எட்டு

நான்காமதிபதி எட்டில் இருப்பது தாயாருக்கு அதிக துன்பங்களைத் தரும். நினைத்தது நடக்காமல், வீண் விதண்டாவாதப் பேச்சுகளால், தாயார் எதிரிகளால் அவதிப் படுவார். தாயாருக்கு அதிக துன்பம் ஏற்படும். பிடிக்காதவர்களால் செய்வினை செய்யப்பட்டு, குடும்பத்தினர் தொல்லையிலும் துன்பத்திலும் உழன்றுகொண்டே இருப்பார்கள். அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள் காரணமே இன்றி நோயால் அவதிப்படுவர். வீடு அடிக்கடி பழுதடையும். வீட்டுவேலைகள் இருந்துகொண்டே இருக்கும். இடம்விட்டு இடம்சென்று படிப்பது, கல்வியில் தடை, உயர்கல்வி படிக்கும்போது போராட்டம் ஏற்படும். வீடு, மனையில் வில்லங்கம் இருக்கும். ஜாதகர் பெயரில் சொத்துகள் இருக்கக்கூடாது. வீடு கட்டுவதைவிட, கட்டிய வீட்டை வாங்குவது நல்லது. கீழ்வீட்டில் குடியிருப்பதைவிட மாடியில் குடியிருப்பது சிறப்பு. ஏதாவது தொல்லைகளால் அவதிப்பட்டுக் கொண்டே இருப்பர். வாகனங் களில் பழுது, விபத்து ஏற்பட்டு உடலில் காயங்கள் தோன்றும். நிம்மதியற்ற இல்லறம், குடும்ப வாழ்க்கை உண்டாகும். அதிக தோல்வி, அவமானம் ஏற்படும். தாயார் ஏழையாகவும், ஏமாளியாகவும் இருப்பார். இளம்வயதில் தாயாரை இழப்பார். தாயார்வழி ஆதரவு குறைந்திருக்கும். உற்றார்- உறவினர் பகையுண்டு. வறுமை, அவமானம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்கவேண்டும். சுபகிரகப் பார்வை, இணைவானது சுபச்செலவுகளை உண்டாக்கும்.

ஒன்பது

நான்காமதிபதி ஒன்பதில் இருப்பது தந்தைக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். தந்தைவழி உறவுகள், பங்காளிகளால் லாபம், உதவி, ஆதரவு ஏற்படும். கல்வியில் சிறந்து விளங்குவர். ஞானம் மிக்கவர். பெரிய பதவிகளில் இருப்பர். மாமனார்- மாமியார்வழி உதவி ஆதரவுண்டு. மிகச் சிறந்த வல்லுனர்.

Advertisment

12

எதையும் யோசித்து பேசக்கூடியவர். வாகனங்களால் லாபம், வாகனத்தைக்கொண்டு தொழில் செய்யும் அமைப்பு ஏற்படும். பள்ளி, கல்லூரி நடத்துவர். அனைத்து சுகங்களும் தேடிவரும். புகழ், செல்வச் சேர்க்கையை எளிதாக அடைவர். நான்காமதிபதி கெட்டு அல்லது நான்காமதிபதியுடன் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவது உறவுகளைப் பகையாக்கும். சொத்துகளில் வில்லங்கத்தையும் பங்காளிகளால் பாதிப்பையும் உண்டாக்கும். படித்தாலும் வேலைகிடைக்க போராட்டம்தான். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. அன்பு, பாசம் வைத்தாலும் யாரும் உண்மையான அன்போடு நடந்துகொள்ள மாட்டார்கள். எதிரிகளால் அவதிப்படுவர். தந்தைக்கு நோயால் பாதிப்பு ஏற்படும். சுபவலுப் பெற்று தசை நடந்தால் பதவி, புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வரனாகி விடுவர்.

பத்து

நான்காமதிபதி பத்தில் இருப்பது தாயார், வீடு, வாகனம், புகழ் என அதியோகப் பலனைத் தரும். போராட்டங்களின்றி நல்ல தொழில் அமைந்து, படிப்படியாக முன்னேற்றம் பெற்று ஊர்மெச்சும் புகழடைவார். நான்கு, பத்தாமதிபதி தசைகளில் நல்ல முன்னேற்றம் பெறுவார். உறவினர்கள் உதவி, உறவினர் களால் லாபம் உண்டாகும். நான்காமதிபதி தசை நடக்கும்போது தொழிலால் லாபம் பெற்று வீடு, மாளிகை வாங்குவார். நல்லவர்கள் தொடர்பு, நல்லவர்களால் லாபம் பெறுவர். கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலால் லாபம் ஏற்படும். ரியல் எஸ்டேட், கட்டட ஒப்பந்தம், நிலபுலன்கள், விவசாயத்தால் லாபம் பெறுவர். முக்கியஸ்தர்களால் லாபம் கிட்டும். முக்கியஸ்தர்களாக வளர்ச்சியடைவர். கார், பங்களா என சகல சௌபாக்கியங்களும் குறுகிய காலத்தில் பெறுவர். பணம், புகழ், அந்தஸ்து இருப்பதால் மாமியார் மெச்சும் மருமகனாக இருப்பார்.

பத்தாம் வீட்டில் பாவகிரககக் கலப்பேற்பட்டால் மறைமுகமான- முறையற்ற வெளிநாட்டுத் தொழிலால் லாபம் சம்பாதிப்பார். மறைவிட அதிபதிகள் தொடர்புடைய தொழிலால் லாபம் பெறாமல், நஷ்டத்தையும் அரசாங்க தண்டனையையும் பெற நேரும்.

