சென்ற இதழ் தொடர்ச்சி..

பத்துப் பொருத்தம்

நட்சத்திரப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வதுதான் பொதுவாக நடைமுறை வழக்கம். முத-ல் நட்சத்திரம் பார்த்து, பத்துப் பொருத்தத்தில் ஆறுக்குமேல் இருந்தால் செய்யலாம் என சொல்வார்கள். நிறைய பேருக்கு நட்சத்திரப் பொருத்தம் பார்த்தும் திருமணத்தில் பிரிவு ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் திருமணத்திற்கு நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதாது. ஜாதகப் பொருத்தமும் அவசியம் தேவை. ஜாதகத்தில் 2, 4, 7, 8-ஆம் இடங்களின் நிலையைப் பொருத்து, தோஷமிருந்தால் அதற்கேற்ப தோஷ ஜாதகங்களை இணைத்தால்தான் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜாதகப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம்- உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பொருத்தமுள்ள ஆண்- பெண்ணை இணைத்து வைத்து நல்வாழ்க்கை வாழ்வதற்காகதான்.

ரஜ்ஜுப் பொருத்தம்

Advertisment

குறிப்பாக ரஜ்ஜு என்னும் மாங்கல்யப் பொருத்தத்தை வைத்துதான் திருமணம் செய்யலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். சிரசு ரஜ்ஜு- மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்; கண்ட ரஜ்ஜு- ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்; உதர ரஜ்ஜு- கார்த்திகை, புனர் பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி; தொடை ரஜ்ஜு- பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி; பாத ரஜ்ஜு- அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி.

இவ்வாறு நட்சத்திரங்களைப் பிரித்து வைத்துள்ளனர். திருமண ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் பொருந்தாது. சிரசு ரஜ்ஜுவாக இருந்தால் ஆண் மரணம், கழுத்து ரஜ்ஜு பெண் மரணம், உதர ரஜ்ஜு புத்திர தோஷம், தொடை ரஜ்ஜு பொருள் இழப்பு, பாத ரஜ்ஜுவாக இருந் தால் பயணத்தால் பாதிப்பு உண்டாகும். ஆதலால் மண வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளைத் தந்து விடும். திருமணத்திற்கு ரஜ்ஜு பொருந்தவில்லை என்றால் கட்டாய மாகத் திருமணம் செய்யக் கூடாது.

nn

Advertisment

நாடிப் பொருத்தம்

பொருத்தங்களில் நாடிப் பொருத்தமும் முக்கியமானது. ஒரே நாடியில் திருமணம் செய்தால் உடல்ரீதியான பிரச்சினையால் மனப்பிரிவு ஏற்பட்டு தம்பதியர் பிரிந்து வாழ நேரிடும். ஆதலால் வெவ்வேறு நாடியில் இருப்பவரை மணம்செய்து வைக்கவேண்டும்.

வாத நாடி: அஸ்வினி, திருவாதிரை, புனர் பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி. பித்தம் நாடி: பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி. சிலேத்தும நாடி: ரோஹிணி,ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

ஏழாமதிபதி நின்ற இடம்

பொதுவாக ஏழாமதிபதி நல்ல இடங்களில் இருந் தால்தான் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மறைவு ஸ்தானங் களில் இருந்தால் அதிக பாதிப்பைத் தரும். "ஏன்டா கல்யாணம் பண்ணினோம்' என்னுமளவு தொல்லையும் வந்துவிடும்.

லக்னம்

ஏழாமதிபதி லக்னத்தில் இருந்தால் கலைகள்மீது நாட்டம் இருக்கும். சுபத் தன்மையாய் இருந்தால் ஏதாவதொரு கலையில் வித்தகராக இருப்பார். எதிர் பா-னத்தவரால் விரும்பக்கூடியவராக இருப்பார். அவர்களுடன் மோகமும் சல்லாபமும் கொண்டு பாவத்தை உணராதவராக இருப்பார். இதனால் தொழி-ல் நாட்டமின்றி கவனக் குறைவுடனே இருந்து நஷ்டத்தை அடைவார். வாழ்க்கைத் துணைவர் வந்தபின் அதிஷ்ட யோகம், புகழ், எதிர்பாராத நல்ல பதவி கிடைக்கும். உணவு, உடை, இருப்பிடம், சகல சந்தோஷங்களும் துணைவர் வந்ததும் கிடைக்கத் துவங்கும் அல்லது துணைவரால் கிடைக்கும்.

