ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒளிக்கிரகங் களில் சந்திரனும் ஒருவர், தாயின் அம்சமாக இருப்பவர். ஒரு ஜாதகருக்கு பிறந்த நட்சத்திரத் தையும் ராசியையும் தரக்கூடிய கிரகம். சிவசக்தி அம்சமாகவும், தாயார் வெங்கடாசலபதி யாகவும் கலைகளின் சொரூபமான சரஸ்வதி- பிரம்மாவாகவும், பரிணமிக்கும் கிரகம்.
ஒரு ஜாதகத்தை நாம் எடுத்தவுடன் விதி, மதி, கதி எனும் ஆய்வில் பலன்களை ஆராயவேண்டும். இதுதான் ஜோதிட சூட்சுமம். அந்தவகையில் விதி என்பது ஒருவரின் பிறப்பு லக்னத்தை மையமாக கொண்டது. மதி என்பது சந்திரனின் தினசரி சஞ்சாரம் நட்சத்திர ராசிகளைக் குறிப்பது. வளர்பிறைச் சந்திரன் சுபராகவும், தேய்பிறைச் சந்திரன் பாவராக வும் கணக்கில் எடுக்கப்படுகிறது. சந்திரனை முஸ்லிம் மதத்தினர் பிரதான கடவுளாக வழிபடு கிறார்கள். பிறை பார்த்து நோன்பிருந்து எதையும் செய்வார்கள். தினப்பலன், மாதப்பலன், வருடபலன் இவையனைத்துமே ஒரு ஜோதிடர் கள் உருவாக்குவதற்கு இவரை மையமாக வைத்த கிரக நிலைகள்தான். சந்திரனின் பலம் லக்னத்திற்கு நிகராக இயங்கக்கூடியது. ஒருவருக்கு லக்னம் என்ற விதி பலமில்லை என்றால். மதி என்ற சந்திரன்தான் ஜாதகரை வளப்படுத்துவது. நல்ல மதியுகமும் உடல் அமைப்பும் இனிய குணமும் பார்ப்போரைக் கவரும் கவர்ச்சியும் உடையவர். இறைவன்- இறைவி எல்லாருமே தனது தலைப்பகுதியில் இந்த பிறை நிலாவை சூடியிருப்பார்கள். வளர்பிறையில் வரக்கூடிய 3-ஆம் நாள் சந்திர தரிசன நாளாகும். ஆதற்குப் பெயர் திரிதியை திதி (3-ஆம் திதி). இந்த திதியில் மாதா மாதம் நாம் சந்திரனை சந்தித்து வருகிறோம். வணங்கி இதன் விரதங்களை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது மாதந்தோறும் பௌர்ணமி விரதம் மேற்கொண்டு அம்பாள், சத்தியநாராயணன், சிவபெருமான் (கிரிவலம்) இப்படி இவர்களை வணங்கி ஆண்- பெண் இருவருமே தனது கோரிக்கையை இந்தநாளில் இவரிடம் வேண்டி வாழ்வில் வளர்ச்சியை பெருவார்கள். சஷ்டியப்த பூர்த்தி (60), பீமரத சாந்தி (70), சதாபிஷேகம் (80 வயது) இதன் சுப அம்சங்களில் எல்லாம் எத்தனை பிறை நாம் பார்த்து கடந்து வந்திருக்கிறோம் என்பதைகூட பத்திரிகையில் அச்சடித்திருப்பார்கள். நமது ஆயுள் பலத்திற்குகூட இவர் முக்கிய அங்கம் வகிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yogam_19.jpg)
சந்திரன் வசமுள்ள பொறுப்புக்கள்:
1. ஜல வஸ்த்துக்கள், தானியங்கள், வெண்மை நிறப்பொருட்கள், உணவு, போக்குவரத்து, பால் பொருட்கள், பதப்படுத்துபவைகள் மக்களின் விருப்பத்திற்கு உண்டான உணவுகள், ஆன்றாடம் அழியும் வஸ்த்துக்கள் ஐஸ்கிரிம், ஜீஸ், மதுக்கடை இதர பானங்களை குறிக்கும். நர்ஸ், நகை, துணி, அரசு சார்ந்த நிறுவனங் கள், ஏற்றுமதி- இறக்குமதி, செடி, கொடி, தேயிலை, பெட்ரோல், திரவியப் பொருட்கள், சரீர சம்பந்தமானவைகள், காய், கனி வகைகள், கடல் வஸ்த்துக்கள், அதன் தொடர்புடைய ஜீவனம் மசாலா பொருட்கள், கதை, கட்டுரை, கலை, பத்திரிகை, ஆலோசனை மதியுகம் கொண்டு செய்யும் தொழில்கள்.
