வான வெளியில் நவகிரகங்கள் தத்தம் நீள்வட்டப் பாதையில், ஒரு வினாடிகூட தவறாமல் சுழன்றுகொண்டிருக்கின்றன. இவற்றில் ஒளிரும் கிரகங்களாக சூரிய- சந்திர கிரகங்களும்; தாரா கிரகங்களாக குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி கிரகங்களும்; நிழல் கிரகங்களாக ராகு- கேது கிரகங்களும் அமைகின்றன. சூரிய- சந்திர கிரகங்கள் நமது பூமியில் பருவ மாற்றங்களுக்கு அடிப்படையாகவும்; வருடம், மாதம், தேதி குறிப்பதற்கும் பயன்படுகின்றன. இப்படி முக்கியத் துவம் வாய்ந்த கிரகங்களுள் ஒன்றான சந்திரன் மனித வாழ்வின் காரகத்துவ குணங்களைப் பிரதிபலிக்கின்றது.
தாய், மனம், உணர்ச்சிகள், புத்தி, கற்பனைவளம், முகவசீகரம், கவர்ச்சி, ரத்த ஓட்டம், உணவு, நீர்நிலைகள், பயணங்கள், புகழ், ஒளி இப்படிப்பட்டவை நன்கு அமைய வேண்டும் என்பதற் காவே நாம் கோவிலுக் குச் சென்று அர்ச்சனை செய்யும்போதும், வீட்டில் விழாக்க ளைக் கொண்டாடும் போதும் சங்கல்பத்தின்போது, "சந்திரபலம் தரவேண்டும்' என்று வேண்டிக்கொள்கிறோம்.
சந்திரபலம்
ஒருவர் பிறந்த ராசியிலிருந்து, ஒரு சுபகாரியம் நடத்தவேண்டிய தினத்தில் சந்திரன் இருக்கும் ராசி வரை எண்ண வேண்டும். அவை 1 முதல் 12 வரை அமையப் பெறும். அப்படி அமையும்போது நல்ல பலன்களைத் தரும் தினங்களும் பலன்களும் கீழ்க்கண்டவாறு அமையும்.
முதலாவது ராசி- சிறப்பான உடல் ஆரோக்கியம். மூன்றாவது ராசி- பொருள் லாபம்.
ஆறாவது ராசி- அனைத்திலும் வெற்றி, எதிரிகள் தோல்வி.
ஏழாவது ராசி- உடல்நலம் சிறப்பு.
பத்தாவது ராசி- விருப்பம் நிறைவேறும்.
பதினொன்றாவது ராசி- தொழிலில் சிறப்பான முன்னேற் றம்.
எதிர்மறையான பலன்களைத் தரும் தினங்களும், பலன் களும்...
இரண்டாவது ராசி- பொருள் இழப்பு.
நான்காவது ராசி- நோய் பயம், அச்சம்.
ஐந்தாவது ராசி- அனைத்திலும் தோல்வி.
எட்டாவது ராசி- உடல்சோர்வு, மனக் குழப்பம்.
ஒன்பதாவது ராசி- காரியத் தடைகள்.
பன்னிரெண்டா வது ராசி- செலவினங்கள்.
மேற்கூறியவற்றிலிருந்து, சுபமான காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேற எந்த ராசியாக அமையவேண்டுமென்பது தெளிவாக விளங்குகிறது. அத்தகைய நாட்களைத் தேர்வுசெய்து நன்மைகளைப் பெறுவோம்.
செல்: 74485 89113