ஸ்ரேல் மற்றும் யூதர்களின் இருப்பிடம் மற்றும் அவர்களின் தன்மைகளைக் குறித்து, அதிலுள்ள ஜோதிட உண்மைகளைப் பற்றி நண்பர்களிடம் வினவியிருந்தேன். அதற்கு பதிலளித்திருந்த நண்பர்களுக்கு நன்றி.

இக்கட்டுரை யூதர்களின் இருப்பிடம் மற்றும் அவர் களைப் பற்றிய ஜோதிட உண்மைகளைப் பற்றியது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட நோபல் பரிசு, உலகின் தலைசிறந்த பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு, அமெரிக்க பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் தலைமை மற்றும் உலக அரங்கில் நடக்கும் அரசியல் சதுரங்கத்தில் இவர்களின் பங்கு என, இத்தனை அறிவாளித்தனத்திற்கும் காரணமென்ன? பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே இருக்கும் மகர ரேகையின் இடைப்பட்ட பகுதிகள், எகிப்து, ரோம், இந்தியா, சீனா, மங்கோலியா போன்ற நாடுகள் மனித வள மேம்பாட் டின் நாகரிகத்திலும், வாழும் முறைகளிலும் பல நாகரீகங் களை மனித குலத்திற்கு வழங்கியுள்ளன. நைல் நதி நாகரிகம், மஞ்சள் நதி நாகரிகம், சிந்துநதி நாகரிகம் மிக முக்கியமானவை. இங்கு வாழ்ந்த மக்கள், வானவியல், ஜோதிடம் ஆகியவற்றின் உண்மைத் தத்துவங்களை அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்தியவிதம், மனிதனின் அறிவியல் அறிவு வளர்ந்திருக்கும் இக்காலத்திலும் வியப்படையும் வண்ணம் இருக்கிறது.

இன்றைக்கு நாம் வாழும் முறைகள்கூட அந்த நாகரிகங் களின் கோட்பாடுகலுக்குள்ளேதான் அமைந்திருக்கும்.

Advertisment

dd

நாம் வாழுமிடமான பூமியை, பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்திலிருக்கும் மற்ற கிரகங்களின் தன்மைகள், அவற்றின் இருப்பு மற்றும் பிரபஞ்ச செயல்பாடுகள்தான் நிர்ணயக்கின்றன. அவ்வாறு இருந்தாலும், இந்த பூமிப் பந்தில் சில பகுதிகளை சில கிரகங்களின் கூட்டு சக்திகளும், தனி சக்திகளும் ஆள்கின்றன.

உதாரணமாக இந்தியாவின் தென்பகுதிகளில் சந்திரன், செவ்வாய், குரு, கேதுவும்; வடபகுதிகளில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு, ராகுவும்; சீனாவை குரு, புதன், கேது, செவ்வாயும்; ஐரோப்பாவை சுக்கிரன், ராகு, குரு, செவ்வாயும்; ஆப்பிரிக் காவை சனி, ராகு, செவ்வாய் சக்தி களும் பூமியில் தன் ஆளுமையைச் செலுத்துகின்றன.

மற்ற நாடுகளிலும் இதுபோலவே வெவ்வேறு தன்மைகள் ஆளுமை செய்கின்றன. மகர ரேகையின் இடைப்பட்ட பகுதிகளில், மேற்குப் பகுதிகளில்- அதுவும் அரபிக் கடலின் மேற்குப்புறமாக இருக்கும் பாலைவனப் பகுதிகளான வளைகுடா நாடுகளை ராகு தன் முழு ஆதிக்கத்தில் வைத்திருக்கிறது. குறிப்பாக அரேபியர்களின் பழைய வாழ்க்கைத்தன்மை ராகுவை உங்களுக்கு உணர்த்தும். அவர்களின் பழமைவாதமும், கொள்ளை யடிக்கும் குணமும், மூர்க்கமும் அவர்களின் ராகு தன்மையை வெளிபடுத்தும்.

வளைகுடாவின் தென்மேற்கான மத்தியத் தரைக்கடல் பகுதியும், செங்கடல் பகுதியின் இடைப்பட்ட பகுதிகளான எகிப்து, கிரேக்கம், இஸ்ரேல் போன்ற நாடுகளில், ராகுவின் மற்றொரு முகமான புனிதமும் அதன் ஆழமும் அதிகம் இருக்கின்றன. மிக முக்கியமாக, மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிகளில், ஈரான், ஈராக், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியாவில் ராகுவின் மற்றொரு முகமான மூர்க்கமும், மீறுகிற தன்மையும் நிறைந் திருக்கும்.