பதினொன்று

பதினொன்றில் நான்காமதிபதி நிற்பது தொழில் லாபத்தையும், தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகத் தையும் தரும். சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருப்பவரை யாரும் எதிர்பாராத உயரத்தில் கொண்டுபோய் அமரவைக்கும். அடுத்தவேளை சோற்றுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நபர் திடீரென்று தங்கத்தட்டில் சாப்பிடும் யோகத்தை நான்காமதிபதி தசை தந்துவிடும். அதேநேரம் தாயாருக்கு கண்டத்தையும் பாதிப்பையும் தரும். தாயாருக்கு அனுபவிக்கும் பாக்கியம் குறைவு. சிறு வயதுமுதல் நன்றாகப் படித்து அறிவை வளர்த்துக்கொள்வார். கல்வியறிவைப் பயன் படுத்தி புத்தியால் முன்னேற்றம் பெறுவார். லாபம் பெறக்கூடிய எண்ணம் தோன்றி, அதை செயல்படுத்தி மிகப் பெரிய வெற்றி பெறுவார். ஏழாமிடத்தைவிட பதினொன்றாமிடம் வலுத்தால், முதல் திருமணத்தில் பல்வேறு கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அடைந்து, இளையதாரம் அமைந்தபின் திடீர் அதிர்ஷ்டம், புகழ், அந்தஸ்து பெற்று யாரும் எதிர்பாராத வளர்ச்சியை எட்டுவார். அரசாங்கத்தில் பெரிய பட்டம், பதவி பெறுவார். நான்காமதிபதி கெட்டு பதினொன்றில் இருந்தால் தாயார், வீடு, வாகனத்தால் லாபம் பெறாமல் நஷ்டத்தையே அடைவார்.

பன்னிரண்டு

நான்காமதிபதி பன்னிரண்டில் இருந்தால் எதற்கெடுத்தாலும் பிரச்சினை, எதைச் செய்தாலும் நஷ்டம் ஏற்படும். தொட்டதெல்லாம் எதாவது வில்லங்கத்தில்போய் முடியும். என்னடா இந்த வாழ்க்கை என வெறுத்துவிடுவர். வறுமை நிலையில் சந்திக்கும் அத்தனை துன்பங்களும் அவமானங்களும் ஏற்பட்டுவிடும். சிறுவயதில் தசை நடந்தால் தாயார் இழப்பு, தாயாரால் அவமானம், தாயாருக்குத் துன்பம் மற்றும் சொந்த வீடில்லாமல் சொந்த ஊரைவிட்டு வெளியூர் சென்று வசிப்பது, சொந்த பந்தங்களால் வெறுத்து ஒதுக்கப்படுதல் போன்ற அனைத் தும் நிகழும். போராட்டம் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். யாருடைய ஆதரவு மின்றி அனாதைபோல் ஊர் ஊராக சுற்றித்திரிய நேரும். வறுமை வாட்டும். அடுத்து நல்ல தசைகள் அமைந்தால் முன்னேற் றம் கிடைக்கும். சிலர் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது, நான்காமதிபதி கெட்ட தசை வந்தால் வீடு, மனை, வாகனத்தை விற்று பரதேசி யாக்கி நாடோடி வாழ்க்கையைத் தந்துவிடும். ந ôன்காமதிபதி கெட்டு பாவகிரகங் களாலும், மறைவிட அதிபதிகளாலும் பாதிக்கப்பட்டு பன்னிரண்டில் இருந்தால் விபரீத ராஜ யோகத்தால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, வெளிநாடு சென்று சம்பாதித்து சொந்த ஊரில் வீடுகட்டி, வசதியான வாகனம் வைத்து புகழுடன் வாழும் யோகம் கிடைத்துவிடும். வெளிநாட்டு வாழ்க்கை, வேற்றுமொழி, இனத்த வரால் லாபம் பெறுவர்.

பரிகாரம்

நான்காமதிபதி கெட்டு தசை நடந்து அவதிப்படுபவர்கள், நடக்கும் கோட்சாரப் பலனுக்கேற்றபடி சில மாற்றங் களைச் செய்துகொள்ள வேண்டும். ஏழரைச் சனியில் நான்காமதிபதி கெட்டு தசை நடப்பவர்கள், தாயாருக்குப் பணிவிடை செய்து, தாயார் பெயரில் புண்ணிய காரியங்கள் செய்யவும். இருக்கும் வீடு தொல்லையாகவும், நிம்மதியின்றியும் இருந்தால், வீட்டை காலிசெய்து புதுவீடு செல்லவும். சொந்தவீடாக இருந்தால் புனரமைப்பு செய்து வருடம் ஒருமுறை வெள்ளையடித்து பூஜைகள் செய்து கொண்டால் நல்ல மாற்றம் வரும். இருக்கும் வாகனங்களில் பழுது ஏற்படுவதால் புதிய வாகனம் வாங்கலாமென தோன்றினாலும், வேறு பழைய வாகனத்தை வாங்கிக் கொள்வது நன்று. வீண் வாக்குவாங்கள், போட்டி, பொறாமை யைக் கைவிட்டு, நிதர்சனமான உண்மை நிலையறிந்து செயல்படவேண்டும். இல்லையென்றால் தசையின் பாதிப்பு அதிகமாகும். பிரச்சினைகளையே சிந்தித்துக்கொண்டி ருந்தால் புதுப்புது பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கும். கெட்ட நேரத்தில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி தானாகக் கிடைக்கும்.

செல்: 96003 53748