சிம்மத்தில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற் றத்துடன் இருப்பார். உடல்நலத்தில் சிறிய பிரச்சினை இருக்கும். சிலருக்கு விபத்து காரணமாக தலையில் காயம் உண்டாகும். சிலருக்கு காயத்தால் ஏற்பட்ட அடையாளம் சரீரத்தில் இருக்கும்.
ஜாதகரின் மனதில் கவலை இருக்கும். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தைரியமாக இருப்பதைப்போல நடந்து கொள்வார். தன் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்.
கேது பகவான் 2-ஆம் பாவத்தில் கன்னி ராசியில் இருந்தால் பணம் வருவதில் பிரச்சினை இருக்கும். அதனால் மனதில் கவலை உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/simmam_3.jpg)
அதற்காக அடிக்கடி பயணம் செய்யவேண்டிய நிலை உண்டாகும்.
3-ஆம் பாவத்தில் கேது பகவான் சுக்கிர னின் துலா ராசியில் இருந்தால் உடன்பிறப்பு களுடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் மிகுந்த தைரியசாலியாக இருப்பார். தன் செயல்களை அருமையாக முடிப்பார். சாதுர்யமாக செயல்பட்டு வெற்றியைக் காண்பார். நன்கு பணம் சம்பாதிப்பார்.
4-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்ததால் ஜாதகரின் அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். அவர் தான் பிறந்த இடத்திலிருந்து வெளியே சென்று பணம் சம்பாதிப்பார். அதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
5-ஆம் பாவத்தில் கேது பகவான் குரு வின் தனுசு ராசியில் இருந்தால் வாரிசுகள் சந்தோஷமாக இருப்பார் கள். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். தைரியம் குறைவாக இருக்கும். எப்போதும் மனக் குழப்பத்துடன் காணப் படுவார்.
6-ஆம் பாவத்தில் கேது பகவான் சனியின் மகர ராசியில் இருந்தால் ஜாதகர் தன் கடுமையான உழைப்பால் எதிரிகளை வெல்வார். தைரியமாக செயல்பட்டு பணம் சம்பாதிப்பார். குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றும். செலவுகள் அதிகமாக இருக்கும். எனினும் அவர் அனைவரையும் காப்பாற்றுவார்.
7-ஆம் பாவத்தில் கேது பகவான் சனி பகவானின் கும்ப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு மனைவியுடன் உள்ள உறவில் சிறிய குறை இருக்கும். வர்த்தகத்தில் பல தடைகளைக் கடந்து அவர் வெற்றிபெறுவார். தைரியமாக செயல்பட்டு தன்னை நம்பியிருப் பவர்களைக் காப்பாற்றுவார்.
8-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் கடுமையான கஷ்டங்களைச் சந்திக்க நேரும். பூர்வீக சொத்தில் சில பிரச்சினைகள் இருக் கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும்.
9-ஆம் பாவத்தில் மேஷ ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைப்பார். உடன்பிறப்புகளுடனான உறவு சரியாக இருக்காது. அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்.
10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடனான உறவில் சில சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார்.
அரசாங்க விஷயங்களில் லாபம் கிடைக்கும். பல சாகச செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்.
11-ஆம் பாவத்தில் கேது பகவான் புதனின் மிதுன ராசியில் இருந்தால் பணம் வருவதில் சில சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
அவருக்கு எதிரிகள் இருப் பார்கள். எனினும் தைரியமாக செயல்பட்டு வெற்றிபெறுவார். ஆதாயம் அடையும் விஷயத் தில் எது நல்லது- எது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மாட்டார்.
12-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். எனினும் அவர் தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் பல செயல்களைச் செய்வார். கடுமையாக உழைத்து, பல சாதுரியமான வேலைகளைச் செய்து வெற்றி பெறுவார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/simmam-t_0.jpg)