2. கோட்சார ரீதியான இடப்பெயர்ச்சி
சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய 4-ஆம் மாத கிரகங்கள் மாதம் ஒரு ராசியில் இருக்கும் என்பதால் இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மாதம்வரை நீடிக்கும். செவ்வாயும் மாத கிரகம் என்றாலும் 45 நாட்கள் முதல் ஆறு மாதம்வரை ஒரே ராசியில் இருப்பதால் இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஒருசில மாதங்கள் முதல் ஒருசில வருடங்கள் நீடிக்கலாம். குரு, ராகு- கேது, சனி இவை நான்கும் வருடங்கள். இடப்பெயர்ச்சியை நிர்ணயிப்பதில் வருட கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப- அசுபப் பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகருக்கு பலன் தரும். வருட கிரகங்களான குரு, சனி, ராகு- கேது பெயர்ச்சிகளின் தாக்கம் பலருக்கு மீளமுடியாத தாக்கத்தை ஏற்படுவதை நாம் அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். குப்பை மேட்டில் வாழ்ந்தவர் கோபுர உச்சிக்கு செல்வதையும், மாட, மாளிகையில் வாழ்ந்தவர்கள் தெருக்கோடியில் சிங்கில் டீக்காக நிற்பதையும் பார்த்திருக்கிறோம். மனிதர்களின் வாழ்க்கையை தடம் புரட்டி போடுவதில் கோட்சார கிரகங்களின் பங்கு அளப்பரியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hanuman_37.jpg)
குருபகவான் ஒரு ராசியை கடக்க தோராயமாக ஒரு வருடமாகும். மனிதனின் விருப்பம், எண்ணம், ஆசை போன்றவற்றை நிறைவு செய்பவர். பெரும்பாலும் குருவினால் ஏற்படுத்தப்படும் இடப் பெயர்ச்சி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, திருமணம், புதிய சொத்து வாங்கி குடியேறுவது போன்ற சுபப் பலன்களை உள்ளடக்கியிருக்கும்.
ராகுவும், கேதுக்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் 18 மாதங்கள் தங்கி பலன்களைத் தருவார்கள். இவர்கள் தங்கள் கோட்சார காலங்களில் வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவர் வயதிற்கும், தசாபுக்திக்கும் ஏற்ற இடமாற்றத்தை வழங்குகின்றன.
இவர்களால் ஏற்படுத்தப்படும் இடப்பெயர்ச்சி சாதகம் குறைவாகவும், பாதகம் அதிகமாகவும் இருக்கும்.
அதிக வருடம் அதிகபட்சம் 2 1/2 ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி பலன் தருபவர் சனிபகவான்.
இவரால் ஏற்படுத்தப்படும் மாற்றங் கள் ஜாதகரை பல வருடங்களுக்கு வழிநடத்தும்.
சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் இடமாற்றம் மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர் களுக்கு, தன் தசா காலத்தில், கோட்சாரத் தில் தான் நின்ற இடத்திற்கு ஏற்ப ஏராளமான நற்பலன்களை சனிபகவான் வாரி வழங்குவார். உயர் பதவி, தொழில், அந்தஸ்து, வாழ்வியல் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி என எட்டாத உயரத்தில் ஏற்றிவிடுவார். கோட்சாரத்தில் வலிமை இல்லாத இடங்களுக்கு வரும் காலங்களில் நீசத் தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பார். பொதுவாக அசுப கிரகங்கள் தரும் பலன்களில் ஏற்ற- இறக்கம் மிகுதியாக இருக்கும் என்பதால், நன்மை வந்தாலும் அந்த நன்மையை அனுபவிக்கமுடியாத சிரமமும் இருக்கும். சனியின் சாதகமற்ற கோட்சார நிலைகள் சற்று அதிக பாதிப்பைத் தரும். இடப்பெயர்ச்சியால் எப்போது இன்பங்கள் அதிகமாக வரும்.
கேந்திரம், திரிகோணம், பணபர ஸ்தானம் வலிமையாக இயங்கும் போது சுபமான இடப்பெயர்ச்சி ஏற்பட்டு இன்பங்கள் அதிகரிக்கும்.
ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்கள் செயல்படும்பொழுது ஜாதகருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும்.
அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். தொட்டது துலங்கி தொழில், உத்தியோகத்தில் அனுகூல மான மாற்றங்கள் உண்டாகும். இடப் பெயர்ச்சியால் எப்போது துன்பங்கள் அதிகமாக வரும்.
தசாநாதன் எட்டாம் அதிபதி சாரம் பெற்று தசா நடக்கும் பொழுது வாழ்க்கையே வேண்டாமென்று நினைக்கும்வகையில் இடப்பெயர்ச்சி ஏற்பட்டு தொழில் வேலையால் வம்பு, வழக்கு, தீராத கடன் உண்டாகும். தசாநாதன் பன்னிரண்டாம் அதிபதி சாரம் பெற்று தசா நடக்கும் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை, அதிகப்படியான செலவுகள், விரயங்கள், இழப்புகள், ஆரோக்கிய குறைபாடு காரணமாக துன்பம் வரும். தசாநாதன் ஆறாம் அதிபதி சாரம் பெற்று தசா நடக்கும்பொழுது ருண, ரோகத்தால் நொந்து வாழவேண்டிய சூழல் ஏற்படும். அஷ்டமாதிபதி மற்றும் மூன்றாம் அதிபதி தொடர்புடைய தசாபுக்திகளிலும் மாற்றம் உண்டாகும்.
விரைவான மாற்றத்திற்கு காரக கிரகம் சந்திரன் ஒருவருடைய ஜாதகத் தில் பிறந்தகாலச் சந்திரன்மீது வருட கிரகங்களான குரு, சனி, ராகு- கேது செல்லும்போதும் மாற்றங்கள் கிடைக்கும். பிறந்த காலச்சந்திரன் நல்லநிலையில் இருக்கும்பட்சத்தில் தசா புக்திகளும் சாதக நிலையில் இருந்தால் மாற்றம் ஜாதகர் விரும்பக் கூடியதாக இருக்கும். தசாபுக்தி சாதகமற்ற காலத்தில் ஏற்படும் இடப் பெயர்ச்சியால் மன சஞ்சலம் அதிகமாக இருக்கும்.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில்தான் அனைவரும் இடப்பெயர்ச்சியை அதிகம் எதிர்பார்க்கி றார்கள். சோதனைகளைச் சாதனையாக மாற்ற நல்ல இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கக் கூடியவர்கள் தங்களது பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று குலதெய்வ- இஷ்டதெய்வ வழிபாடு செய்து மகிழவும்.
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-04/hanuman-t_0.jpg)