ப் தனபால், பெரம்பலூர்.
எனக்குத் திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகின்றன. ஒரு பெண்குழந்தை உள்ளது. அடுத்து ஆண்வாரிசு உண்டா? தொழில் முன்னேற்றம் எவ்வாறு அமையும்?
மகர லக்னம், சுவாதி நட்சத்திரம், துலா ராசி. லக்னத்தில் செவ்வாய் உச்சம்; 7-ல் குரு உச்சம். உச்சனை உச்சன் பார்ப்பது குற்றம். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்கும்வரை உங்கள் வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும். எதிர்நீச்சலாகத்தான் இருக்கும். ஆண் குழந்தைக்கு யோகம் உண்டு. கும்பகோணம் அருகில் சேங்காவிபுரம் சென்று தத்தாத் ரேயருக்கு அபிஷேக பூஜை செய்யவும்.
ப் எம். சுமதி, கல்பாடி.
எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்குமா?
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னம். சூரியன் 7-ல் நின்று லக்னத்தைப் பார்க்கிறார். சூரியனோடு ராசிநாதன் குரு சம்பந்தம். அரசு வேலைக்கு இடமுண்டு. செலவுசெய்து வேலை வாங்கவேண்டும்.
ப் தனபால், கல்பாடி.
எனது மகள் எந்தத்துறையில் சேர்ந்தால் வெற்றிபெறுவாள்?
தர்ஷினி ரேவதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னம். 10-ஆமிடத்தை செவ்வாய் பார்ப்பதால் கம்ப்யூட்டர் அல்லது பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி போன்ற பிரிவுகளில் படிக்கலாம். அக்னி சம்பந்தமான (கேட்டரிங்) துறையிலும் படிக்கலாம்.
ப் சுந்தரம், கோவனூர்.
குருவே, வணக்கம். லக்னத்திற்கும் ராசிக்கும் சந்திராஷ்டமம் வரும்போதும், ராசியில் சந்திரன் நிற்கும்போதும் பல துன்பங்களை அனுபவித்துவருகிறேன். பரிகாரம் கூறுங்கள்.
சந்திராஷ்டமம் வரும்போது விநாயகருக்கு விடலைக்காய் உடைத்து 21 முறை வலம் வரவும். அறுகம்புல் மாலை சாற்றலாம். கூடியவரை அன்றைய தினம் அமைதியாக வீட்டிலிருப்பது நல்லது. பயணங்களையும் தவிர்க்கவேண்டும்.
ப் கலைமணி, கோயம்புத்துர்.
ஐயா, வணக்கம். "பாலஜோதிட'த்தின் நீண்டகால வாசகன் நான். "பாலஜோதிடம்' படித்தாலே பாதி ஜோதிடராகலாம். எனக்கு முழுமையான ஜோதிடம் படிக்கும் ஆர்வம் உள்ளது. வழிகாட்டவும்.
ஜோதிடப் பயிற்சிக்கென்று பல புத்தகங்கள் இருந்தாலும், பி.எஸ்.பி அவர்கள் எழுதிய, "ஜோதிடம் ஓர் அறிமுகம்' என்ற ஜோதிடப் பயிற்சிப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். பி.எஸ்.பி. விஜய்பாலா, அலைபேசி: 73586 26538-ல் தொடர்புகொள்ளவும். எளிய நடையில் கற்கும் புத்தகம். நீங்களும் பிரபல மான ஜோதிடராகலாம்.
ப் மூர்த்தி, மதுரை.
திருமண முகூர்த்த நிர்ணயம் செய்யும் போது சூரியன், செவ்வாய், சனி ஓரைகளைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்களே- சரியா?
செவ்வாய் ஓரை, சனி ஓரை கண்டிப்பாகத் தவிர்ப்பது நல்லது. சூரியன் ராஜ கிரகம். ஆகவே, சூரிய ஓரையை ஏற்றுக் கொள்ளலாம். நவகிரகங்களில் கண்ணுக்கு நன்றாகத் தெரியும் இரண்டு கிரகங்கள் சூரியனும் சந்திரனும்தான். சுக்கிரனும் ஓரளவு தெரியும். சிலசமயம் வானில் குரு, செவ்வாய் தெரியும். ஆகவே, சூரியனை விலக்கவேண்டிய தேவையில்லை. அதைவிட முக்கியம் திருமணத் தேதி எண், கூட்டு எண் 4, 7, 8 வரக்கூடாது.
ப் ரோஸி, மதுரை.
அய்யா, வணக்கம். எனக்குத் திருமணமாகி எட்டாண்டுகள் ஆகின்றன. இது வரை குழந்தையில்லை. ஆங்கில மருத்துவம்மூலம் குழந்தை உண்டாக்கலாம் என்கிறார்கள். அணுகலாமா?
