கலைமகளும் அலைமகளும் ஒருசேர அமர்ந்திருந்த முகத்தைப் பார்த்ததுமே புரிந்தது- வந்திருப்பவர் கல்வியிலும், செல்வத்திலும் நிறைவானவர் என்று. வந்தவர் கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கினார். சில ஆண்டுகளாக தன் குடும்பத்திற்கு திடீர்விபத்துகளும், நோயும் தொல்லை தருவதாகவும், அதன்காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்கவந்த தாக தன் வரவின் காரணத்தைத் தெரிவித்தார். செங்கன்னூர் பகவதியை தொழுது பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன லக்னம் சிம்மமாக அமைந்து சூரிய, சந்திரர் பாதகமாய் மேஷத்தில் அமர்ந்ததால், அது பெற்றோர் சாபத்தால் வந்த வினையென்பது புரிந்தது. ஒன்பதாம் வீட்டோன் ஆறாம் அதிபதியின் நடத்திரத்தில் நின்றதா லும் அந்த உண்மை உறுதியானது. பெற்றோ ரின் சாபத்தால் இந்த தொல்லைகள் ஏற்பட்டுள்ளதை வெளிப்படையாகத் தெரிவித்தார். பிரசன் னம் கேட்கவந்தவரின் கண்கள் கலங்கின. "என் மனைவியின் அறிவுறுத்தலால், பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டேன்.
அவர்களின் இறுதிக் காலமும் அங்கேயே முடிந்துவிட்டது. அந்த பாவத்தால் வந்த பழியை இப்போது சுமக்கிறேன்' என்று தன் வருத்தத்தைப் பதிவுசெய்தார். முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்வதே இந்த பாவத்திற்குப் பரிகாரமாகத் தெரிவிக் கப்பட்டது. அறிவுக் குருடனாயிருந்த தனக்கு ஒளி தந்த பிரசன்ன ஜோதிடத்தை வணங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/guruvayur.jpg)
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
கேரள ஜோதிடர்கள், பிரசன்ன லக்னத்தில், "தாஜித யோகங்கள்' எனும் சில சிறப்பான யோகங்களைப் பொருத்திப் பார்க்கிறார்கள்.
* இதசல யோகம்- வேகமாக இயங்கும் கிரகம், குறைவான அளவு பாகை யிலிருந்து அது மெதுவாக இயங்கும் கிரகத்தின் பின் அமைந்திருப்பது இதசல யோகம். இந்த யோகம், பிரசன்ன லக்னத்திற்கு பத்தாம் பாவத்தில் அமைந்தால் நன்மையையும், நான்கு அல்லது ஏழாம் பாவத் தில் அமைந்தால் தீமை யையும் சுட்டிக்காட்டும். இதசல யோகம், அரை பாகை வித்தியாசத்தில் அமைந்தால் அது முதசில யோகம். வேகமாக இயங்கும் கிரகம் சந்திரன்; மெதுவாக சஞ்சரிக்கும் கிரகம் சனி.
* முசரிபா யோகம்- வேகமாக இயங்கும் கிரகம், மெதுவாக இயங்கும் கிரகத்தை முந்திச்செல்வதே முசரிபா யோகம்.
* நக்த யோகம்- வேகமாக நகரும் கிரகத்தின்மூலம் தொடர்பில்லாத இருவேறு கிரகங்கள், பார்வைத்தொடர்பு கொள்வதே நக்த யோகம்.செயற்கைக் கோள்மூலம் இரு வேறு பகுதியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்வது போல், இதன் பலன் அறிமுகமில்லாதவரால் அதிஷ்டம் வரும்.
* யாமய யோகம்- மெதுவாக நகரும் கிரகத்தின்மூலம் தொடர்பில்லாத இரு வேறு கிரகங்கள் பார்வைத் தொடர்புகொள்வதே யாமய யோகம். இதன் பலன் அறிமுகமில்லாதவரால் துன்பம் ஏற்படும்.
* காம்பூல யோகம்- இரண்டு கிரகங்களுக்கிடையில் இதசல யோகம் அமைந்து, அவற்றில் ஒரு கிரகம் சந்திரனின் நெருக்கமான தொடர் பைப் பெற்றால் அது காம்பூல யோகம்.
மறு வாழ்வு மலருமா?
கேள்வி: எனக் குத் திருமணமாகி இரண்டு வருடங்களில் மணவாழ்க்கை முறிந்து விட்டது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கையில் மகிழ்ச்சி உன்டாகுமா? அல்லது மறுபடியும் விவாகரத்தில் முடியுமா என்பதை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.
-வித்யாசாகர், ஈரோடு.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 54; சித்திரை- 2).
*சோழி லக்னம் சித்திரை 2-ஆம் பாதத்தில் கன்னி ராசியில் வர்கோத்தம மாகிறது.
*லக்னத்தின் ஏழாம் அதிபதி ஆறில் இருப்பது மணமுறிவைக் காட்டுகிறது, ஜாதகர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத் தானவர்.
*நவாம்சத்தில் குரு, துலாத்தில் இரண்டாமிடத் தில் அமர்வது தோஷமே.
*ஏழாமிடத்தில் சூரிய, சந்திரர், புதன் நீசமாகி இருப்பது, ஜாதகர் தனக்கு நேர்ந்த துயரத்திலிருந்து மீளவில்லை என்று தெரிகிறது.
*ஏழில் சந்திரன் இருப்பது பெண்ணால் இழப்பைக் காட்டுகிறது.
*கேள்விகேட்ட நாள் அமாவாசை யாக வருவதும், பாதக ஸ்தானத்தில் சூரிய சந்திரர் சேர்க்கை இருப்பதும், ஜாதகருக்கு பித்ரு தோஷத்தைக் காட்டுகிறது.
*மாந்தியின் பார்வை ஒன்பதாம் இடத்தில் விழுவதும் பித்ரு தோஷத்தை உறுதி செய்கிறது.
*இரண்டாம் திருமணத் திற்கான வாய்ப்பை, ஒன்பதாம் இடத்தைக் கொண்டுபார்க்க, அங்கு ராகு, செவ்வாய் சேர்க்கை இருப்பதால், தோஷம் வலுவாக இருக்கிறது.
*மேலும் சுக்கிரன் தன் இடத்திற்கு விரயத்தில் இருப்பதும், செவ்வாயோடு பரிவர்த்தனை ஆவதாலும், பரிகாரம் செய்தால்தான் மணவாழ்க்கை மேன்மை யுறும்.
பரிகாரம்
ப் திருப்புல்லானி சென்று முறையாக பிதுர்தோஷப் பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.
ப் திருச்செந்தூர் முருகனுக்கு பூஜைகள் செய்தபின், நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட மறுவாழ்வு மலரும்.
(தொடரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/guruvayur-t.jpg)