சுமார் 32 வயதுடைய பெண் ஒருவர், தனது மூன்று வயது குழந்தையுடன், நாடி பலன் காணவந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷயமாக பலன் கேட்கவேண்டும்' என்றேன்.
அந்தப் பெண், "நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவள், என் பிரச்சினைகளுக்கு, அகத்தியர் தீர்வு கூறுவரா?'' என்றாள்.
சைவத்தமிழ் சித்தர் பெருமக்கள், சைவத் தமிழ் சித்தாந்த கருத்து, கொள்கைகளைக் கூறி, அதனைக் கடைப் பிடித்து, மக்களை வாழச் சொன்னவர்கள், வடபுலத்தாரின் ஆரிய வேதம்தான், மதம், சாதி, இனம் என மக்களை பிரித்துவைக்கும் வேத கொள்கைகளை கூறுவது.
அகத்தியர் முதலான, சித்தர்கள் 18 பேரும், வேதாந்தம் கூறும், சாதி, மதக் கொள்கைகளை மறுப்பவர்கள். பாம்பாட்டிச் சித்தர் தனது ஒரு பாட-ல்,
"சாதி வெறியினில் தீயை வைப்போம்
சந்தை வெளியில் கொடியை நாட்டுவோம்.''
சாதி, மதக் கொள்கைகளை தீயைவைத்து எரிப்போம், மக்கள் எல்லாரும் ஓர் குலம், ஓரினம் என்று சமுதாயத்தில், சமதர்மக் கொடியை ஏற்றுவோம் என்கிறார். இவரைப் போன்றே அனைத்துச் சித்தர்களும் வேதக்கொள்கை, கருத்துகளை மறுத்து ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siddhar_64.jpg)
அகத்தியர், ஒருவரின் உடல், உயிர், ஆன்மா, அவரது முற்பிறவி ஊழ்வினை, பாவ- சாப நிலையை அறிந்து, பலன் கூறுவாறே தவிர, தன்னை நாடி வருபவர்களிடையே, சாதி, மதம், இனம் என்று பேதம், பிரிவினை பார்த்து, பலன் கூறுவது இல்லை. நீங்கள், தயங்காமல் உங்கள் பிரச்சினைகளைக் கூறுங்கள் என்றேன்.
அந்தப் பெண், "எனக்குத் திருமணம் நடந்து, ஐந்து வருட மாகின்றது. எனது கணவர் ஒரு கம்பெனியில் (ஐ.டி) மென் பொறி யாளராக வேலை செய்கின்றார்.
அவர் மாதா, மாதம், வாங்கும் சம்பளப் பணத்தை, அப்படியே என்னிடம் கொடுத்து விடுவார்.
அவருக்கு ஏதாவது செலவுக்கென்றால், தேவையான பணத்தை மட்டும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொள்வார்.
குடும்பத்திற்கு தேவையான உணவு, உடை, மற்ற தேவைகள் என அனைத்தையும், செய்து, குடும்ப நிர்வாகம் முழுவதையும் நான்தான் பார்த்துக்கொள்கின்றேன்.
எனக்கு துணையாக எந்த உதவியையும், வேலையையும் வீட்டில் செய்யமாட்டார். என்னையும், என் குழந்தையையும் வெளியில் எங்கும் கூட்டி செல்லமாட்டார். வீட்டில் டி.வி. அல்லது லேப்டாப் பார்த்துக்கொண்டு இருபார். சாப்பிடுவார்.
தூங்குவார். இதுதான் அவரின் வழக்கமான செயல்.
குடும்பத்தில், நான் ஒரு இயந்திரம்போல், செயல்பட்டு வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. மனைவி, குழந்தை, குடும்பம் என, என் கணவர் எந்த பொறுப்புமில்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்? அவரின் இந்த நிலையில் மாற்றம் வருமா என்பதை அறிந்துகொள்ளவே, அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
ஓலையில் அகத்தியர் பலன் கூறத் தொடங்கினார். இவளும், இவள் கணவனும், முற்பிறவியிலும் கணவன்- மனைவியாக வாழ்ந்தவர்கள். சென்ற பிறவியில், இவள் கணவன், இவளுக்கு மனைவியென்று மரியாதை தராமல், இவளையும், குழந்தையையும், உணவு, உடை, தந்து கவனிக்காமல், தனது தந்தை, தாய், உடன்பிறந்தவர் கள், உறவினர்கள்தான் முக்கியம் என்று அவர்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்துவாழ்ந்தான். மனைவி, குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒரு குடும்பத் தலைவனாக இருந்து செய்ய வில்லை.
