சித்தர்கள் கண்டறிந்த அநேக அற்புதங்களில் நூற்றியெட்டு வர்ம புள்ளிகள் முக்கியமானவை. உடலில் இயங்கக்கூடிய ஆற்றல் மையத்தையே வர்மம் என்கிறோம். இதேபோல் ஒரு ஜாதகத்தை அதிலுள்ள நூற்றியெட்டு நவாம்சங்களே இயக்குகின்றன. இது தவிர, நம் உடலிலுள்ள எழுபத்தி ரெண்டாயிரம் நாடிகள்போல் இயங்கும் விசேஷ புள்ளிகளே "சஹமா' என்று அழைக்கப்படுகின்றன.

சூரியன், சந்திரன் பாகைகளைக் கொண்டு திதி யோகத்தைக் கணக்கிட்டு பலன் காண்பதுபோல் லக்ன பாகையையும், கிரகங்கள் நிற்கும் பாகையையும் பொருத்திப்பார்த்து, வாழ்கையின் நிகழ்வுகளை அறியும் முறையே தஜகா ஜோதிடத் தில் "சஹமா' என்படும் முக்கிய புள்ளிகள். இந்தப் புள்ளிகளை, கோட்சாரத்தில் கிரகங்கள் கடக்கும்போது கிரகங்களின் காரகத்துக்கேற்ற பலன்கள் நடைபெறும். பொதுவாக, இது ஜாதகரின் வருடபலன் காண்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த முறையை ஜனன ஜாதகத்திலும் பொருத்திப் பலன் காணலாம்.

jat

1. விவாக சஹமா (திருமணம்)

Advertisment

சுக்கிரனின் பாகை- லக்னப் பாகை+சனி நின்ற பாகை= விவாக சஹமா.

(சனி அமர்ந்த பாகையையும் லக்னப் பாகையையும் கூட்டி வந்த தொகையிலிருந்து, சுக்கிரன் அமர்ந்த பாகையைக் கழிக்கவேண்டும்)

(உ-ம்)- சுக்கிரன்- 187.07 லக்னப்பாகை- 17.08 சனி நின்றபாகை- 18.02.

Advertisment

லக்னப்பாகை- சுக்கிரனுக் கும், சனிக்கும் இடையில் அமையாததால் 30 பாகையைக் கூட்டிக்கொள்ளவேண்டும்.

187.07-17.00+18.02+30=182.05- விவாக சஹமா துலா ராசியில்- 02.05. பலன்: இந்த குறிப்பிட்ட பாகையில், திருமணத்திற்கு சாதகமான கிரகம் அல்லது ஜாதகரின் தசாபுக்தி பயணிக்கும்போது, திருமணம் கைகூடும்.

2. புண்ணிய சஹமா

இரவில் பிறந்தவர்களுக்கு: சூரியனின் பாகை+ லக்ன பாகை- சந்திரனின் பாகை. (சூரியன் அமர்ந்த பாகையையும், லக்னப்பாகை யையும் கூட்டி வந்த தொகையிலிருந்து, சந்திரன் அமர்ந்த பாகையைக் கழிக்கவேண்டும்)

பகலில் பிறந்தவர்களுக்கு: சந்திரனின் பாகை+லக்ன பாகை- சூரியனின் பாகை.

(சந்திரன் அமர்ந்த பாகையை யும், லக்னப்பாகையையும் கூட்டிவந்த தொகையிலிருந்து சூரியன் அமர்ந்த பாகையைக்கழிக்க வேண்டும்)

பலன்: முன்ஜென்மத்தில் செய்த புண்ணிய பலன்களால் கிடைக்கும் நல்ல பலனைச்சுட்டிக் காட்டும்.

மனைவியின் ஜாதகத்தில் புண்ய சஹமா என்றழைக்கப்படும் புள்ளி விழும் நட்சத்திரத்தின் அதிபதி கணவரின் ஜாதகத்தில் அஸ்தமன மாநால் திருமண வாழ்வில் பிரச்சினைகள் உண்டாகும்.

புண்ணிய சஹமா விழும் புள்ளி ஜாதருக்கு சாதகமான நட்சத்திரத்தில் அமைந்தால் மட்டுமே கூடுதலான நற்பலன்களை அடையமுடியும்.