நோய்கள்: மனஅழுத்தம், கபம், மார்ப்பு சளி, வயிறு, மாதவிடாய் தொடர்புகள், நீர், தைராய்டு சுரப்பி, இடது கண் இது சம்பந்த மான நோய்களின் அமைப்புக்கும் இவர்காரகர் ஆவார்.
கிரக பாவ அமைப்புக்கள் யோகங்கள் பலன்கள் சந்திரனுக்கு 2-ல் (சூரியன், ராகு- கேதுவை தவிர) சுனபாயோகம், புகழ், செல்வம், அறிவு திறன், சுய சம்பாத்தியம், சொத்து உள்ளவர்.
சந்திரனுக்கு 12-ல் (சூரியன், ராகு- கேதுவை தவிர) அனபாயோகம் சுகபோக வசதிகள், அற்பமாக அனுபவிப்பார்கள், அதிகாரி அதன் தன்மை திறமை போக போக்கியங்கள் உள்ளன.
சந்திரனுக்கு இருபுறமும் துர்துரா யோகம், நல்ல அறிவுத்திறன், அரசுத் துறை ஆதிக்கம், நல்ல சரீரம், கவி, காவியம் உடையவர், மதியுக்தால் பாராட்டப் பெற்றவர் சந்திரனுக்கு 6, 7, 8-ஆம் பாவங்களில் சந்திராதி யோகம், எதிரி, பகைவர்களை வெற்றி பெறுபவர், பெயர், புகழ் செல்வாக்கு கொண்டவர்கள்.
சூரியனுக்கு நேரில் (7-ல்) சந்திரன் இடம் பெறுவது பௌர்ணமி யோகம், ஒழுக்கம், சிந்தனை, நல்ல எண்ணம், மக்கள் மத்தியில் புகழுடன் விளங்கக் கூடியவராக இருப்பார் கள்.
சந்திரனுக்கு 2-ல் குரு ஜீவன யோகம், கடைசிவரை ஜீவன கஷ்டம் இருக்காது, ஒரு ஸ்திரமான தொழில் முன்னேற்றங்களை பெறமுடியும்.
சந்திரனுக்கு 3, 6, 10, 11-ல் புதன், குரு, சுக்கிரன் இருந்தால் வசுமதி யோகம், வசதி வாய்ப்பு, திடீர் அதிர்ஷடம் கொண்டவர், தாய், பெண்கள் மூலமாக ஆதாயம் அடைபவர்.
சந்திரனுக்கு 1, 2, 4, 7, 9, 10, 11-ல் இதன் வீட்டில் அதிபதிகள் யரிருனும் இடம்பெறுவது அக்கிரகம் ஆட்சி, உச்சமாக (அ) ராசியாக அமைந்தால் அரச யோகம் எந்த வகையிலாவது மக்கள் செல்வாக்கோடு அரசு சக்கரத்தை ஆள்பவர், பிறப்பிலும் இறப்பிலும் பெருமை சேர்ப்பவர்கள்.
சந்திரனுக்கு கேந்திரங்களில் குரு இருந்தால் கஜகேஸரி யோகம் தன் துறையில் எந்த வகையிலாவது பிரபல்யம் ஆவார், ஓரளவு வசதி வாய்ப்புகளை அடைவார் சந்திரனுக்கு திரிகோணத்தில் குரு இருப்பின் குரு சந்திரயோகம் எந்த வகையிலும் ஜீவன முன்னேற்றம். பூமி, பொன், பொருள், ஆதாயம் பலவித சௌரியம் அனுபவிக்கப் பெறுவார்.
சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பின் சந்திரமங்கள யோகம் பூமியின் மூலமாக பலவித ஐஸ்வரியங்களை அடைவார்.
நிலையான வருமானம் வரும்.
சந்திரனுக்கு 2, 9, 11-ஆமிடத்து அதிபதியில் ஒருவர் சந்திரனுடன் கேந்திரங்களில் இருந்து குரு 5, 11-ஆமிடத்து அதிபதியாக வருவது அகண்ட சாம்ராஜ்ஜிய யோகம் (மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம் இந்த ராசிகளுக்கு மட்டுமே பொருந்தும்) இதன் பலன் ஒரு மந்திரி, நாட்டின் அதிபர் இப்படிஉயர் பதவிக்கு உண்டான தகுதிகள், பணியாட்கள் அமையப் பெறுவார்கள்.
சந்திரனால் வரும் யோகங்கள்:
ஜாதகமும் சந்திரனின் நிலைகளும்:
சந்திரன் எந்த ஜாதகராக இருந்தாலும் அவருக்கு ஜனனத்தில் 1, 3, 6, 7, 10, 11-ல் இருந்தால் பொதுவாக நன்மை. இதே இடங்களில் கோட்சார சஞ்சாரத்தில் வரும் போதும் நன்மை.
