ன்று நடுநிசியைக் கடந்தும், அவனுக்கு உறக்கம் வரவில்லை.

அந்த நள்ளிர வில் நாய்கள் விழித்துக் குரைக்க ஆரம்பித்தன. தெருநாய்களின் ஊளை யிடும் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஜாமக் கோடங்கியின் உடுக்கையொலி உறுமியது. அந்த வீட்டு வாசலில் நின்ற கோடங்கி, "கன்னிப் பெண் ஆவி கதவோரம் நிக்குது; ஆம்பளைங்க பத்திரம், ஆம்பிளைங்க பத்திரம்' என்று ஜக்கம்மாவின் வாக்கைச் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அந்த குடுகுடுப்பைக் காரரைக் காலையில் சந்தித்து சேதிகேட்க எண்ணியவன், ஆழ்ந்த உறக்கத்தில் கரைந்தான். மறுநாள் எவ்வளவு தேடியும் அந்த கோடங்கியைக் காணமுடியவில்லை. மனக்குழப்பம் நீங்க பிரசன்ன ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரியை சந்தித்தான். தன்னுடைய குடும்பத்திலுள்ள ஆண் வாரிசுகள் விபத்தில் சிக்குவதும், நோய்வாய்படுவதுமாக துன்பப்படுகிறார்கள். அதன் காரணத்தைக் கண்டறிந்து பரிகாரம் செய்ய, பிரசன்னம் பார்க்கவேண்டும் என்று விண்ணப்பித்தான்.

kj

Advertisment

ஆற்றுக்கால் பகவதியம்மனைத் தொழுது தன் பிரசன்னத் தைத் தொடங்கினார். கிருஷ்ணன் நம்பூதிரி. ""பிரசன்ன ஜாதகத்தில், எட்டில் உச்ச செவ்வாயும், அதற்கு நான்காம் வீட்டில் நீசமான சனி இருப்பதாலும், பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலிருந்து, குரு, ராகுவுடன் சேர்ந்திருப்பதாலும், உங்கள் குடும்பத்தில், துர்மரணமடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் ஆவியே தொல்லைத் தருகிறது. தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுவதே சிறந்த பரிகாரம்'' என்று கூறிமுடித்தார். தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவத்தை நேரில் பார்த்ததுபோல் துல்லிய மாகக் கணித்து, தன்னைப் பாதுகாத்த பிரசன்ன ஜோதிடரை வணங்கினான்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு பிரசன்ன ஜோதிடத்தில், திரேகாணத்தைக் கணக்கில்கொண்டு, சர்ப்ப திரேகாணத்தையும், சதுர் பாத திரேகாணத்தையும், ஆயுத திரேகாணத்தையும், பட்சி திரேகாணத்தையும், பிரித்துப் பார்த்துப் பலன்காணும் முறை, கேரள ஜோதிடத்தின் சிறப்பைப் பறைசாற்றும்.

கேரள ஜோதிடத்தில்

ஜாதகரின் ஆயுள் நிர்ணயம் செய்யும் விசேஷ கணிதம் சிறப்பானது. எட்டாம் பாவத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு கிரகமும் ஜாதகருக்குத் தரும் ஆயுள் பாக்கியத்தைக் கணக்கில் கொண்டு மாரக தசையை முடிவுசெய்வதால் துல்லியமாக அமைகிறது.

ஜாதகரின் பன்னிரண்டாம் பாவத்தை ஆராய்ந்து ஜாதகரின் வாழ்வின் முடிவையும், ஆறாம் பாவத்தைக்கொண்டு ஜாதகரின் நோய்க்குக் காரகனாக அமையப் போகும் கிரகத்தையும் ஆராய்வது கேரள ஜோதிடத்தின் மனிமகுடம் என்றால் மிகையாகாது.

காதல் கனியுமா? திருமணம் நடக்குமா?

கேள்வி: என் அலுவகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை மணக்க விரும்புகிறேன். எங்கள் காதல் கைகூடுமா?

-விநோத், சென்னை.

(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 20; மிருகசிரீடம்- 4-ஆம் பாதம்) ப் லக்னம் மீனம், சோழி லக்னம்

மிதுனம்.

* மிதுனம், காதலைக் குறிக்கும் ராசி.

* சோழிப் பிரசன்னம் அமைந்த மிருகசீரிட நட்சத்திரத்தின் அதிபதி யாகிய செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் அமைவது, எதிர்மறையான பலனையே காட்டுகிறது.

* சோழி லக்னத்திற்கு இரண்டில் மாந்தி அமைவது, குடும்பத்தில் குழப்பத்தை உண்டாவதற்கான வாய்ப்பு களைக் காட்டுகிறது.

* லக்னாதிபதி பாதக ஸ்தானாதிபதியாகிய குருவுடன் இணைந்து எட்டாம் வீட்டிலிருப்பது கெடுதலைக் காட்டுகிறது.

* ஏழில் சந்திரன் என்றால் பெண்ணால் அல்லது பெண்களால் இழப்பு என்பது பொது விதி.

* பாவாத்பாவ கணிதப்படி, சோழி லக்னத் திற்கு ஏழாம் வீட்டிற்கு நான்காம் அதிபதி, அதற்கு இரண்டில் அமர்வது, நீங்கள் விரும்பும் பெண், மன உறுதியில்லாதவர் என்பதைத் தெளிவாக்குகிறது.

* சோழி லக்னத்திற்கு பன்னிரண் டாமிடமாகிய சுக்கிரனின் வீட்டில் செவ்வாய், ராகுவின் இணைவு, அதீத ஆசையையும், மரபுமீறிய நட்பையும் குறிக்கும்.

* சோழி லக்னத்திற்கு ஏழாமிடத்தில் செவ்வாயின் எட்டாம் பார்வை விழுவது, மணம் செய்யாமல் சேர்ந்துவாழ விரும்புவதை மட்டுமே வெளிப்படுத்து கிறது.

* சோழி லக்னத்தின் எட்டில் சனி ஆட்சி பெறுவது, இந்த திருமண முயற்சி வெற்றி பெறாது என்பதை உறுதிப்படுத்துகிறது. இதை மீறித்திருமணம் செய்தால் பெண்ணால் ஏமாற்றப்பட்டு மிகுந்த மனக்கஷ்டமும், பொருள் நஷ்டமும் உண்டாகும்.

பரிகாரம்

* மயிலம் மற்றும் திருத்தணிகை சென்று சுப்பிரமணியரைத் தொழுதால் மன அமைதி ஏற்படும்.

* திருநீர்மலை சென்று பெருமாளை வழிபட்டால், இந்தப் பிரச்சினையிலிருந்து விலகி, நல்ல பெண் திருமணத்திற்கு அமைவாள்.

(தொடரும்)

செல்: 63819 58636