ப் ஆர். கல்யாணி, ஈரோடு.

எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

மகளுக்கு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னம். லக்னத்தில் ராகு. ஏழில் கேது. நாகதோஷம் உண்டு. 39 வயதுவரை சனி தசை நடக்கிறது. 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி நடந்துவிட்டதால், இனி திருமணம் கூடிவரும். மகளுக்கேற்ற மாப்பிள்ளையும் கிடைப்பார். நாகதோஷ நிவர்த்திக்கு ஒரு வெள்ளிக்கிழமை நயினார் கோவில் சென்று நாகநாதருக்கும், அம்பாள் சௌந்தரநாயகிக்கும் அபிஷேக பூஜை செய்யவும். ராகு காலத்தில் செய்வது உத்தமம்.

ப் எஸ். சுகுமாரன், பரமக்குடி.

Advertisment

என் மனைவி 31-12-2017-ல் காலமானார். என் மகன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். 29 வயது நடக்கிறது. அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

பூராட நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னம். லக்னத்தில் ராகு. 7-ல் கேது. 7-க்குடைய குரு 12-ல் மறைவு. 2021 அக்டோபரில் 30 வயது முடியும். அதன் பிறகு திருமணம் நடக்க அமைப்புண்டு. தாயார் இறந்துவிட்டதால் ஒருமுறை காளஹஸ்தி சென்று சுவாமி, அம்பாளுக்கு பச்சைக்கற்பூரம் கலந்த அபிஷேக பூஜை செய்தால் சற்று முன்னதாகவே திருமணம் நடக்கலாம்.

--

Advertisment

ப் வி. கிருஷ்ணராஜ், சென்னை-20.

சிறு மளிகைக்கடை வைத்துள்ளேன். மனைவி இருந்தவரை வியாபாரம் நன்றாக நடந்தது. அவர் காலமானபிறகு வியா பாரம் சரியில்லை. எங்கள் ஊரிலுள்ள ஸ்ரீராஜகோபால ஸ்வாமி ஆலயத்தில் ஏழாண்டுகளாக அர்ச்சகராக இருந்துவருகிறேன். இதற்கு மாதச் சம்பளம் மிகமிகக் குறைவு. வேறு வருமானம் இல்லை. கடன்கள் இருக்கின்றன. எப்படி அடைப்பதென்று தெரியவில்லை. மகனுக்கு மனவளர்ச்சி இல்லை. (வயது 37). இப்பிறவியில் திருமணம் நடக்குமா? பிற்காலம் எப்படி அமையும்? குடும்பத்துக்கு பிதுர்தோஷம், பிதுர்சாபம் உள்ளதாகக் கூறுகிறார்கள். திலஹோமம் செய்து கலசஅபிஷேகம் செய்யவேண்டும் என்கிறார்கள். சரியா?

மகன் ரிஷப லக்னம், பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி. லக்னத்துக்கு 2-ல் ராகு. 8-ல் புதன், கேது. குரு 7-ல் இருந்து லக்னத்தைப் பார்க்கி றார். 9-ல் சூரியன், சுக்கிரன் நிற்க, 9-க்குடைய சனி 6-ல் மறைவு, உச்சம் என்பதால், பூர்வீகத்தில் கடுமையான தோஷம் உள்ளது என்பது உண்மைதான். அவர்கள் சொன்னமாதிரி திலஹோமம் செய்வது நல்லதுதான். அத்துடன் பூந்தோட்டம் அருகில் செதலபதி சென்று முன்னோர் சாபதோஷ நிவர்த்திக்குப் பரிகார ஹோமம் செய்யலாம். திருவாரூர்- மயிலாடுதுறை பாதையில், கூத்தனூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர்.

ப் வி. குமரவேல், கோவை.

