பிரசன்ன ஆரூடம் கேட்கவந்தவர் கண்கள் கலங்கி, நிலைகுலைந்துபோய் சோர்ந்து காணப்பட்டார். தங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் நன்கு படித்து வசதியாக உள்ளார்கள். என்றும், ஆனாலும் காரணமில்லாத விரோதமும், குழப்பமும் நிலவுகிறது; சில ஆண்டுகளுக்கு முன்வரை மகிழ்ச்சியாக இருந்த எங்கள் குடும்பம் திடீரென்று மாறியதன் காரணத்தையும், அதற்கான பரிகாரத்தையும் அறிய விரும்புகிறேன் என்றும் புலம்பினார்.
செட்டிக்குளங்கரை பகவதி யைத் தொழுது பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், பூரட்டாதி இரண்டாம் பாதத்தில் கும்ப ராசியில் அமைந்தது. அது மேஷத்திற்கு பாதகம் என்பதால் பிரசன்னம் பார்க்கவந்தவர் தன் இளைய சகோதரருக்கு பாதகமான செயலைச் செய்துள்ளார் என்றறியப்பட்டது. நவாம்சத் தில் ரிஷப லக்னம் அமைந்து அதற்குப் பாதகமான மகரத்தைக் காட்டியதால் பித்ரு கர்மாவில் குறையிருப்பதைக் காட்டியது. கோட் சார கிரக சஞ்சாரங் களையும் கொண்டு கணித்தபோது, பிரசன்னம் பார்க்க வந்தவர் இறந்த தன் இளைய சகோதரனுக்கு அந்திம காரியங்களை சரிவர செய்யத் தவறிவிட்டார் என்பது தெளிவானது. அதனால் ஏற்பட்ட தோஷமே குடும்பக் குழப்பத்திற்குக் காரணம் என்ற உண்மை அறியப்பட்டது.
பிரசன்னம் பார்க்கவந்தவர் அதிர்ந்துபோனார். தன் இளைய சகோதரரின் குடும்பத்தாருடன் ஏற்பட்ட மனவேறுபாட்டால் காரியங்களை முதல்நாள் மட்டும் செய்துவிட்டு விலகிவிட்டதாகவும், முழுமையாக முடிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். ராமநாதபுரம்- திருப்புள்ளானி எனுமிடத்தில் விடுபட்ட காரியங்களை முடித்துக்கொண்டு, தர்ப்ப சயனம் செய்யும் பெருமாளை வழிபட்டால் தோஷம் நீங்குமென்று அறிவுறுத்தப்பட்டது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பிரசன்ன ஜோதிடத்தில் முக்கியமாக நோக்கப்படுவது சரம் பார்த்தல் எனும் உயிர்மூச்சுக் கணிதம். பிரசன்னம் பார்க்கும் ஜோதிடருக்கு சுவாசம் சூரியகலையில் ஓடுகிறதா? சந்திர கலையில் ஓடுகிறதா என்பதைக்கொண்டு பலன் சொல்லும் முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பம்சம். கல்வி கற்றல், மந்திர தீட்சை போன்றவற்றைப் பற்றிய கேள்வி அமையும்போது சூரியகலை ஓடினால் வெற்றியென்றும் வெளிநாட்டுப் பயணம், மருத்துவ சிகிச்சை போன்றவற்றைப் பற்றிய கேள்வி அமையும்போது சந்திர கலை ஓடினால் வெற்றியென்றும் பொருள் கொள்ளலாம். பிரசன்ன ஜோதிடப் பரிட்சையில் ஞான சரத்தைக்கொண்டு பலன்காணும் முறையை கேரள ஜோதிடர்கள் பின்பற்றுகிறார்கள்.
கேரள ஜோதிடர்கள் பிரசன்னம் பார்க்கும் காலத்தில் கீழ்க்கண்ட அணுகு முறையைக் கையாளுகிறார்கள். அதுவே, துல்லியமான பலன்களைக் காண வழிவகுக் கிறது.
* சோழி லக்னத்திற்கும், பிரசன்ன காலத்தில் உதயமாகும் லக்னத்திற்குமுள்ள தொடர்பினைக் கண்டறிவது முக்கியமாகும்.
* சோழி லக்னத்திற்கும் பிரசன்னகாலத்தில் சந்திரன் அமைந்த நவாம்சத்திற்குமுள்ள தொடர்பை ஆராய்வதால் பிரசன்னம் கேட்கவந்தவரின் எண்ணவோட்டத்தை அறியலாம்.
