சென்னை அலுவலகத்திற்கு, ஜீவநாடி யில் பலன் கேட்க ஒரு தம்பதியினர் வந்திருந்தார்கள். அந்தப் பெண், "ஐயா, எனது கணவருடன் பிறந்த சகோதரர்கள் நான்கு பேர்; சகோதரிகள் இரண்டு பேர். இவருக்கு பூர்வீக சொத்துகள் மற்றும் இவர் தந்தை சம்பாதித்த சொத்து, வீடு, நிலம், தொழில் என நிறையவே உண்டு. இவரின் தந்தை இறந்துவிட்டார். எல்லாருக்கும் திருமணம் முடிந்து, அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

Advertisment

பொதுவான குடும்ப சொத்துகள் இவ்வளவு இருந்தும், எங்களுக்கு முறையாகத் தரவேண்டிய சொத்துகளைப் பிரித்துக்கொடுக்க மறுத்துவருகிறார்கள். நாங்கள் வருமானத்திற்கு வழியில்லாமல் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம். இவரின் தாய், சகோதர- சகோதரிகள், குடும்ப உறவுகள் என அனைவரும் ஒன்றாகவும், நாங்கள் மட்டும் தனி குடும்பம் போலவும் வாழ்கிறோம். எங்களுக்கு பரிந்து பேசவோ, பாசத்துடன் பழகவோ என் கணவர்வழி உறவுகள் யாருமில்லை. எங்களை எதிரி போல் எண்ணுகிறார் கள். எங்களை எல்லாரும் ஒதுக்கிவைக்கும் நிலைக்குக் காரணமென்ன? எங்கள் பாக சொத்து எங்களுக்கு கிடைக்குமா? அகத்தியர்தான் வழிகாட்டவேண்டும்'' என்றார்.

Advertisment

அவர் கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு, அகத்தியரை வணங்கி ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் பலன்கூறத் தொடங்கினார்.

sss

"மகளே, உனது கணவன் தன் முற்பிறவியில் குடும்பத்தின் மூத்த தலைமகனாகப் பிறந்து வாழ்ந்தான். இவனுக்கு ஒரு தம்பியும், இரண்டு தங்கைகளும் இருந்தார்கள். மூத்த மகன் என்பதால் தந்தை- தாயுடன் இணைந்து, குடும்பப் பொறுப்பு களை செய்துவந்தான். தாயும் தந்தையும் இவனை முழுவது மாக நம்பிவிட்டார்கள். ஆனால், இவன் பொதுவாக உள்ள பூமி, வீடு என அனைத்து சொத்துகளையும் தன் பேரி லேயே வாங்கிக்கொண்டான்.

இவனுக்குத் திருமணம் முடிந்த சிறிது காலத்தில், "இந்த சொத்துகளை எல்லாம் நான்தான் சம்பாதித்தேன். உங்கள் யாருக்கு பங்குதர மாட்டேன்' என்று கூறி, பெற்ற தாய்- தந்தையையும், உடன் பிறந்த தம்பி, தங்கைகளையும் வீட்டைவிட்டு விரட்டிவிட்டு, இவனும், இவன் மனைவி, குழந்தைகள் மட்டுமே சுகமாக அனுபவித்து வாழ்ந்தார்கள்.

இவனால் சொத்துகளையும், வாழ்ந்த வீட்டையும் இழந்த அவர்கள், உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி சிரமத்துடன் வாழ்ந்தார்கள். இவனது சகோதரர்கள் மனம் வெறுத்து வாரிவிட்ட சகோதர, பங்காளி சாபம், இந்தப் பிறவியில் அதற்குண்டான தண்டனையாக செயல்பட்டு இப்போது அதே நிலையை உங்களுக்குத் தந்து அனுபவிக்கச் செய்கிறது. இந்த சாபம் விலக சரியான நிவர்த்தி முறைகளைக் கூறுகின்றேன். அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் வருங்கால வாழ்க்கை செழிப்பாக அமையும்'' என்று கூறினார்.

அந்தப் பெண், "ஐயா, சாபநிவர்த்தி முறைகள் என்று அகத்தியர் கூறினார். இதுவரை கோவில் வழிபாடு, தானம், தர்மம் என்று நிறைய பரிகாரங்களை செய்துவிட்டோம். ஆனால் எந்தப் பலனும் கிட்டவில்லை. இனி எங்களால் செலவுசெய்ய முடியாது. மேலும் எங்கள் திருமணம் நடக்கும்வரை இவர்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக- பாசத்துடன்தான் வாழ்ந்தார்கள். திருமணம் முடிந்தபின்புதான் எங்களை ஒதுக்கி, வெறுத்து விட்டார்கள். இதற்கும் அகத்தியர்தான் காரணம் கூறவேண்டும்'' என்றார்.

ஓலையில் அகத்தியர், "பேதை மகளே, ஒருவரின் கர்மவினைப் பதிவுகள் அவரின் திருமணத்திற்குப்பின்பு, அவர்களுக்கென்று ஒரு குடும்ப வாழ்க்கை அமைந்தபின்புதான் செயல்படத் தொடங்கும். திருமணத்திற்கு முன் ஒரு வாழ்வும், பின்பு வாழ்க்கை நிலையில் ஒரு மாற்றமும் உண்டாகும். அதேபோல் குழந்தைகள் பிறந்தபின்பும் மாற்றம் உண்டாகும்.

மகளே, இந்த அகத்தியன், உன் வாழ்வில் சிரமங்கள் தீர வழிகாட்டுவான் என்று நம்பி வந்துள்ளாய். உன் சிரமம் தீரத்தான் வழிகாட்ட வேண்டுமே தவிர, பரிகாரம் செய்யச் சொல்வது என் வேலையல்ல. ஒருவரின் பூர்வஜென்ம கர்மவினை, பாவலிசாபப் பதிவுகள் பூஜை, யாகம், சாந்தி செய்வதால் தீராது. கர்மவினை பற்றிய உண்மையான தெளிவுள்ளவர்களால்தான் சாபநிவர்த்தி வழிமுறைகளைக் கூறமுடியும்'' என்று கூறிவிட்டு, அவர்களின் சகோதர- பங்காளி சாபம் நிவர்த்தியாகவும், வருங்கால வாழ்வில் செழிப்புடன் வாழவும் வழிமுறைகளைக் கூறிவிட்டு அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.

பலன் கேட்க வருபவர்களில் பலர் இதுபோன்று கூறுகிறார்கள். அவர்களில் பலரது ஜாதக அமைப்பினை ஆய்வுசெய்த போது, அதில் சில கிரக ஒற்றுமைகளை யும், பல சூட்சுமங்களையும் அறிய முடிந் தது. அதனைப் பற்றி அடுத்த இதழில் அறிவோம்.

செல்: 99441 13267

Advertisment