எந்த ராசிக்கு சந்திரன் யோகாதிபதியாக வருவார். கடகம், விருச்சிகம், மீனம் இந்த 3-க்கும் இவர் 1, 5, 9 திரிகோண வீட்டிற்கு அதிபதியாக வருவார் சுபர். அடுத்ததாக மிதுனம், மேஷம், துலாம் இந்த 3 லக்னங்களுக்கும் 2, 4, 10-க்குடையவராக வருவார். மத்திமமான பலன் தருபவர். சுபமான கிரகம். இதர லக்னங் களுக்கு ரிஷபம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம், கும்பம் இந்த 6 லக்னங்களுக்கும் இவர் பாவர் ஆவார். இந்த பாவராக இவர் வரும்போது 6, 8, 12-ல் மறைவதும் கெட்டவர் கெட்ட இடத்தில் இருப்பது யோகமே. அல்லது திரிகோணங்களில் இருந்தால் கெடுபலனை ரொம்ப செய்யமாட்டார். கிரக சேர்க்கை யோகத்தை ஒட்டி இந்த சந்திரனின் நிலை சாதகம் பாதகமாக மாறும்.
ஒரு ஜாதகத்திற்கு விதி என்ற லக்னம் அனுகூல மாக இல்லை என்றால் மதி என்ற சந்திரனை அடிப்படையாக வைத்து (சந்திராலக்னம்) ராசி இதன் அடிப்படையில் உங்களுக்கு கிரகங்கள் பலமாக இருந்துவிட்டால் அல்லது இவருக்கு சொல்லப்பட்டுள்ள யோகங்களில் இடம் பெற்றுவிட்டால் விதியால் இழந்த பலத்தை மதியால் நீங்கள் ஈடுகட்டிவிடுவீர்கள். இந்த சந்திரனின் ஆதிக்கம் 30 வயதுமுதல் 60 வயதுவரை சரியாக பரிணமிக்கும்.
சந்திரனுக்கான சில சிறப்பு நிலைகள்:
இவரது உச்ச ராசி ரிஷபம். அதில் 3 பாகையில் உச்சமும் அதில் 27 பாகையில் மூலத்திரிகோணமும் உள்ளது. கடகத்தில் ஆட்சிபெற்று திகழ்கிறார்.
விருச்சிகத்தில் 3 பாகை மட்டுமே நீசம். இதனை தாண்டி வரும்போது நீச பலம் குறைவு.
இந்த சந்திரனுக்கு கிரக அவஸ்தைகள் பால்ய அவஸ்தை நன்மை இல்லை. இதர அவஸ்தைகளான கௌமார, யவன அவஸ்தை கள் பலமே. ரோகிணி, அஸ்தம், திருவோணம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரன் ஆளுகையில் பிறந்தவர்கள். அதில் குறிப்பாக ரோகிணியில் பாதம் 2, அஸ்தத்தில் பாதம் 2, திருவோணம் பாதம் 2 இந்த 3 பாதங்களில் புஷ்கராம்ச பாதம் ஆகும். இதில் பிறந்தவர்கள் மிகவும் சாதனையாளர்களே.
வாஸ்து சாஸ்த்திரத்தில் சந்திரனுடைய பகுதியில் தலைவாசல் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டமே. சட்பலம் என்ற கிரக ஆய்வுகளில் மொத்தம் 600 மதிப்பெண்கள் இவர் பெற்றுவிட்டால் மிகவும் சிறப்பு.
அதன் உட்பிரிவுகளான ஸ்தான பலத்தில் 222, கால பலத்தில் 167, திருக்பலம் 67, திக்கு பலம் 83, சேஷ்ட்டா பலம் 50 இத்தகைய பலன்கள் சந்திரனுக்கு இடம் பெற்றிருந்தால் அவர் பலமுடையவராக மாறி அவரது தசாபுக்தி அந்தரம் கிரக ஆதிக்கம் இவரால் ஏற்படக் கூடிய எந்த ஒரு பாதிப்புகளில் இருந்தும் நீங்கி சுபிட்சமான பலன்களை சந்திரனால் நீங்கள் சந்தோஷமான வாழ்க்கையை பெற்றிடமுடியும்.
