ல மாதங்கள் காத்திருப்பிற்குப்பிறகு, மீண்டும் ஜோதிட வாசகர்களைத் தொடர்புகொள்வதில் ஆனந்தமே! எலுமிச்சைப் பழமானது சுவாமி சந்நிதி புகுந்தவுடன் ராஜகனியாவதுபோல, கிணற்று நீரே ஆனபோதும் பிரசாத தீர்த்தமாகிவிடுவதுபோல்தான் ஜோதிட வரிகள் அச்சேறும்போது தர உயர்நிலை பெறுவது நானிலம் அறிந்த நியதி.

ஜோதிடத்தை எளியமுறையில் அறிந்து வியக்கவே, ஜாதகத்தில் ஒளி கிரகங்களான ஆதவனும் சந்திரனும் எந்த ராசி, லக்னத்தில் அல்லது எந்த பாவகத்தில் நின்றால், சிலபல சுபப் பலன்களை நிச்சயமாகத் தருவார்கள் என்பதைப் புரியும்படி இங்கு விவரிக்கிறேன்- குருமார்களின் ஆசியுடன்.

ஆண்- பெண் இருபாலருக்குமே மீனத் தில் சூரியன் நின்று கும்பத்தில் (12) சந்திரன் நின்றாலும் அல்லது மீன ராசியில் சந்திரன் இருந்து அதற்கு 12-ல் சூரியன் நின்றாலும் உயர் அந்தஸ்தான வாழ்கை, எதிரிகளை வெற்றிகொள்ளும் திறமை, அதிர்ஷ்ட தேவதைகளை அரவணைக்கும் யோகம், நிம்மதியான உறக்கம் மற்றும் அந்தி மத்தில் ஆட்டம் பாட்டமில்லாத ஆன்மிக நாட்டம் ஏற்படும். வள வாழ்வே அனுபவிப்பார்கள்.

dd

Advertisment

தனுசுவில் சூரியன் நின்று தனுர் லக்னத் திற்கு 9-ல் சந்திரன் அமைந்தவர்களும், மாறாக சந்திரன் தனுசு ராசியில் நின்று, லக்னத்திற்கு 9-ல் சூரியன் நின்றவர்களுக்கும் சிறந்த கல்வியும், தந்தையால் சொத்து சுக மேன்மையும் அடைவர். எதிலும் போராடி செல்வ நிலை பெறுவார்கள்.

கன்னி ராசிக்கு 7-ல், மங்கையரின் லக்னதிற்கு 6-ஆம் வீட்டில் சூரியனும் அல்லது கன்னியில் சூரியன் நின்று லக்னத் திற்கு 6-ல் வெண்ணிலா புகுந்தவர்கள், நல்ல ஆரோக்கியத்துடன், வசீகர தேகத்துடன் இருப்பார்கள். துணைவர் மற்றும் எதிரிகள் எவரையும் மிக சாதூர்யமாக வெற்றிகொள்வார்கள். பல பட்டங்கள் பெறும் இவர்கள் நிர்வாக பூஷன்கள். பேர்சொல்லும் பெண் குழந்தை நிச்சயமாகப் பிறக்கும்- குலதெய்வ அருளால்! மிதுனராசி வாலிப வசந்த நெஞ்சங்களின் சூரியன் லக்னத்திற்கு 3-ல் நின்றவர்கள் அல்லது மிதுனத் தில் சூரியன் அமைந்து லக்னத்திற்கு 3-ஆம் வீட்டில் சந்திரன் அமையப் பெற்றவர்கள் இயல், இசை, நாடகம், கவிநயமான எழுத்து ஈடுபாட்டால் பொருளும் புகழும் அடைவர். வியாபார நுணுக்கம் அத்துப்படியானதால் எவரிடமும் ஏமாறாமல் மிக இலகுவாக வெற்றிக்கனியைப் பறிப்பார்கள். பிறர் தூண்டினால் மிகப் பிரகாசிக்கக்கூடிய ஜாதகர்கள்!

