சுமார் 50 வயதுடைய, ஒருவர் நாடியில் பலனறிய வந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.
ஐயா, "அரசு ஊழியராக, நான் பணி செய்து வருகின்றேன். கடந்த ஒரு வருடமாக, பெரிய சிக்கலில் உள்ளேன். அந்த சிரமத்தில் விடுபட பலமுயற்சிகளை, வழிபாடுகளை செய்தேன். ஆனால் பிரச்சினை தீரவில்லை.
எனது மனைவிக்கு நெருங்கிய உறவினர் ஒருவன், தனது காரியமாக எனது அலுவலக அதிகாரியைக் காணவந்தான். அவனுக்கு மேலதிகாரியை அறிமுகம் செய்துவைத்தேன். அவன் வந்த காரணத்தையும் கூறினேன்.
அந்த அதிகாரியோ தனக்கு ஒரு பெருந் தொகையை லஞ்சமாகக் கொடுத்தால் காரி யத்தை சாதமாக முடித்துத் தருவதாகக் கூறினார்.
அந்த வேலை மட்டும் முடிந்தால் லஞ்ச மாக கொடுக்கும் பணத்தைவிட, பல மடங்கு பணம் தனக்கு லாபமாக கிடைக்கும். ஆனால் வேலை முடியாவிட்டால் அதிகாரியிடம் கொடுத்த பணத்தை எப்படி திரும்ப வாங்குவது? என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டான்.
அந்த அதிகாரி பணம் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்யமாட்டான். அதே போல் பணம் வாங்கிவிட்டால், காரியத்தை முடித்து தராமல் யாரையும் ஏமாற்றியதில்லை.
இவர் லஞ்சமாக வாங்கும் பணத்தில், தனது மேலதிகாரிகளுக்கும் பங்கு கொடுத்து விடுவான். இவர் மட்டும் வைத்துக்கொள் வதில்லை. இதற்குமேல் பணம் தருவதும், தராததும் உன் விருப்பம். யோசித்து செய்'' என்று நான் உறவினரிடம் கூறிவிட்டேன்.
நீ சொல்வதால் பணம் முழுவதையும் உன்னிடமே தந்துவிடுகிறேன். நீயே அந்தப் பணத்தை, அந்த அதிகாரியிடம் கொடுத்து காரியத்தை முடித்துக்கொடு, காரியம் முடிந்ததும் உனக்கும் பணம் தருகின்றேன். என் பணத்திற்கும் காரிய வெற்றிக்கும் நீயே பொறுப்பு எனக்கூறி பணம் முழுவதையும் என்னிடம் கொடுத்துவிட்டான்.
அந்த அதிகாரியிடம் நானும் பணத்தைக் கொடுத்துவிட்டேன். இங்குதான் என் விதி விளையாடத் தொடங்கியது. அந்த அதிகாரி பணம் வாங்கிய சில நாட்களிலேயே பதவி உயர்வுபெற்று, வேறு அலுவலகத்திற்கு உயரதிகாரியாக சென்றுவிட்டான். எனது அலுவலகத்திற்கும், அந்த அதிகாரிக்கும் எந்த தொடர்புமில்லாமல் போய்விட்டது. அந்த அதிகாரி சொன்னபடி காரியத்தை செய்து தரவில்லை.
என் உறவினர், தன் காரியம் முடியாததால் நீதான் என் பணத்தை தரவேண்டும், இல்லையேல் உன்னை ஒழித்துவிடுவேன் என்று கூறி என்னை மிரட்டி வருகின்றான்.
அவன் மிரட்டலுக்குப் பயந்து, என் வீட்டிற் குக்கூட போகாமல் ஒளிந்து திரிகின்றேன். இந்த பிரச்சினையிலிருந்து அகத்தியர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நாடி படிக்கவந்த காரணத்தை நான் கேட்பதற்கு முன்பே மளமளவென்று கூறினார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி, பலன்கூறத் தொடங்கினார்.