இதில் இஸ்ரேல் ராகுவின் புனிதத் தன்மையின் பூமி. இங்கிருந்துதான் இன்று அதிகமான உலக மக்கள் பின்தொடரும் கிருத்துவ மதம் துவங்கியது. கிறித்துவ மதத்தைத் தழுவியே இஸ்ரேலி-ருந்து கிழக்குப் பகுதிகளில் மற்றொரு பெரிய மதமான இஸ்லாமும் ராகுவின் ஆதிக்கத்தில் துவங்கி தன்னை வளர்த்துக்கொண்டது.

இஸ்ரேல் மண்ணின் மைந்தர்களான யூதர்கள் புனிதத் தன்மையும், தனக்கென ஒரு நாகரிகத்தையும் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இவர்களை அழிக்க மற்ற நாடுகளைச் சார்ந்த மக்கள் பல முயற்சிகள் எடுத்தும் இன்றுவரை அழியாமல் உலக அளவில் மூளைக்காரன் என்ற முதல் பட்டத்தை இவர்கள் தக்கவைத்திருப்பதற்குக் காரணம் ராகு.

ஏன்? ஹிட்லர் பல லட்சம் யூதர்களை ஒரே நேரத்தில் கொன்று, யூத இனமே பூமியில் இருக்கக்கூடாதென செயல்பட்டபோதும், இன்று இன்னும் இன்னும் வீரியமாகவே இயங்கிக்கொண்டிருக்கின்றனர்- இந்த ராகுவின் புத்திரர்கள்.

ஜோதிடத்தில் 1, 5, 9 ஆகிய இடங்களுக்கு மிக முக்கியமான இடமுண்டு. இந்த 1 நம்மையும், 5 நம் உருவாக்கத்தையும், 9 நாம் உருவாக்கப்பட்ட மூலத்தையும் குறிக்கும். 1, 5, 9 என்பது ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு, நாம் வாழுகின்ற அமைப்பு, தட்ப வெட்பம், செய்யும் தொழில், அதற்கு உழைக்கத் தேவையான உடலமைப்பை- வலுவைத் தரும் உணவுமுறை, கடைப் பிடிக்கிற வழிபாட்டு முறைகள் என இவற்றின்மூலம்தான் நாம் உருவான நாதமும் விந்தும். அதாவது 9-ஆமிடம். இந்த மூலம் மாறாமல் நம்- அதாவது 1-ஆமிடம் மூலமாக 5-ஆமிடமான நம் சந்ததியினரை உருவாக்கு வது. இவ்வாறு உருவாகிற வாரிசுகளின் தன்மை, அந்தந்த இனத்தின் தன்மையிலிருந்து மாறாமலிருக்கும். இந்த ரகசியத்தை இன்றுவரை ஒரு கட்டாயமாக யூதர்கள்தான் கடைப்பிடிக்கின்றனர். ஆம்; ஒரு யூத ஆணின் விந்து, ஒரு யூதப் பெண்ணின் கருமுட்டையில்தான் தன விதையை முளைவிடும். யூதர்களின் அனைத்து ரகசியங்களும் இன்றுவரை அவர்களுக்குள் மட்டுமே பரிமாறிக்கொள்ள கற்றுக்கொடுக்கப்படும். யூதர்களின் கூரிய அறிவு, வாழும் முறை, உணவு போன்றவை அவர்களின் முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டு, ஹிட்லரின் காலத்திற்குப்பிறகு புனரமைக்கப்பட்டு, இன்று ஆளும் தன்மையில் இருப்பதை, அமெரிக்கர்களையோ, ஐரோப்பியர்களையோ கேட்டால் சொல்வார்கள்.

எந்த விஷயம் அல்லது துறையில் அதன் அடியாழத்தைத் தொட அல்லது உணரவேண்டுமெனில் அதற்கு ராகுவின் துணை மிக அவசியம். அதிலும் குறிப்பாக மதம் மற்றும் ஆன்மிகத்தில் ராகுவின் பங்கு மிகப்பெரியது, உதாரணமாக, சைவத்தில் 64 நாயன்மார்களில் பெரும்பாலானோர் ராகு- கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். எந்தவொரு துறையிலும் வெற்றி பெற்று சாதித்தவர்களுக்கு ராகுவின் தாக்கம் நிச்சய மிருக்கும்.

செல்: 73394 44035