மேஷ ராசியில் சந்திரனும், லக்னத் திலேயே சூரியனும் கூடிநின்றாலும் அல்லது மேஷத்தில் சந்திரனாகி லக்னத் தில் சூரியன் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுள், கடுங்கோபம், வணங்கா தலை, அரசுவழி சம்பாத்தியம், சாமர்த்தியப் பேச்சு, 'டிப் டாப்' நடை உடை அமையும். என்றாலும் துணைவருக்குக் கட்டுப்பட்டே வாழநேரிடும். அலுவலகமோ அந்தப்புரமோ- இவர்களின் கொடிதான் பறக்கும். நட்புகள் பல விட்டுவிலகும்.

Advertisment

துலா ராசி வாசகர்களின் லக்னத்திற்கு 7-ல் சூரியன் நின்றாலும் அல்லது துலாத்தில் சூரியன் அமைந்து லக்னத்திற்கு 7-ல் சந்திரன் நின்றா லும்- சுக்கிரனின் பரிசாக சரி ஜோடியாக துணை அமைபவர்களாகவும், சுயதொழில் மற்றும் திருமண பந்த கூட்டாளிகளால் நிச்சயம் தனப் பிராப்தி அடைபவர்களாகவும் இருப்பார்கள். நட்பு வட்டம் எப்போதும் கைகொடுத்து உயர்த்தும். இவர்களில் சிலரது சுக்கிரன் சூரியனை மிக நெருங்க, தாம்பத்தியம் தள்ளாடும்தான்- செவ்வாயின் புக்தி, அந்தர காலங்களில் மட்டும்!

கும்ப ராசி அன்பர்களின் லக்னத்திற்கு 11-ல் சூரியன் நின்றவர்களுக்கும் அல்லது கும்பத்தில் சூரியன் அமைந்து லக்னத்திற்கு 11-ல் வெண்ணிலா பிரகாசிப்பவர்களுக்கும் எண்ணம்போல் வாழ்வு கிட்டும். நினைத்ததை முடிப்பவர்காள். அரசியல் தொடர்பால் ஆதாயம், அந்தஸ்து பெரிய அளவில் அடைவார்கள். இந்த அமைப்பில் மந்திரிவீட்டு மருமகளாகும் யோகமும் உண்டு.

மீனத்தில் சுக்கிரன் மின்னிய பெண்களுக்கு கும்பம் எப்படியும் முன்னிலை பெறும். சிரிப்பையும் சிருங் காரத்தையும் எதிர்பார்க்க முடியாத சிம்ம ராசிப் பெண்களின் லக்னத்திற்கு 5-ல் சூரியன் எழுந்து அல்லது சிம்மத்தில் சூரியன் ஒளிவீசி , லக்னத்திற்கு 5-ல் சந்திரன் நின்ற நாட்டாமைகளுக்கு அரசு, அரசியல் தொடர்பும், குலதெய்வ அருளால் நல்ல புத்திரப் பேறும், தந்தைவழி சொத்து சுக மேன்மையும் உண்டு. முன்யோசனையால் வருங்காலத்தை வசந்தமாக்கும் யோகமும் ஏற்படும். நடு வயதிற்குமேல் அரசிய-ல் பணம் சேரும். அதிகாரம் வலக் கரத்தில்- ஆணவம் இடக்கரத்தில் இருப்பது இவர்களுக்கே!

ரிஷபராசியினருக்கு லக்னம் எதுவானபோதும், 2-ஆம் வீட்டில் சூரியன் அமைந்தவர் களுக்கும் அல்லது ரிஷபத்தில் சூரியன் உதித்து லக்னத்திற்கு 2-ல் சந்திரன் நின்றவர்களுக்கும் வனப்பு, வசீகரத்திற்குப் பஞ்சமிராது. சிறந்த பட்டப்படிப்பும், பொருளாதார வசதியும் வயதாக வயதாகக் கூடிவிடும். நல்ல குடும்பம் அமையும். ஆயகலைகளில் சிறப்பு ஈடுபாடு தரும். குலதெய்வ அருளால் அடுக்கு மாளிகையில் வாசம், நவீன வாகன வசதி இவர்களுக்கு ஏற்படும். சொந்த உறவுகளால் அவமானப் பட நேரும்- குரு அந்தர காலங்களில்!