சென்ற பிறவியில், தனது கணவனாலும், கணவன் குடும்பத் தினராலும், எந் மரியாதையும், உதவியும், கிடைக்காததால், தன் பிறந்த வீட்டிற்கே சென்று, அவர்கள் பாதுகாப்பில், தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து, சம்பாதித்து, தன் குழந்தையையும் காப்பாற்றி வளர்த் தார். அந்த பிறவியில், தன் கணவர், தன்னை மதிக்க வேண்டும், பணக் கஷ்டம், வறுமை நீங்க வேண்டும், கணவன் குடும்பத்தினரால், உண்டாகும் சிரமம், கஷ்டங்கள் தீரவேண்டும் என இன்னும் பலவிதமாக தனக்குள்ள குறைகள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று, இவள் வணங்கும் இறை தூதர் அல்லா விடம், அனுதினமும் மண்டியிட்டு பிரார்த்தனை செய்து வந்தாள். அந்த பிறவியில், இவள் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறவில்லை.
முற்பிறவி கணவனையே, இப்பிறவியிலும், கணவனாக அடைந்தாள். கணவன் இவளை மதித்து, குடும்பத்தில் முக்கியத்துவம் தந்து, பணம் கொடுத்து விடுகின்றான்.
பணக்கஷ்டம் இல்லை. கணவன் வீட்டார் தொல்லையில்லா மல் தன் கணவன், குழந்தை என, இவள் அவர்களை விட்டுப் பிரிந்து தனியே வசித்துவருகின்றாள். வீட்டில் அனைத்து செயல்களும், இவள் விருப்பப்படி, இவள் அதிகாரத்திலேயே நடந்துவருகின்றது.
முற்பிறவியில், இறை தூதரிடம், கையேந்தி தன் குறைதீர பிரார்த்தனை செய்தாள். அவையனைத்தும், இப்பிறவியில் கிடைத்துவிட்டது. இவள் கிடைத்ததைக் கொண்டு, கணவன், குழந்தை, தன் குடும்பம் என்றும், பணம், பொருள், சொத்துகளைச் சேர்த்து, அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்ளவேண்டும். இந்த நிலையை மாற்ற எந்த சக்தியாலும் முடியாது. இருப்பதை ஏற்றுக்கொண்டு, சிறப்புடன் இவள் வாழட்டும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியதைக்கேட்ட அந்தப் பெண், அகத்தியர் மூலம், என் முற்பிறவி, இப்பிறவி நிலை பற்றியும், என் குடும்ப வாழ்க்கைப் பற்றியும் அறிந்தேன். எனது முற்பிறவி பிரார்த்தனைகளை, இப்பிறவியில் நிறைவேற்றித்தந்த, நபிகள் நாயகத்திற்கும், என்னைப் பற்றி கூறி, இப்பிறவி வாழ்வில் வழிகாட்டிய ஆசான் அகத்தியர், இருவரின் திருவடிகளுக்கு வணக்கம் கூறி விடைபெற்று சென்றார்.
ஒரு பிறவியில் உண்டாகும் சிரமங்கள், கஷ்டங்கள் தீர, நாம் செய்யும் பிரார்த்தனைகள், சரியானதாக, நேர்மையான தாக இருந்தால், அவை அடுத்த பிறவிகளில்தான் நிறைவேறும். இப்பிறவி வாழ்வில் உண்டாகும், சிரமங்கள், தடைகள், நீங்க எந்தவிதமான பரிகாரங்களைச் செய்தாலும் தீராது என்பதை நானும் அறிந்துகொண்டேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/siddhar-t.jpg)