3. ராஜ்ய சஹமா (அதிகாரம்)

சனி நின்றப்பாகை - சூரியன்+லக்னப்பாகை. பலன்: அரசியல், ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ராஜ்ய சஹமா, நல்ல நிலையில் அமைந்தால் மட்டுமே சிறப்பு உண்டாகும். அவ்வாறு அமையும் ஜாதகத்தில். சூரியன் ஆட்சி அல்லது உச்சத்தில் அமைய வேண்டியது அவசியம்.

4. புத்ர சஹமா (குழந்தை பாக்கியம்)

குரு நின்றப் பாகை - சந்திரன்+லக்னப் பாகை. பலன்: புத்ர சஹமா அமையும் புள்ளிலக்னத்திற்கும் ஐந்தாமிடத்திற்கும் பகை மற்றும் பாதக ஸ்தானங்களில் அமையாமலிருக்கு வேண்டும்.

5. வணிக சஹமா (சுய தொழில்)

சந்திரன்- புதன்+லக்னம். பலன்: பத்தாம் பாவத்திலோ பத்தாம் பாவாதிபதியின் நட்சத்திரத்திலோ வணிக சஹமா அமைந்தால் வியாபாரத்தில் கோட்டைக்கட்டி ஆளுவார்.

ஜாதகத்தில் புதன் நீசம்பெற்று வணிக சஹமா, நல்லதாக அமைந்தாலும், பயன் உண்டாகாது.

6. வித்யா சஹமா (கல்வியில் வெற்றி)

சூரியன்- சந்திரன்+லக்னம். பலன்: வித்யா சஹமா நான்காம் பாவத்திலோ, நான்காம் பாவாதிபதியின் நட்சத்திரத்திலோ, புதனின் நட்சத்திரத்திலோ, அமைந்தால் உயர்கல்வியில் சாதனை புரிவார்.

7. அர்த்த சஹமா (செல்வம்)

இரண்டாம் பாவம் அமையும் பாகை- இரண்டாம் பாவாதிபதி நின்ற பாகை+லக்னம் பலன்: இந்து லக்னம் எனப்படும், லக்னத்தில் ஒரு ஜாதகரின் அர்த்த சஹமா அமைந்தால் ஏழையாக பிறந்தாலும் கோடீஸ்வரராவார். இரண்டாம் பாவாதிபதி நின்ற ராசி, லக்னத்திற்கு சந்திரனுக்கு பகை பாதகமாக அமையாதிருந்தால் மட்டுமே தனயோகம் வாய்க்கும்.

8. மித்ர சஹமா (நல்ல நட்பு)

குரு நின்றப்பாகை - புண்ணிய சஹம் + சுக்கிரனின் பாகை. பலன்: பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய ஒன்பதாம் பாவத்திலோ, ஐந்தாம் பாவத்திலோ, மித்ர சஹமா, அமைந்தால் நல்லோர் நட்பு கிடைக்கும்.

9. லாப சஹமா (வியாபாரத்தில் லாபம்)

பதினோராவது பாவம் அமைந்த பாகை- பதினோராவது பாவாதிபதி நின்றப்பாகை+லக்னம். சனியும், சுக்கிரனும் நல்ல நிலையில் அமர்ந்து சாதகமான அமைப்பிலிருந்தால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

10. கௌரவ சஹமா (அந்தஸ்து/மரியாதை)

குரு நின்றப் பாகை- சந்திரனின் பாகை+சூரியன் அமைந்த பாகை. பலன்: குரு, சந்திரன் லக்னமும் பாவிகளின் சேர்க்கையாலோ, பார்வையாலோ பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே கௌரவ சஹமாவின் நல்ல பலன்களைப் பெறலாம்.

சஹமா எனும் முக்கிய புள்ளிகளை ஜனன ஜா தகத்தில் கண்டறிந்தால் இந்த பிறவியில் நம் விதியின் அமையப் பினை அறியலாம். தசாபுக்தியால் முக்கியமான நிகழ்வு நடைபெறும் காலத்தையறிவதுபோல் கோட்சாரத்தில் கிரகங்களால் ஏற்படும் பலன்களை துல்லியமாகக் கணக்கிட இந்த முக்கிய புள்ளிகள் உதவும்.