந்தால் ஆறாத காயமாக தொடரும். இனி அடுத்த வாரம் சனி வட்டம் பற்றி பார்க்கலாம்.

தொடரும்...

செல்: 98652 20406