கோட்சாரத்தில்கூட தினசரி சஞ்சாரத்தில் 1-ஆமிடத்தில் வரும்போது சரீர பலமும் சந்தோஷமும் 3-ல் வரும்போது காரிய வெற்றிகளும், 6-ல் வரும்போது ஆரோக்கிய பலமும் கடன் நிவர்த்திகளும் எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலும், 7-ல் வரும்போது கூட்டு முயற்சி அன்யோன்ய நட்புக்கள், பங்காளி பந்துக்கள்மூலம் பயனுள்ள காரியங்கள், ஒப்பந்தங்கள், பயணங்கள், 10-ல் வரும்போது ஜீவன முன்னேற்றங்கள், நல்ல தகவல்கள், கௌரவ பொறுப்பு, ஆள்பலம், 11-ல் வரும்போது எல்லாவிதமான நன்மைகளையும் நீங்கள் பெற்றிடமுடியும். சந்திரனுக்கு கோட்சாரத்தில் வருட கிரகங்களில் குரு வரும்போது 2, 5, 7, 9, 11-ல் சாதகமான பலன்களை சந்திரனுக்கு 3, 6, 11-ல் உபஜெய வீடுகளில் சனி, ராகு- கேது சஞ்சாரங்கள் சாதகமான பலன்களே என அறியவும்.
வர்க்க சக்கரங்களில் கூட அதிக பலம் சந்திரனுக்கு இருந்தால் 30 முதல் 60 வயதுவரை உள்ள காலங்களில் வாழ்வில் ஜாதகர் எப்படியும் யோக பலன்களோடு முன்னேற்றம் அடைவார். ஹோரா சக்கரத்தில் சந்திரனுடைய பகுதியில் அதிகமான கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு ஜனன லக்னத்தை விட சந்திரா லக்னத்தின் அமைப்புக்களே அதிகம் பேசப்படும். அதன்ரிதியில் வரும் கிரக ஆதிபத்தியம் சஞ்சாரங்கள். ஆண்- பெண் ஜாதகங்களுக்கு அதிர்ஷ்டம் உடையதாக சந்திரனின் நிலை அமைந்திடக்கூடும்.
சந்திரனின் பலத்தை பெரும் பரிகாரங்களும், ஸ்தலங்களும்:
சந்திர ப்ரிதி:
மலர்கள்: வெள்ளை அரளி, தாமரை, புஷ்பங்கள்.
நிவேத்தியப் பொருள்: அரிசியாலான இனிப்பு பண்டங்கள்.
ரத்தினம்: முத்து (ஜாதிக்கல்), சந்திரகாந்த கல், உபரத்தினம். இதனை வலது கை சுண்டு விரல் அல்லது மோதிர விர-ல் முறைப்படிசெய்து பூஜித்து அணியவும்.
சின்னம்: மான் (அ) நாடி (அ) பிறை நிலா உருவத்தை எதிலும் பயன்படுத்துவது சாதகமே.
வஸ்த்திரம்: வெளிரிய மஞ்சள் அல்லது பாதிரிப்பூ நிறம்.
வழிபாட்டு பொருள்: சாம்பிராணி, சமித்து: முருங்கை, உலோகம்: ஈயம்.
வழிபாடுகள்: அம்மன் வழிபாடுகள். குறிப்பாக சந்திரன் அம்மன் வடிவுடையவர். எனவே அம்மன் வழிபாடு, சக்தி, தாயார் லட்சுமி, ல-தாம்பிகை, ராஜராஜேஷ்வரி, காயத்திரி தேவி இத்தகைய வழிபாடு உகந்த ஒன்றாகும்.
வசீகர ஸ்தலங்கள்: திங்களுர், திருப்பதி, சந்திரசேகரபுரம், திருவாரூர், குடவாசல், வலங்கைமான் மார்க்கத்தில் உள்ளது. கர்கடேஸ்வரர் (கும்பகோணம் அருகில்) திருமீயச்சூர் ல-தாம்பிகை, கடலூர் காயத்திரிதேவி, கன்னியாகுமரி அம்மன், திருவானைக்காவல், காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, அன்னபூரணி, சேரன் மாதேவி, திருநெல்வே- பாபநாசம் மார்க்கம், அர்த்தநாரீஸ்வரர் உருவமான திருச்செங்கோடு ஸ்தலம், பின் சந்திர மௌலீஸ்வரர் ஆலயங்களான திருவக்கரை விழுப்புரம் வக்ரகாளியம்மன் ஆலயம், பின் முசிறி அருகிலுள்ள ஆலயம், சங்கர நாராயணனாக கோமதி அம்மனோடு இணையும் சங்கரன் கோவில், சோம சுந்தரம் மீனாட்சி ஆகிய மதுரை இத்தகைய ஸ்தலங்களுக்கு ஒரு திங்கள் நாளில் சென்று சந்திரனுக்குச் சொல்லப் பட்டுள்ள அம்சங்களைப் படைத்து அவரை உள் அன்புடன் வழிபடுவதால் சந்திர பகவானின் அருள் கிட்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/yogam-t.jpg)