மகரராசியினரின் லக்னத்திற்கு 10-ஆம் வீட்டில் சூரியன் இருப்பவர்களுக்கு அல்லது மகரத்தில் சூரியன் நின்று10-ல் சந்திரன் நின்ற யோகவான்களுக்கு தீர்க்காயுள், உயர்பதவி அந்தஸ்தான மணவாழ்வு நிச்சயம் ஏற்படும்.

10ல் நின்ற சூரியனுக்கு மிக அருகில் 8 டிகிரிக்குள்) சுக்கிரன் நின்றவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காதல் திருமணம் நடக்கும். மணமான ஓராண்டில் அம்மா- அப்பா பட்டம் தவறா மல் கிடைத்துவிடும். இந்த சுக்கிரன் தரும் சோகம் யாதென்றால், புகுந்த வீட்டில் அவமானம், உதாசீனம் அரங்கேறும். ஆறு முதல் அறுபதுவரை சோம்பல் (அசமந்தம்) விலகாது. குளியலறை இவர்களுக்குக் கோடை வாசஸ்தலம்.

காலபுருஷனின் 4-ஆம் வீடாகிய மண், மனை, தாயார், உயர்கல்வி, சேரும் சொத்துகளைக் குறிக்கும் கடக ராசியில் சந்திரனும், லக்கினத்திற்கு 4-ல் சூரியனும் நின்றவர்களும் அல்லது கடகத்தில் சூரியன் அமைந்து லக்னதிற்கு 4-ல் சந்திரன் பலமாக அமைந்தவர்களும் தாயாரின் அனுகூலம், பட்டக் கல்வி பெற்று, கடல் பயணங்களால் சம்பாத்திய சாதனை புரிந்து, வெற்றி நாயகராக வலம்வருவார்கள். இவர்களின் சோகம் யாதெனில், துனணவர் மட்டும் எதிர்பார்த்தபடி (மனம் விரும்பியதுபோல்) பலருக்கும் அமைவதில்லை. 'தாய்க்குப் பின் தாரம்' என்பது இவர்ககளின் தாரக மந்திரம். வசீகரத்தால்கூட வளைக்கமுடியாது.

எடுத்தெறிந்து பேசும் விருச்சிக ராசிக் காரர்களின் லக்னத்திற்கு 8-ல் சூரியன் நின்றவர்களும் அல்லது விருச்சிகத்தில் சூரியன் நின்று லக்னத்திற்கு 8-ல் சந்திரன் அமையப்பெற்றவர்களும் அடிவயிறு, கர்ப்பப்பையில் ஆரோக்கியக் குறைவுகளை அனுபவித்தாலும், நீண்ட ஆயுள், வழக்குகளில் எளிதில் வெற்றி, வாரிசற்ற உறவினர் சேர்த்துவைத்த சொத்து சுக மேன்மைகளை அனுபவிக்கும் யோகம் ஏற்படும். வருங்காலத்தை யூகித்து ஆக்கப்பூர்வமாக உழைத்து முன்னேறி விடுவார்கள். சாமர்த்தியமாக பிறரை வஞ்சிப்பதில் வல்லமை பெற்றவர்கள்.

முடிவுரையாக குறிப்பிட்டுச் சொல்வதா னால், உபய லக்னங்களான மீனம், தனுசு, கன்னி, மிதுனத்தாரின் லக்னத்திற்கு 10-ல் சூரியன், புதன் கூடிநின்றவர்கள் பிறரிடம் அடிமையாக வேலை செய்யமாட்டார்கள். செய்தொழி-ல் உணவகம், மதுபானக் கடை, சிறுதொழில் நிறுவனங்கள் நடத்தி, திடீரென்று கார், பங்களா வாங்கி விடுவார் கள். சூரிய சந்திரரை மட்டும் கணித்துப் பலன் சொல்லும்போது, அவரவர் தனி ஜாதகப்படி 9, 7, 5 -ல் புதன், குரு, சுக்கிரன் அமையப்பெற்றால், இவர்கள் சகல பாக்கியங்களையும் அனுபவிக் கப் பிறந்த யோகசாலிகளே!

குருவின் ஆசியால் வாசகர்கள் எல்லா நலமும் பெறட்டும்.

செல்: 94431 33565