வி. முருகேசன், செங்கல்பட்டு.

ஒரு மாதத்தில் இருமுறை காக்கை என் தலையில் அடித்தது. அதனால் மரணம் சம்பவிக்குமா? பரிகாரம் என்ன?

ஜாதக தசாபுக்தியில் பாதகமான நிலையும், மாரகத்துக்குரிய கட்டமும் இருந்தால்தான் மரணம் சம்பவிக்கும். காக்கை அடித்தது உங்களுக்கு ஏழரைச் சனி அல்லது அட்டமச்சனி அல்லது கண்டச்சனி அல்லது அர்த்தாஷ்டமச்சனி அல்லது சனி தசை, சனி புக்தி இருப்பதை அறிவுறுத்துகிறது. விபத்து, வைத்தியச்செலவு அல்லது போலீஸ் கேஸ் வரலாம். வெள்ளி யாலான காக்கை உருவம் வாங்கி வெள்ளிக்கிழமை இரவு தலைமாட்டில் வைத்துப் படுத்துறங்கி, மறுநாள் காலையில் குளித்துமுடித்து ஆறு மணிமுதல் ஏழு மணிக்குள் சனி ஓரையில் காக்கை உருவத்தை நவகிரகத்திலுள்ள சனியின் பாதத்தில் வைத்து அர்ச்சனைசெய்து உண்டியலில் காணிக்கையோடு செலுத்தவும். சனி தனிச்சந்நிதியாக இருக்கும் இடத்திலும் மேற்படி பரிகாரம் செய்யலாம். அத்துடன் உங்கள் வயதுடன் ஒன்றுசேர்த்து, அந்த எண்ணிக்கை அளவு மிளகை சிவப்புத்துணி யில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி, மிளகுப் பொட் டலத்தை நனைத்து தீபமேற்ற வேண்டும். அதுவும் சனிக்கிழமை ஒருமுறை.

ப் என். கமலா, கடலூர்.

Advertisment

தங்கள் பதில்கள் நல்வழியைக் காட்டி நன்னெறிப்படுத்துகின்றன. நன்றிகள் பல! என் ஜாதகப்படி சனி, கேது இருப்பதன் பலன் என்ன? 7-ல் செவ்வாய், ராகு இருப்பது தோஷமா? திருமணம் எப்போது நடைபெறும்?

jj

மாங்கல்ய தோஷம் உண்டு. 14 வயது முதல் குரு தசை 16 வருடம்- 30 வயதுவரை. இதன்பிறகுதான் முறையான திருமணமும் திருப்தியான மணவாழ்க்கையும் உண்டாகும். கலப்புத் திருமணம், காதல் திருமணம் நடக்க இடமுண்டு. மனதை அலைபாயவிடாமல் இருக்க வேண்டும். காதல் தோல்வி, காதல் ஏமாற்றம் ஏற்படலாம். பரிகாரம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் 27 வயதில் திருமணம் செய்யலாம். நல்ல வேலைக்கும், நல்ல மணவாழ்க்கைக்கும் காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வரகலா ஹோமமும்செய்து கலச அபிஷேகம் செய்யவும்.

ப் எஸ். ராமச்சந்திரன், ஓசூர்.

தங்கள் ஜோதிடக்கணிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. எனது மகளின் மைத்துனருக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

மிதுன லக்னம். 7-ல் சனி. கன்னி ராசிக்கு 7-ல் சூரியன். லக்னத்துக்கு 8-ல் செவ்வாய், ராகு, 2-ல் கேது. உத்திர நட்சத்திரம். ராகு தசை நடப்பு. ராகு தசைக்கு சூலினிதுர்க்கா ஹோமமும், திருமணத்தடைக்கு காமோகர்ஷண ஹோமமும், நல்ல மணவாழ்க்கை அமைய கந்தர்வராஜ ஹோமமும் மற்றும் 18 விதமான ஹோமங்களும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் 29 வயது முடிந்து 30 வயதில் திருமணம் நடக்கும். இல்லாவிட்டால் 33 வயதுக்குமேல்தான் திருமணம் நடக்கும்.

ப் ஆர். சுரேஷ், தஞ்சாவூர்.

தங்களின் தொண்டு பாராட்டுக் குரியது. சிரம்தாழ்ந்த நன்றிகள்! என் அக்காள் மகள் ஜாதகமும் என் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். இருவரும் திருவோண நட்சத்தி ரம், மகர ராசி. திருமணம் செய்து கொள்ளலாமா? எனக்கு அரசுப் பணியா? சொந்தத் தொழிலா?