இதுநாள்வரை, இந்த சிக்கலில் இருந்து விடுபட, இவன் எங்கெல்லாமோ அலைந்து எதையெதையோ செய்துவிட்டான். இவன் பிரச்சினையை கடவுள், கிரக வழிபாடுகளால் தீர்க்கமுடியாது. நடைமுறையில் அறிவு, புத்தியைப் பயன்படுத்திதான் செய்ய வேண்டும். நான் கூறுவது போன்று தைரியமாக செயல்படச் சொல். கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். இவன் சிக்கலும் தீரும்.
இந்த அதிகாரி தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி பல தவறுகளைச் செய்து, நிறைய பணம் சம்பாதித்தான். மேலும் பின்னால் தனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால், தான் தப்பித்துக்கொள்ள, தனது மேலதிகாரி களுக்கும், மந்திரிக்கும் பணம் கொடுத்ததை யும், ஆதாரப்பூர்வமாக எழுதி வைத்துள்ளான். அந்த ஆவணங்கள் எல்லாம் இவன் அலு வலகத்தில் உள்ளது. அவை இருக்கும் இடத்தை யும் கூறி, இவனைப் பயப்படாமல் அலுவலகம் சென்று, ஆதாரங்களை நகல் எடுத்துக் கொள் ளச்சொல்.
பணம் கொடுத்த அந்த உறவினரையும் அழைத்துக்கொண்டு, அந்த அதிகாரியிடம் சென்று, ஆவணங்களைக் காட்டி, வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்காவிட்டால், இந்த ஆதாரங்களை காட்டி அரசு தலைமை அதிகாரியிடம் புகார் செய்வோம்.
இன்னும் வேறுவகைகளில் பிரச்சினைகளை உண்டாக்கு வோம் என்று இவன் உறவினரை அந்த அதிகாரியிடம் கூறச் சொல். நான் சொன்னதை இன்னும் 15 நாட்களுக்குள் செய்யச் சொல்.
இந்த திருட்டு அதிகாரி யாருடைய ஆதரவில் இவ்வளவு தவறுகளைச் செய்தானோ, அந்த லஞ்சப் பணத்தில், பங்கு வாங்கிய அந்த மந்திரியும், தன் பதவியை இழக்கப்போகின்றான். நான் கூறியபடி செய்தால் அந்த அதிகாரி பணத்தை திரும்பக் கொடுத்து விடுவான் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே செய் கின்றோம் என்று கூறிவிட்டு என்னிடம் விடைபெற்றுச் சென்றார்கள். இவர்களுக்கு நாடி படித்ததையே நான் மறந்துவிட்டேன்.
சுமார் இரண்டு மாதங்கள் சென்ற பின்பு இனிப்பு, பூ, பழம் இவற்றை வாங்கிக் கொண்டு இருவரும் என்னைக் காண வந்தார்கள். அகத்தியர் கூறியபடி செய்தீர்களா? என்றேன்.
அகத்தியர் கூறியபடியே செய்தோம். அந்த அதிகாரியும் பணத்தை திரும்பக் கொடுத்து விட்டார். மேலும் அவருக்கு ஆதரவாக இருந்த அமைச்சருக்கும் அகத்தியர் கூறிய படியே பதவி பறிபோய்விட்டது என்று கூறி ஆசானை வணங்கிவிட்டு என்னிடம் விடைபெற்றுச் சென்றனர்.
சித்தர்களின் நியாயமன்றத்தில் சட்டத்தின் படியோ, சாட்சிகளின் வாக்குமூலம்படியோ தீர்ப்பு வழங்குவதில்லை. உண்மையின் அடிப்படையில் நியாயமும், பாதிக்கப் பட்டவர்களுக்கு பலனையும் தருவார்கள் என்பதை நானும் அறிந்துகொண்டேன்.
செல்: 99441 13267