ல்விக்குக் காரகனாக விளங்கும் புதன்பகவானுக்கு மட்டும் மற்ற கிரகங்களைவிட தனிச்சிறப்பு ஒன்றுள்ளது. மற்ற கிரகங்கள் அஸ்தங்கம் பெற்றால் வலுவிழந்து நற்பலன் தருவதில்லை.

ஆனால் புதன்பகவான் மட்டும் அஸ்தங்கம் பெற்றாலும், தனது சொந்த ராசியிலோ, உச்ச ராசியிலோ அமர்ந்து காணப்பட்டால் எல்லாவித கல்வியையும், செல்வத்தையும் தருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒரு ஜாதகத்தில் சரஸ்வத யோகம் அமைந்து காணப்பட்டால் நிரம்ப கற்றவராகவும் எழுத்தாற்றல் மிக்கவராகவும் புகழ் படைத்தவராகவும் விளங்குவார் என்று பலதீபிகை நூல் சொல்கின்றது. சரஸ்வதி யோகப் பெற்றுவிளங்க புதன், சுக்கிரன், குரு இவர்கள் கேந்திர திரிகோணத்திலும் லக்னத்தில் இருந்து இரண்டாவது வீட்டிலும் அமர்வதோடு குருபகவான் உச்சம், நட்பு வீடு அல்லது சொந்த ராசியிலும் அமர்ந்திருக்க வேண்டுமென்று அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

Advertisment

ss

ஒரு ஜாதகத்தில் புதன்பகவான் நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால் அவர் ஜோதிடத் துறையில் வல்லவராக விளங்குவார் என்று நூல்கள் கூறுகின்றன. புதன்பகவான்தான் தாய்மாமனைக் குறிக்கும் கோள். எனவே ஒரு ஜாதகத்தில் புதன்பகவான் சுப கிரகத்தோடு சேர்வது வலுவைப்பெறுவது புதன்பகவான். இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சுப கிரகங்கள் இருப்பது இவையாவும் தாய்மாமனுக்கு அளப்பரிய நன்மையைத் தரும் கிரக அமைப்பாகும். ஒரு ஜாதகத்தில் கேந்திரத்தில் அதாவது லக்னத்தில் இருந்து ஒன்று, நாலு, ஏழு, பத்தில் புதனும் சுக்கிரனும் அமர்ந்திருக்க அந்த ஜாதகத்தில் அமைந்த மற்ற கிரகங்களின் தோஷங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடுவதாக விமகவி என்னும் தமிழ் ஜோதிட நூல் கூறுகின்றது. மொழிகளில் புதனுக்கு தமிழ் மொழி கொடுக்கப்பட்டுள்ளது. கேந்திர திரிகோணங்களில் புதன் வலுவாக இருக்க, அவர் தமிழ் வித்துவானாக தமிழில் நிரம்பக் கற்றவராக இருப்பார் என்று ஜாதக அலங்காரம் சொல்கின்றது. சூரியனும் புதனும் இணைந்து வலுவோடு எட்டு, நான்கு, லக்னத்தில் அமைந்தாலும் அது ராஜயோகம் என நூல்கள் கூறுகின்றன. இவற்றில் அமர்ந்தாலும் ஒரு ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டில் புதன் இருப்பது அவ்வளவு சிறப்பன்று பாவ கிரகத்தின் சேர்க்கை, பார்வை பெற்றபோது மனநல பாதிப்புகளைக்கூட தரவல்லது என்று சாத்திரங்கள் சொல்கின்றது. எனவே 6, 8, 12-ல் புதன் இருப்பவர்கள் புதனுக்கான கிரகசாந்தியை செய்வது நலம். புதனின் காரகனாக யாதவர்கள், வைஷ்ணவர்கள், ஜோதிடர்கள், வாஸ்து விற்பன்னர்கள் பொற்கொல்லர், தச்சர், ஜோதிடம் பார்க்கும் ஜாதியைச் சார்ந்த வள்ளுவர் பணிக்கர் போன்றவர்கள் கூறப்பட்டுள்ளனர்.

உலகியல் ஜோதிடத்தில் பூகம்பம் வரும் காலத்தை அறிவிப்பதில் புதன்பகவானின் பங்கு மிக முக்கியமாக காணப்படுகிறது. குருபகவானுக்கும், புதன்பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டு எப்போது குருபகவான் தோல்வியுற்று, புதன்பகவான் வெற்றியடைந்தால் அந்த காலத்தில் பூகம்பம் ஏற்படுவதாக பிரகத் சம்ஹிதையில் வராகமிஹிரர் கூறியிருக்கின்றார்.

குழந்தை பிறப்பைப் பொருத்தமட்டில் புதன் பகவானின் பங்கு இருவகையாக நாம் கணக்கிடத்தக்கது. ஒன்று புதனின் வீடுகளில் ஒன்று அல்லது சனியின் வீடுகளில் ஒன்று புத்திர பாவமாகவும் அந்த வீட்டில் சனி அல்லது மாந்தியின் பார்வை, சேர்க்கை ஏற்பட்டபோது ஒருவர் தத்துபுத்திரனைப் பெறுகின்ற யோகமாக சாஸ்திரம் சொல்கின்றது. அதுபோன்றே புதனின் வீடு அல்லது புதனின் வர்க்கங்கள் உதயமாகி அங்கே சனியின் யோகம், பார்வை ஏற்பட்டபோது சூரியன், குரு, செவ்வாய் இவரின் பார்வை பெறாதபோது விஞ்ஞானரீதியாக குழந்தைச்செல்வம் பெற்றுக்கொள்ளுகின்ற யோகத்தை உடையவராக சாத்திரம் சொல்கின்றது.

அதுபோன்று சனியின் வீடு, சனியின் வர்க்கம், ஐந்தாம் வீட்டில் அமைந்து புதனின் சேர்க்கை, பார்வை ஏற்பட்டபோது குரு, சூரியன், செவ்வாயின் பார்வை இல்லாதபோதும் இவ்வாறே விஞ்ஞான முறையில் குழந்தை செல்வம் பெற்றுக்கொள்கின்ற அமைப்பை பெற்றவராக சாஸ்திரம் சொல்கின்றது.

அதாவது விந்தணு ஆரம்பத்தில் குழந்தைச் செல்வத்தைப் பெற்றுக்கொள்கின்ற அமைப்பு என்று பலதீபிகை ஆசிரியர் சொல்கின்றார். புதன் உச்சம் பெற்று அல்லது சொந்த வீட்டில் அமர்ந்து அது கேந்திர ராசியாக அமைந்தது என்றால் பத்ர யோகம் என்ற யோகம் ஏற்படுகின்றது. இந்த யோகத்தைப் பெற்றவரை நாம் பார்த்த உடனடியாக அவர் பத்ரயோகம் பெற்றவர் என்று நாம் உணர்ந்துகொள்ள முடியும். எப்படியென்றால் அத்தகைய யோகத்தைப் பெற்றவர் புலி போன்ற முகத்தைக் கொண்டவராகவும் யானை போன்ற கம்பீர நடை கொண்டவராகவும் விளங்குவார் என்று சாத்திரம் சொல்கின்றது. புதனும் செவ்வாயும் லக்னத்திற்கு இரண்டில் அமர்ந்திருப்பதுகூட ராஜயோகத்தைத் தருகின்ற அமைப்பு என்பதனை இதே பலதீபிகை நூல் சொல்கின்றது.

செல்: 94438 08596

Advertisment