இருவருக்கும் திருவோண நட்சத்திரம், மகர ராசி என்பது சிறப்பு தான்! ஆனால் அக்காள் மகளுக்கு 2035 வரை ராகு தசை. (34 வயதுவரை). உங்களுக்கு 2033 வரை குரு தசை. இதில் 2031 முதல் ராகு புக்தி வரும். சம ராகு சந்திப்பு பல கெடுதல்களை உண்டுபண்ணும். எனவே அக்காலம் மறக்காமல் இருவரும் சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம் போன்ற பல ஹோமங்கள்செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால், தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதுபோல கெடுதல்கள் விலகும். பிள்ளைகளுக்கும் படிப்பு, ஆயுள்விருத்திக்கு ஹோமம் செய்துகொள்ளலாம். முன்னதாக, அக்காள் மகளுக்கு 2035 வரை ராகு தசை நடப்பதால் திருமணத்துக்கு முன்பு சூலினிதுர்க்கா ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும் செய்து கலச அபிஷேகம்செய்து முடித்து 21 வயதில் திருமணம் செய்யலாம். உங்களுக்கும் அக்காள் மகளுக்கும் 11 வயது வித்தியாசம் உண்டு. உங்களுக்கு திருமணத்துக்குப் பிறகு சொந்தத் தொழில் யோகம் அமையும். அரசு வேலைக்கு இடமில்லை.

ப் கே. லட்சுமிகலா, திருநெல்வேலி.

எனது மகன் திருமணம் வேண்டா மென்று சொல்கிறார். சிறுவயதில் அவர் தாத்தா திடீர் யோகம் வரும் (40 வயதுக்குமேல்) என்றார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. +2 வரை படித்து லேப் டெக்னீஷியனாக இருக்கிறார். திருமணம் நடக்குமா? சொந்தத் தொழில் செய்யலாமா?

மகன் உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னம். 43 வயது. 7-ல் சுக்கிரன் இருப்பதும், 7-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவதும் தோஷம். ராசிக்கு 7-க்குடைய சனி ராசிக்கு 12-ல் மறைவதும் தோஷம். எனவே களஸ்திர தோஷம் உண்டு. சூரியன் நீசம். தகப்பனாருக்கு "கிட்னி பெயிலியர்'; ஆயுள் பலமில்லை. தாயாருக்கும் ஜாதகருக்கும் உடம்பைப் படுத்திக்கொண்டே இருக்கும். மருந்தும் மாத்திரையும்தான் உணவாக அமையும். 40 வயதுமுதல் குரு தசை. குரு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தோஷம் விலகும் என்றாலும், அவர் அட்டமாதிபதி. உடல் ஆரோக்கியக்குறைவும், வருமானக்குறைவும் திருமணத்தடைக்குக் காரணம்! அவர் எப்போது திருமணத்தில் விருப்பம் இருப்பதாகக் கூறுகிறாரோ அப்போது திருமணம் செய்து வைக்கலாம். விவாகரத்கான பெண் அல்லது கணவனை இழந்த பெண் அமையலாம்.

ப் எஸ். குமரவேல், திருப்பூர்.

எனக்கு 37 வயதாகிறது. திருமணம் எப்போது நடைபெறும்? சொந்தத் தொழில் செய்யலாமா?

தனுசு ராசி, தனுசு லக்னம், பூராட நட்சத்திரம். ராகு தசை, சனி புக்தி. 7-ஆம் இடத்தை சனி பார்க்கிறார். அட்டமாதிபதி சந்திரனும் 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார். நவாம்சக் கட்டத்தில் சுக்கிரன் (களஸ்திர காரகன்) நீசம். தோஷம் அதிகம். வசதியிருந் தால் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வ ராஜஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம்.

ப் என். தங்கராஜ், வேலூர்.

நான் சிறு 15 வயதுமுதல் என் தந்தைக்குக் கடன் வாங்கிக் கொடுத்தேன். இன்று 47 வயதாகிறது. கடன் அடைபட வில்லை. அப்பா, அம்மா இறக்கும்வரை ஒன்றாக இருந்தேன். (கூட்டுக்குடும்பம்). உடன்பிறந்தோர் எல்லாம் தனியாகச் சென்றுவிட்டார்கள். எனது தொழிலுக்கு உதவியாக எனது இரண்டு மகன்களும் வருவார்களா?

ருச்சிக லக்னம், மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி. 10-க்குடைய சூரியன் 9-ல் இருந்தாலும் 10-க்கு 12-ல் மறைவு. ராகு- கேது சம்பந்தம். உங்கள் தொழிலுக்கு இரண்டு பிள்ளைகளும் வரமாட்டார்கள். தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால், உங்கள் தொழிலை நீங்களே லாபகரமாக செயல்படுத்தலாம். வீழ்ச்சிக்கு இடமில்லை.