உங்களுக்கு ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னம். 5-ல் குரு உச்சம் பெற்று லக்னத்தைப் பார்க்கிறார். 9-க்கு டைய செவ்வாயும் ரிஷபத்திலிருந்து 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். அத்துடன் உங்களுக்குப் பிடித்தமான இஷ்ட தெய்வப் பிரார்த்தனை செய்துகொள்ளவும். இரண்டும் பலன்தரும். திருமணத்தேதி 4, 7, 8-ஆக இருந்தால் மறுமாங்கல்யம் கட்டுவது அவசியம். பழைய மாங்கல்யத்தை மாற்றி மறுமாங்கல்யம் அணிவிக்கவேண்டும்.
ப் சதீஷ், சங்கரன்கோவில்.
எனக்கு 68 வயதாகிறது. கடந்த ஒரு வருடமாக இடதுகால் வலி இருந்து கொண்டே இருக்கிறது. அனைத்து வைத்தியம் பார்த்தாகிவிட்டது. தீர வில்லை. எப்போதும் தீரும்?
அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னம். நடப்பு தசை அனுகூலமில்லாததால், முழுமையான நிவர்த்தி கிடைப்பது கஷ்டம். கூடியவரை ஆயுர்வேத சிகிச்சை செய்துகொள்ளவும். (கேரள வைத்தியம்). அலோபதியில் நிவர்த்தி எதிர்பார்க்க முடியாது. சர்க்கரை நோய் தீரும்வரை நோய்நிவர்த்தி பெறுவதும் கடினம். உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும்.
ப் உஷா ராமமூர்த்தி, கந்தன்சாவடி.
2016-ல் என் மகன் திருமணம் பற்றிக் கேட்டபோது "சனி தோஷம், நாக தோஷம், சுக்கிரன்- ராகு சேர்க்கை தோஷம் இருப்ப தால், எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை. அடுத்துவரும் சூரிய தசையில் திருமண யோகம் வரும்வரை பொறுமை யாக இருக்கவும்' என்று பதில் கூறினீர்கள். பரிகாரம் எதுவும் எழுதவில்லை. ஒவ்வொரு ஜோதிட ரும் ஒவ்வொரு பரிகா ரம் கூறுகிறார்கள்.
சிலர் சிவன் அல்லது பெருமாளுக்கு தத்துக் கொடுத்தால் தோஷங்கள் விலகும் என்கிறார்கள். இது சரியா? நீங்கள் சொன்னபடி பொறுமையாக இருந்தேன். தற்போது தான் கேட்கிறேன். மகன் சிம்ம லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. 2019 மார்ச்முதல் சூரிய தசை ஆரம்பம். சுக்கிரன்- ராகு சேர்க்கையும், செவ்வாய்- சனி சேர்க்கையும்தான் திருமணத் தடைக்குக் காரணம். சுக்கிர தசை முடிந்து விட்டதால் கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் என்ற தோஷம் விலகும். என்றா லும் நல்ல மனைவி, நல்ல மணவாழ்க்கை, வாரிசு யோகம் அமைய காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து மகனுக்கு கலச அபிஷேகம் செய்யலாம்.
ப் ராணி, திருச்சி.
நான் தனியார் கல்லூரியில் பணிபுரிகிறேன். எனக்கு அரசுப்பணி எப்போது கிடைக்கும்? பள்ளியா? கல்லூரியா? குடும்ப வாழ்க்கை சரியில்லை. எப்போது சரியாகும்?
தனுசு லக்னம். 12-ல் சனி (குடும்பாதிபதி) மறைந்து 2-ஆம் இடம் குடும்ப ஸ்தானத் தைப் பார்க்கிறார். சனி ராசிநாதன் (கும்ப ராசி) என்றாலும், களஸ்திர காரகன் சுக்கிரன் 10-ல் கன்னியில் நீசம்; கேது சம்பந்தம்- ராகு பார்வை. இதுவே குடும்ப வாழ்க்கைக்குப் பிரச்சினை. 13 வயதுமுதல் சனி தசை 19 வருடம் முடிந்து, புதன் தசை, புதன் புக்தி 8-ல் மறைந்து தசாபுக்தியை நடத்துவதால், அரசு வேலை தாமதமானது. 2021-ல் நல்ல வேலை மாற்றம் எதிர்பார்க்கலாம். ஆசிரியை பணியோடு ஜோதிடமும் படிக்கலாம். ராசிக்கு 2-ல் ராகு- கேது சம்பந்தம் என்பதால், ஜோதிட ஆராய்ச்சி மனதுக்கு ஆறுதலளிக்கும்.