* சோழி லக்னத்திற்கும் பிரசன்னகாலத்தில் சூரியன் நின்ற நவாம் சத்தைக்கொன்டு கேட்கப்படும் கேள்வியின் வெற்றி- தோல்வியை நிர்ணயம் செய்யமுடியும். இதேபோல், குருவைக்கொண்டு, ஜாதகருக்குக் கிடைக்கும் தெய்வத்தின் அருளையும், செவ்வாயைக்கொண்டு ஜாதகரின் மன உறுதியையும் அறிந்து கொள்ளமுடியும்.
சாதகமான தீர்ப்பு வருமா?
கேள்வி: என் பூர்வீக சொத்தை எங்கள் உறவினர்கள் சதிசெய்து அபகரிக்க முயல்கி றார்கள். இப்போது இந்த பிரச்சனை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் எனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.
இந்த சட்டப்போராட்டத்தில் நான் வெற்றிபெறுவேனா? அதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பிரசன்ன ஆரூடத்தின்மூலம் கண்டறிந்து கூமுடியுமா?
-ஞானசேகர், திருவள்ளூர்.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 101; உத்ரட்டாதி முதல் பாதம், சிம்ம நவாம்சம்)
* உதய லக்னமும் பிரசன்ன லக்னமும் ஆறு, எட்டாக வருவதால் குலதெய்வ சாபமும் சத்ரு தோஷமும் இருக்கின்றன.
* குரு ராசியில் அவிட்டம் முதல் பாதத்திலும், நவாம்சத்தில் சிம்மத்திலும் இருப்பது பாதகம்.
* சோழி லக்னம் அமையும் சிம்மத்திற்கு விருச்சிகம் நான்காம் பாவமாக இருப்ப தும், இந்த பாவத்திற்கு விருச்சிகமே மகாபாதகமாக இருப்பதும் ஒரு இழப்பைக் காட்டுகிறது.
* கேது நிற்கும் நட்சத்திரம் கேட்டை. புதன் இரண்டு மற்றும் பதினொன்றுக்கு அதிபதி- பண இழப்பைக் காட்டும்.
* நவாம்சத்தில் புதன் துலாத்திலேயே இருப்பது வழக்கைக் காண்பிக்கும். வழக்கில் ஆவணங்களில் கோளாறு இருப்பதும் தெரிகிறது.
* சிம்ம லக்னத்திற்கு நில காரகன் செவ்வாயே நான்கு மற்றும் ஒன்பதாக வருகிறான். செவ்வாயே பாதகாதிபதி. ராசியில் பாதகத்தில் இருக்கிறார். நிலம் பாதகத்தை மட்டுமே கொடுக்கும். நான்காம் அதிபதி செவ்வாய், அம்சத்தில் நான்காம் இடத்திற்கு ஆறில் மேஷத்தில் இருப்பது மீண்டும் சண்டையைக் காட்டுகிறது. இது செவ்வாயாக இருப்பதால் அங்கு சண்டை அடிதடி அளவிற்குப் போய் பிரிவினையாகி உள்ளது.
* நவாம்சத்தில் ஆறாம் அதிபதி சனி, பதினோராம் வீட்டில் சுக்கிரனோடு ரிஷபத்தில் நில ராசியிலேயே இருப்பதால் முயற்சி செய்யலாம். ஆனாலும் இவர்கள் சந்திரனின் திருவோண நட்சத்திரமாக இருப்பதாலும், சந்திரன் சிம்மத்திற்கு பன்னிரண்டாம் அதிபதியாக இருப்பதாலும், இந்த நிலத்தின் போட்டி இருவருக்குமே நன்மையைத் தராது.
* நவாம்சத்தில் நான்காம் இடமாகிய விருச்சிகத்திலேயே மாந்தி நிற்கிறார்.
* மாந்தி நிற்பதோ ஆறாம் இடத்தின் அதிபதியின் நட்சத்திரத்தில். இது சத்ருவே பலமாக இருப்பதைக் காட்டும்.
* சந்திரன் சோழி லக்னத்திற்கு ஐந்தாம் பாவாதிபதியாகி நன்றாக இருப்பதால், இவரின் மூத்த மகனைக்கொண்டு பரிகாரம் செய்தால் வெற்றி கிட்டும்.
பரிகாரம்
அஹோபிலம் ஜ்வாலா நரசிம்மரிடம் ஹோமம் செய்தபின், வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய்க்கு ஹோமம் செய்ய, வெற்றி கிட்டும்.
(தொடரும்)
செல்: 63819 58636