இரண்டு

இரண்டாம் வீட்டில் ஏழாமதிபதி இருந்து சுபகிரக வலுப்பெற்றால் வசதிமிக்க துணைவர் அமைவார் அல்லது திருமணத்திற்குப் பின் பணக்காரராக மாறுவார்.உழைத்து சம்பாதித்து கோடீஸ்வரராக மாறுவதைவிட, கோடீஸ்வர வரன் வரவேண்டுமென நினைப் பவர் அதிகம். சிலருக்கே கோடீஸ்வர துணை அமையும். பலருக்கு மாமனார், துணைவரின் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மற்றும் மனைவி தொழில் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பார்.

மூன்று

ஏழாமதிபதி மூன்றில் மறைந்தால் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பிரிவு, இழப்பு ஏற்படும். இதனால் துணைவரின் உடன்பிறப்புகளுக்கே லாபம் உண்டாகும். சுபகிரகப் பார்வை பெற்றால் பிரச்சினைகளுடன், கெட்டவருடன் குடும்பம் நடத்துவார். பாவகிரக வலுப் பெற்றால் துணைவருக்கு மாரகத்தைத் தருவார். பற்றற்ற வாழ்க்கையும், தார தோஷத்தால் மறுமணமும் செய்வார்.

நான்கு

வீடு, வாகனம், சுக ஸ்தானமான நான்கில் ஏழாமதிபதி இருந்தால் துணைவரால் அனைத்து சுகங்களும் கிடைக்கும். கௌரவம் நிறைந்த நல்ல வாழ்க்கை அமையும். இந்த அமைப்பு பெற்ற மருமகன்- மருமகளைப் புகுந்த வீட்டில் பாசமாக, நன்றா கப் பார்த்துக் கொள்வர். திருமணத்திற்குப் பிறகு சொந்த வீடு, வாகன வசதி பெருகும். மனைவியால் தாயாருக்கு நன்மை உண்டு. உதவிகரமாய் இருப்பார்கள்.

ஐந்து

ஏழாமதிபதி ஐந்தில் இருந்தால் பூர்வ புண்ணிய பலத்தால் நல்ல துணை அமையும். அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமையும். ஒழுக்கமான கணவன் அல்லது மனைவி அமைவர். நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்க்கை பெறுவர். குழந்தை பிறந்தபிறகு வீடு, வாகன யோகம், செய்தொழில் மேன்மை, உயர்பதவி அடைவர். வலுப்பெற் றால் அதிர்ஷ்டத்தையும், பலவீனப் பட்டால் களத்திரதோஷத்தையும் தந்துவிடும்.

ஆறு

ஏழாமதிபதி ஆறில் நின்றால் துணைவர் நோயாளியாக இருப்பார். திருமணத்திற்கு முன்பு ஆரோக்கியமானவராக இருந்தாலும், திருமணத்திற்குப் பின்பு நோயாளியாகி இருப்பார். நோயால் அவதிப்பட்டுகொண்டும், கடன் தொந்தரவுகளையும் கொடுப்பார். சிலர் அராஜகம் செய்பவராகவும், எதிரிபோல் செயல்பட்டு எதற்கெடுத்தாலும் எதிரான மனநிலையிலும், சந்தோஷம் தராதவராகவும் இருப்பார். ஏழாதிபதி, ஆறாமதி பதியுடன் இணைந்தால்கூட இதே பலனையே செய்யும்.

ஏழு

ஏழாமதிபதி ஏழில் பலமாக இருந்தால் மனைவி சொல்லைத் தட்டாதவராகவும், மனைவிக்கு அடிமையாகவும் இருப்பார். சுபகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் பணக்கார மனைவியால் யோகம் பெற்று அவர் சொல் கேட்டும், பாவகிரக வலுப்பெற்றால் திட்டும் மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வாழ வழியின்றி இருப்பார். கிரக வ-மையைப் பொருத்து துணைவி ஆதரவு கிடைக்கும். மனைவியால் ஆதாயமே பெறுவார்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748