சுக்கிரனின் துலாம் ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகரின் உடல்நலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். சிலருக்கு குடும்பத் தில் உள்ளவர்களுடன் மன வேறுபாடிருக்கும். எனி னும் துணிச்சலாகவும் சாதுரியத்துடனும் செயல் பட்டு, பிறர் மதிக்குமளவுக்கு வளர்வார்கள்.
2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்தால் பணத்தை சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். பணம் சம்பாதிப்பதில் தடங்கல்கள் ஏற்படும். எனினும் ஜாதகர் பல குறுக்குவழிகளைக் கையாண்டு பணத்தை எப்படியும் சம்பாதித்துவிடுவார்.
3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் கேது இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்புகளால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து பணத்தைச் சம்பாதிப்பார்.
4-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது இருந்தால், ஜாதகரின் தாயாரின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் தடங்கல் உண்டாகும். பணக் கஷ்டம் இருக்கும். அதனால் மனக்கஷ்டம் ஏற்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kethu_4.jpg)
5-ஆம் பாவத்தில் கேது பகவான் கும்ப ராசியில் இருந்தால் குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு குழந்தையே இருக்காது. பிள்ளைகள் இருந்தால் அவர்களால் பிரச்சினை உண்டாகும். படிப்பு விஷயத்தில் தடைகள் ஏற்படும்.
6-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் தன் பகைவர்களை தைரியமாக சந்திப்பார். நோய்களை தைரியமாக எதிர்கொள்வார். ஜாதகருக்கு தன் தாய் மாமாவுடன் சுமாரான உறவிருக்கும்.
7-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடிருக்கும். பண வருகையில் தடை உண்டாகும். சிலருக்கு சிறுநீர் கழிக்குமிடத்தில் பிரச்சினை இருக்கும். இல்வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும்.
8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு எதிர்பாராத நோயின் பாதிப்பிருக்கும். வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும். எனினும் ஜாதகர் பல ரகசிய செயல்களில் ஈடுபட்டுத் தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார்.
9-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது பகவான் இருந்தால் அதிர்ஷ்டத்தில் சிறிய தடைகள் இருக்கும். தர்மச் செயல்கள் செய்வதில் தடங்கல்கள் உண்டாகும். சில நேரங்களில் குடும்பத்தில் உள்ளவர்களால் பிரச்சினைகள் உண்டாகும்.
10-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடனான உறவு சுமாராகவே இருக்கும்.
அரசாங்க விஷயத்தில் பிரச்சினை ஏற்படும். அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். வியாபாரத்தில் ஏதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்காக ஜாதகர் நீண்ட பயணத்தை மேற்கொள்வார்.
11-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது பகவான் இருந்தால் பணம் வருவதில் தடை இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து, பல ரகசிய வேலைகளில் ஈடுபட்டு பணத்தைச் சம்பாதிப்பார்.
12-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிப்பார்.
ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். அதையும் புத்திக்கூர்மையையும் பயன்படுத்தி அவர் பணம் சம்பாதிப்பார்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/kethu-t.jpg)