இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் விஷயங்களைத் தேடுவதில் சி.பி.ஐ போல செயல்படுவார்கள். இவர்கள் புகழ்ச்சியில் அதிகம் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதிதேவதை- ராகு
மிருகம்- பாம்பு
கிரகம்- ராகு
மலர்- ஓலைப்பூ
ஆகாரம்- நெய்
பூசுவது- கதம்பம்
ஆபரணம்- வைடூரியம்
தூபம்- சாம்பிராணி
வஸ்திரம்- மரத்தோல்
பாத்திரம்- கப்பறை
தெய்வம்- நாகர்கோவில் நாகராஜா
வழிபாடு- சூரியன்
வடிவம்- குதிரை
தேவதை- ஆதிசேஷன்
விஷ ராகு சுப ராகு என இரண்டு உள்ளன.
பல பாம்புகள் உள்ளன. நாகம், சர்பம், நீர் பாம்பு. மலை நாகம், ஆழ்கடல் நாகம், ஆண் நாகம், பெண் நாகம் இப்படி பலவகை நாகங்கள் உள்ளன. இதுபோல இக்கரணத்தில் பிறந்தவர்களுக்கும் பலவிதமான குணங்கள் உண்டு. சிறந்த பிரசங்கங்களைச் சாதாரணமாக செய்வார்கள். தத்துவ அறிவில் சிறந்தவர்கள். போதனை செய்வதிலும் சிறப்பானவர்கள். தன்மானம் மிக்கவர்கள்.
நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பூமி சம்பந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை, வெட்டி எடுப்பது போன்ற மருத்துவம் சார்ந்த தொழில்களையும், மரம் அறுப்பது, கற்களை செதுக்குவது, சிற்ப வேலைகள், டைல்ஸ் வேலைகள், கேக் ஷாப், மார்க்கெட்டிங், மாயாஜாலம், லேத், கிணறு தோண்டுதல், போர் போடுதல் போன்ற வேலைகளை எளிதாக செய்கிறார்கள். அதன் மூலம் வருமானத்தையும் லாபங் களையும் அடைகிறார்கள். இவர்களிடம் பல நல்ல குணங்களும் காணப்படும். இந்த கரணத்தில் பிறந்த சிலருக்கு விஷப் பாம்புகளை மயக்கிப் பிடிக்கும் ஆற்றல் இருக்கும். இதனால் பலருக்கு விஷ வைத்தியம் கைகூடுகிறது. மயக்க மருந்துவராகவும் பலர் இருக்கிறார் கள். இவர்கள் ஆன்மிக வழியில் சென்றால் சிறந்த ஞானியாகக் கூடிய அமைப்பு உள்ளது.
நாகவ கரணத்தில் பிறந்தவர்கள்
எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள். இக்கரணத்தில் பிறந்த ஒருசிலர் பிறருக்கு தீமை விளைவிக்கும் காரியங் களை சாதாரணமாக செய்வர். அதிக சந்தேக குணங்களும் உண்டு. சில பேர் வாக்கு சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். பேய் ஓட்டுவது, பில்-, சூனியம், ஏவல் என்ற காரியங்களில் செய்வதும் எடுப்பதும் தொழிலாக வைத்திருப்பார்கள். புரட்சியாளர்களாக, தீவிரவாதி களாக, நியாயத்திற்காக போராடி கெட்ட பெயரையும் பெறுவார்கள். இரு வேறு மாறுபட்ட குணங்களைக் கொண்ட இவர்கள் இந்த கரணத்தில் பிறந்தவர்கள் இவர்களின் பார்வையில் சர்ப்பத்தின் சாயலும், குணமும் தெரியும். இவர்களின் பார்வையே சர்ப்ப பார்வையாகும்.
பாலவ கரணம்- அமிர்த ராகு
நாகவ கரணம்- விஷ ராகு
பிறருக்காக தன்னையே அர்ப்பணிப்பார்கள். ஆறு மாதத்துக்கு ஒருமுறை குணம் மாறும் தன்மை கொண்டவர்கள். கோட்சார ராகு செல்லும் இடம் யோகத்தை செய்கிறது. 5-ல் ராகு இருந்து இக்கரணத்தில் பிறந்தால் சமாதி வழிபாடு செய்கிறார்கள். துன்பத்தை ஏற்று இன்பமாக மாற்றி வாழ்கிறார்கள்.
உத்தம குணமும் சுவையான உணவும் உண்பவருமாவார் நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் தானம் செய்யும்போது எடைக்கு எடை நெய் தானம் செய்வது அல்லது எடையில் 10 சதவிகிதமாவது நெய் தானம் செய்யலாம். கோவில் தீபங்களுக்கு நெய் தீபம்விடலாம். இந்த கரணத்தில் பிறந்த வர்கள் எப்போதும் சர்ப்பங்களையும் நாகங் களையும் எந்த விதத்திலும் அடிக்காமல் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும். இவர்கள் பேசும்பொழுது இவர்கள் வார்த்தையில் கவனமாக பேசவேண்டும். விஷத்தை கக்குவதுபோல் சில வார்த்தைகளை கடுமையாக பேசினால் பிரச்சினை ஏற்படும். நாகவக் கரணத்தில் பிறந்தவர்கள் கோவில் தெய்வத்திற்கு வைடூரியம் மாலை வாங்கிக் கொடுக்கலாம். பல ஜென்ம கர்மா நீங்கும். வீட்டில் வைத்து வணங்கிவரும் தெய்வத்திற்கு வைடூர்ய மாலை அணிவித்து மந்திரம் ஜெபம் செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். இவர்கள் எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும் ராகு காலத்தில் வைத்து வழிபாடு செய்வதும் இவர்களுக்கு நல்ல பலனை தரும். கோவில் பூஜைகளுக்கு தேவையான அளவு சாம்பிராணி வாங்கிக் கொடுக்கலாம்.
வீட்டில் பூஜை செய்யும்பொழுதும் சாம்பிராணி தூபம் இட்டு பூஜை செய்வதுவருவது அவசியம். நாகப்பட்டினத்திலுள்ள நாகநாதர் கோவில் வழிபாடு செய்து வருவது இவர்களுக்கு கரண நாதருடைய அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும்.
கட்டுரை மற்றும் ஜோதிடம் தொடர்பாக பேச: 90802 73877