என் மகன் தனியார்துறையில் சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக சாஃப்ட்வேர் தொழில் ஆரம்பித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னேற்றமில்லை. திருமண முயற்சிகள் செய்யும்போது தடைப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தாயாரும் (என் மனைவி) இறந்துவிட்டார். திருமணம் எப்போது நடக்கும்? செவ்வாய், சனி சேர்க்கை இருப்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். செய்யும் தொழில் சரிவருமா? அல்லது பங்குதாரர் யாராவது சேர்த்துக்கொள்ளலாமா? அல்லது வேறு வேலைக்குப் போகலாமா?

"செய்த தொழிலை விட்டவனும் கெட் டான்; செய்யாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்' என்பது பழமொழி. எனவே அவருக்குத் தெரிந்த தொழிலையே தொடர்ந்து செய்யட்டும். அவசியமானால் பங்குதாரரை சேர்த்துக்கொள்ளலாம். தாயார் இறந்து வருடம் திரும்பாமல் (ஒரு வருடம்) எந்தப் பரிகாரமும் செய்யக்கூடாது. மிதுன ராசி, மிதுன லக்னம். 5-ல் செவ்வாய்- சனி இருப்பது தோஷம் என்றாலும், குரு 7-ல் ஆட்சிபெற்று ராசி- லக்னத்தைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. 1984 மே மாதம் பிறந்தவர். 2020 மே மாதம் 36 வயது முடிந்தது. புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி. தற்போது திருமணம் கூடிவரும் காலம்தான். ஏற்பாடு செய்யலாம்.

ப் கே. அனுராதா, சேலம்-2.

எனது ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகச் சொன்னதால் காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் கோவில்களுக் குச் சென்று பரிகாரம் செய்துவிட்டேன். நாகதோஷம் உள்ள மாப்பிள்ளையைத் தான் பொருத்தம் பார்க்க வேண்டுமா? எப்போது திருமணம் நடைபெறும்?

ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பது நாகதோஷம்தான். என்றாலும் கேதுவை குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. ஆனால் 4-ல் உள்ள மகரச்சனியை 9-ல் உள்ள மிதுனச்செவ்வாய் பார்ப்பதுதான் தோஷம். உங்கள் திருமணத் தடைக்கும் இதுவே முக்கியமான காரணம். (கும்பகோணம் வழி) நாச்சியார்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் பூந்தோட்டம் பாதையில் கூந்தலூர் கிராமம் உள்ளது. அங்கு சென்று செவ்வாய், சனி சம்பந்த தோஷப் பரிகாரம் செய்துகொள்ளவும்.

ப் எம். கல்பனாதேவி, தர்மபுரி.

என் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு முயற்சி செய்கிறான். அவன் லட்சியம் நிறைவேற பரிகாரம் கூறவும்.

கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம், துலா லக்னம். மகனது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதசுவாமிக்கும், ஆரணவல்லியம்மனுக்கும் ருத்ரஹோமம் வளர்த்து, ருத்ராபிஷேக- சங்காபிஷேக பூஜை செய்யவும். (திருச்சி- புதுக்கோட்டை வழி பொன்னமராவதி).

ப் டி. கண்ணம்மாள், மதுரை-2.

என் கணவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிகிறார். திருமணமாகி இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் எங்களுக்கு கருத்துவேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் நாங்கள் பிரிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இந்த நிலை மாறுமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? நான் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். அரசாங்க வேலை கிடைக்குமா?

மூல நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னம். உங்கள் கணவர் ஜாதகம் இது. நீங்கள் புனர் பூச நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னம். உங்கள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தமே இல்லை. புனர்பூசம்- பூனை, மூலம்- நாய். நாயும் பூனையும் பகையோனி. அத்துடன் நட்சத்திரப் பொருத்தமும் இல்லை. அதனால் தாம்பத்திய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது. வாரிசும் இருக்காது. இருவருக்கும் பிரிவு ஏற்படவும் இடமுண்டு. உங்களுக்கு ரிஷப லக்னத்திற்கு 10-ல் சூரியன், புதன் இருப்பதால் அரசு வேலைக்கு இடமுண்டு. முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அதை உங்கள் இருவரின் கருத்துப்படி முடிவெடுத்துச் செயல்படலாம்.