ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சென்னை அலுவலகத்திற்கு இரண்டு தம்பதியர் வந்தனர். அவர் களது தோற்றமே அவர்களின் செல்வச் செழிப்பைக் காட்டியது.
அவர்களுள் ஒருவர், "ஐயா, என்னுடன் வந்துள்ளவர்கள் எனது தங்கையும், அவளது கணவரும். எங்களி டையே சொந்தம் விட்டுப் போகக்கூடா தென்றும், சொத்துகளும் எங்கள் குடும்பத்திற்குள்ளேயே இருக்கவேண்டு மென்றும் நினைத்து, எனது தங்கை மகளை என் மகனுக்குதான் திருமணம் செய்து வைக்கவேண்டுமென குடும் பத்துப் பெரியவர்களும் நாங்களும், குழந்தைகள் பிறந்தபோதே வாக்கு நிச்சயம் செய்துகொண்டோம்.
எனது மகனும், தங்கை மகளும் ஒருவரையொருவர் விரும்பி, பாசமாகப் பழகிவருகின்றனர். தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்னும் நம்பிக்கையில் உள்ளனர். இப்போது அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கலாம் என செயல்படத் தொடங்கும்போது, புதிதாக ஒரு குழப்பம் உருவாகிவிட்டது'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeevanadi.jpg)
தொடர்ந்து அவர், "இருவருக்கும் திருமணம் செய்துவிடலாமென்று முடி வெடுத்து, மிகப்பெரிய ஒரு ஜோதிடரி டம் சென்று, இருவரின் ஜாதகங்களைக் கொடுத்து, நல்ல முகூர்த்த நாள் குறித்துத் தருமாறு கேட்டோம்.
ஜோதிடரும் இருவரின் ஜாதங் களை வாங்கிப் பார்த்துவிட்டு, "பத்து பொருத்தங்களும், ஜாதகப் பொருத்தமும் பொருந்தி வரவில்லை. இருவருக்கும் திருமணம் செய்யக்கூடாது' என்று கூறிவிட்டார். "ஏதாவது பரிகாரங்கள் இருந்தால் கூறுங்கள்; செய்து விடுகிறோம்' என்றோம். "இந்த தோஷங்கள் பரி காரத்தால் தீர்க்கமுடியாது' என்று கூறிவிட்டார்.
அதைக்கேட்ட எங்களுக்கு மனமே சரியில்லாமல் போனது. வேறுசில ஜோதிடர் களிடம் சென்று பார்த்தோம். ஒருவர் ஜாதகப் பொருத்தம் உள்ளது; ஆனால் பத்துப் பொருத்தம் சரியாகவில்லை. நான்கு பொருத்தம் தான் உள்ளது' என்றார். மற்றொருவர், "திருமணம் செய்துவைத்தால் புத்திர பாக்கியம் இராது' என்றும், இன்னொருவர், "கணவன், மனைவி யிடையே பாசம் குறையும்; கருத்து வேறுபாடு உண்டாகும்' எனவும் கூறிவிட்டார்.
இதனால் திருமணம் செய்யமுடியாமல், காலம் கடந்துகொண்டே போகிறது. எனவே உங்களைத் தேடி வந்தோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் ஓலையில் தோன்றி கூறத் தொடங்கினார்.
"இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்யலாம். ஆனால், அகத்தியன் கூறுவதை மகனைப் பெற்றா தாய் முழுமையாக ஏற்றுக் கொள்ளமாட்டாள். ஏனென்றால் அந்த தாய்க்கு இவன் ஒரேமகன். பொருத்தம் பாக்காமல் திருமணம் செய்து, பின்பு அவர் கள் வாழ்வில் ஏதாவது பிரச்சினை ஏற்பட் டால் என்ன செய்வதென்ற பயம் அந்த தாய்க்கு. ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யவேண்டுமென்று கூறியதே தாய்தான். இந்த குழப்பம் அவளால்தான் ஏற்பட்டது.
இப்போது நான் கூறப்போவதெல்லாம் இந்த இரண்டு குடும்பங்களின் வம்ச முன்னோர்கள் காலத்தில் நடந்துள்ளதா என்று கேள். அகத்தியன் கூறுவது போல் நடந்திருந்தால், இவர்களின் பிள்ளைகளுக் குத் திருமணம் செய்யலாம். இல்லையென் றால் திருமணம் செய்யவேண்டாம்'' என்றவர், இரண்டு குடும்பங்களின் தந்தை, பாட்டனார் என வம்ச முன்னோர்கள் கால வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கூறினார்.
