பிரசன்னம் பார்க்கவந்தவரின் முகத்தில் கவலையும், கலவரமும் குடிகொண்டிருந்தன. திடீரென்று தன் மனைவியின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இரவு நேரங்களில் அவருடைய அழுகுரல், குடும்பத்தில் உள்ளோருக்கு பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது என்றும் தன் ஆற்றாமையை அழுது தீர்த்தார். பொறுமையுடன் கேட்டறிந்த கிருஷ்ணன் நம்பூதிரி, முல்லக்கல் பகவதியை தியானம் செய்து, தன் பிரசன்னத்தைத் தொடங்கினார்.

சோழி லக்னத்திற்கு இரண்டில் ராகு அமைந்து, சனி, செவ்வாயின் பார்வையைப் பெற்றதால் இது செய்வினையால் வந்த தொல்லை என்பது உறுதியானது. பரம்பரை சொத்தை அடைவதற்காக, உறவினரால் செய்யப்பட்டது என்ற உண்மையும் வெளியானது. எட்டுக்கை காளியம்மனாகிய கொல்லிப் பாவைக்கு, அமாவாசையில் விசேஷ பூஜைகள் செய்தால் செய்வினையால் வந்த தோஷம் நீங்குமென்று அறிவுறுத்தப் பட்டது. பிரசன்ன ஆரூடத்தின்மூலம் பரிகாரங்களைக் கண்டறிந்தால், தீய மந்திர சக்திகளையும் தவிடுபொடியாக்கலாமென் பதே உண்மை.

d

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

Advertisment

ஜனன ஜாதகத்தைப் பரிசீலிக்கும்போது அந்த ஜாதகரின் ஆயுள் நிர்ணயத்தை செய்தபின்னரே, மற்ற ஜாதக சிறப்புகளை கேரள ஜோதிடர்கள் ஆராய்கிறார்கள்.

அதுவே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஆயுள் நிர்ணயம் செய்யாமல் ஜாதகம் பார்ப்பது, பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பது போல், பயனற்றுப்போகும். பாலாரிஷ்டம் (6 வயதுவரை), அற்ப ஆயுள் (40 வரை), மத்திம ஆயுள் (60 வயதுவரை), தீர்க்காயுள் (90 வயதுக்குமேல் வாழ்வது) என்ற பகுப்புகளால் ஆயுளைத் தீர்மானிக்கிறார்கள். ஒருவரின் ஆயுளை நிர்ணயிக்கும் பாவம் லக்னத் திற்கு எட்டாம் பாவமேயாகும்.ஆயுர்தாயம் செய்வதில் பல அணுகுமுறைகள் உண்டு என்றாலும், எட்டாம் பாவத்தில் அமரும் கிரகங்களைக்கொண்டும் எளியமுறையில் அறியலாம்.

சூரியன்: 8-ஆம் வீடு மறைவு ஸ்தானமாதலால் சூரியன் அங்கு மறைந்து விடுகிறார்.

Advertisment

சூரியன் சுபகிரகங்களின் தொடர்புபெறாமல் போனால், ஆயுள் குறைவு.

சந்திரன்: எட்டம் பாவாதிபதி தசையிலோ, சந்திர தசையிலோ ஜாதருக்கு நீரில் கண்டமும், மாரகமும் ஏற்படும்.

செவ்வாய்: விபத்துகளால் மரணம் ஏற்படக்கூடும்.

புதன்: கெடுதல் இல்லை.

குரு: தீர்க்காயுள். உபாதையற்ற மரணம் ஏற்படும். ஜாதகருக்கு, ஆறாம் தசையின் அதிபதியாக குரு வந்தால், மாரகம் தருவார்.

சுக்கிரன்: லக்னத்திற்கு, பாதகாதிபதி யாகவோ, மாரகாதிபதியாகவோ அமையா விட்டால், ஆயுளுக்கு ஆபத்தில்லை.

சனி: நீண்ட ஆயுள் உண்டு.

ராகு: ராகுவுடன் சந்திரனும் கூடி, எட்டாம் பாவத் தொடர்பும், சனியின் பார்வையும் இருந்தால் மனநோயால் மரணமடைவார்.

கேது: கேதுவுக்கு அசுபர்கள் சேர்க்கை இருப்பின். சில சமயங்களில், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தைக் கொடுப்பார்.

மாந்தி எட்டில் இருக்க, தோல்வியால் உடல் ஆரோக்கியம் கெட்டு, மறைமுக நோய் உண்டாகும்.

சாதனை சாதகமாகுமா?

கேள்வி: கடந்த பத்து வருடங்களாக, ஒரு குருவின் உபதேசம் பெற்று தேவதா உபாசனை செய்துவருகிறேன். இன்று வரை என்னால் வெற்றி பெறமுடிய வில்லை. இதன்காரணத்தை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அறிய விரும்புகிறேன்.

-தியாகராஜன், கும்பகோணம்.

(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 102; உத்திரட்டாதி- 2-ஆம் பாதம்)

* பிரசன்னம் கொடுத்த எண்- 102, சனியின் உத்திரட்டாதி இரண்டாம் பாதம், சோழி லக்னம் மீனமாக அமைந்தது.

* சோழி லக்னத்திற்கு, ஐந்தாம் பாவாதி பதியாகிய சந்திரன் ஒன்பதில் இருக்கிறது. ஆதலால் இந்த பிரசன்னம் மந்திர உபதேசம் சம்பந்தமான கேள்வியானது.

* சந்திரன் காலபுருஷ லக்னத்திற்கு எட்டில் கேதுவோடு சேர்ந்து பெண் ராசியில் அமைவது, உபாசனைக்கான தேவதை பெண் தேவதை என்று தெரிகிறது.

* மேலும் சோழி லக்னத் திற்கு ஒன்பதாமிடமாகவும், காலபுருஷ லக்னத்திற்கு எட்டாமிடமாகவும் அமைவது விருச்சிக ராசியாவதால், செய்யும் உபாசனை கருப்பு மந்திரம் என்றும் கொள்ள வேண்டும்.

* பத்தாம் அதிபதி குரு பாதகத்தில் நவாம்சத்திலும், ராசியில் நீசமாக இருப்பதும், மந்திரப் பிரயோகம் செய்யும் முறை தவறென்று தெரிகிறது.

* மாந்த்ரீகம் சம்பந்தமான இந்த பிரயோகமுறை முழுவதும் தவறாக போதிக்கப்பட்டுள்ளது. தவறான பலிபூஜையும் போதிக்கப்பட்டுள்ளது.

* மேலும் கன்னியில் இந்த அமைப்புள் ளதும் இதை உறுதிசெய்யும்.

* ஒன்பதாம் அதிபதி செவ்வாய் ராகுவோடு சேர்ந்து நவாம்ச சக்கரத்தில், கடக நீசம் பெற்றுள்ளது. இதனால் பூஜிக்கப்படும்முறை வாமாச்சாரத்தைக் காட்டுகிறது. (உயிர்பலி, மது, மாமிசம் முதலியன வைத்து வழிபாடு செய்வது.)

* மந்திரப் பிரயோக முறையை சரியாகக் கற்று, அஸ்திர, சஸ்திர பந்தத்தை சரியாகச் செய்துவந்தால் இன்னும் இரண்டு வருடங்களில், குரு மீனம் வந்த பின்பு சமாதியடைந்த ஒரு குருவின் ஆன்மாவே மந்திர சித்தியை அளிக்கும்.

பரிகாரம்

* கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ ஆலயத்தில்‌ சமாதிபூண்டுள்ள, கருவூர் சித்தரை வழிபட்டால், மந்திர சித்தியுண்டாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636