அவற்றையெல்லாம் கேட்டவர்கள், "ஐயா, நீங்கள் கூறியவற்றில் ஒரு சில நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை; ஆனால் 80 சதவிகிதம், ஜீவநாடியில் அகத்தியர் சொன்னபடியே நடந்துள்ளது'' என கூறினார்கள்.
அந்த தாயைப் பார்த்து, "அம்மா, உங்கள் மகனுக்கு, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்க சம்மதமா?'' என்று கேட்டேன். அந்த தாயும், "ஐயா, நாங்கள் முன்பு நிச்சயித்தபடியும், அகத்தியர் வாக்குப்படியும் திருமணம் செய்துவைக்க பூரண சம்மதம்'' என்று கூறிவிட்டு, "இரு வருக்கும் திருமணம் செய்துவைத்தால் புத்திரதோஷம் செயல்பட்டு குழந்தை பாக்கியம் பாதிக்கும் என்று கூறினார்களே, இவர்களுக்கு குழந்தைகள் பிறக்குமா?'' என்றார் அந்தத் தாய்.
"அம்மா, இதனைப் பற்றியும் அகத்தி யரிடமே கேட்டுவிடுவோம்'' என்று கூறி, ஓலை யைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
"மகளே இந்த பூமியில், எந்த மண்ணி லும் நல்லவிதையை விதைத்தால் அந்த மண் அந்த விதையை வளரச் செய்துவிடும். அதேபோன்றுதான் பூமியில் பிறந்து பூப்பெய்திய எந்தப் பெண்ணும் மலடியல்ல. ஆணின் விந்தில் குறைபாடு இருந்தால்தான் குழந்தை பிறக்காது. குழந்தைகள் பிறக்காததற்கு கடவுளோ, கிரகமோ, பெண்ணோ காரணமல்ல. ஆண்தான் காரணம்.
உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறப்பார்கள். இவர்களுக்கு முகூர்த்த நாள், பிரம்ம முகூர்த்தம், வளர்பிறை, தேய்பிறை, நட்சத்திரம் என எதையும் பார்த்து திருமணம் செய்துவைக்கவேண்டாம். நான்கூறும் நாளில் திருமணம் செய்துவைத்து, தம்பதியரை உறவுகொள்ளச் சொல்.
அடுத்த பத்தாவது மாதம், பேரக்குழந்தை பிறந்து உங்கள் கைகளில் தவழும்; வம்சம் விருத்தியாகும்'' என கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.
"ஐயா, அகத்தியர் வாக்கினால் எங்கள் மனக்கவலையும், குழப்பமும் தீர்ந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம். நாங்கள் பலன் கேட்ட ஜோதிடர்கள் ஒரே ஜாதகத்திற்கு வேறுவிதமான பலன்களைக் கூறினார்களே, அதற்குக் காரணம் என்ன?'' என்றார்.
"ஐயா, வடபுலத்தவர்களால் உருவாக் கப்பட்ட வேதமுறை கணித ஜோதிடத்தில் வராஹமிகிரர், பராசரர் போன்ற பல முனிவர்கள், ரிஷிகளின் பெயரால் ஜோதிட பலன் கூறும்முறை கூறப்பட்டுள்ளது. அவற்றின்மூலம் பலன்கூறும் முறையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக உள்ளது. ஒவ்வொரு ஜோதிடரும் எந்த ஜோதிடமுறையைப் படித்தார்களோ, அந்த முறையில் பலன் கூறுகிறார்கள். இந்த நிலைக்கு ஜோதிடர்கள் காரணமல்ல; கணித ஜோதிடம்தான் காரணம். இதேபோன்று பஞ்சாங்கத்திலும் வாக்கியமுறை, திருக் கணிதமுறை என்று வேறுபாடு உள்ளது'' என்றேன்.
பத்துப் பொருத்தம் கூறும் முரண்பாடு களைப் பற்றிய ஆய்வில் அறிந்த உண்மை களை அடுத்த இதழில் அறிவோம்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/jeevanadi-t.jpg)