sss

சென்னையில் என் அலுவலகத்திற்கு, ஒரு தம்பதியினர் நாடியில் பலன் அறிந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

""ஐயா, எனது மகன், மருமகள். இருவருக்கும் திருமணமாகி, சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் புத்திர பாக்கியம் தடையாகிக்கொண்டே வருகின்றது. குழந்தை பாக்கியம் உண்டாக, ஜோதிடர்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும், பிரார்த்தனைகளையும் செய்தோம். ஆனால்வம்சம்வளர, ஒரு வாரிசு மட்டும் உருவாகவில்லை. இந்த நிலைமாறி, குழந்தை பாக்கியம் உண்டாகி, வம்சம்வளர, வழிகேட்டு வந்துள் ளோம்'' என்றார்.

Advertisment

ஓலையைப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இவன் வம்ச முன்னோர்கள், காலத்தில், சித்தர்கள் பூமியான, தென்பாண்டிய நாட்டுப் பகுதியில் வசித்தவர்கள். நான்கு தலைமுறைக்குமுன்பு, இவனின் வம்ச முன்னோர்களில் ஒருவன், என்னைப் போன்ற ஒருவனிடம், சீடனாக இருந்து,அவனுக்கு தொண்டு செய்துவந்தான்.

Advertisment

அவன் பணிவிடையில் மகிழ்ந்து, இவன் முன்னோர்க்கு அந்த சாது, மூலிகை வைத்திய முறையைக் கற்றுக்கொடுத்து, இந்த மூலிகை மருத்துவத்தை, நேர்மை யான முறையில், நல்லவழியில் செய்து, மக்களைக் காப் பாற்றவேண்டும். தவறான முறையில் செய்தால் என் சாபம் உங்களை பாதிக்கும் என்று கூறினார். தன்னை நாடிவருபவர் களுக்கு தனது குரு கூறியபடி மருத்துவம் பார்த்து, மக்களின் நோய்களைத் தீர்த்தான்.

வம்ச முன்னோர், தனது வாரிசுகளுக்கும், மூலிகைவைத்தியத்தை கற்றுக்கொடுத்து, தன் குரு கூறிய வாக்கினையும் கூறி, நேர்மையான முறையில் தொழில்செய்து ஜீவனம் செய்யுங்கள் என்று கூறி, தவறான முறையில் தொழில் செய்தால் குரு சாபம் பாதிக்கும் என்று கூறிவிட்டு மறைந் தான்.

இவன் வம்சத்தில், அடுத்தடுத்த தலைமுறை வாரிசுகள், வம்ச முன்னோர்கூறியதைக் கடைப்பிடிக்கவில்லை. தவறான முறையில் கர்ப்பம் அடைந்தவர் களின், கருவை கலைப்பது, பெண் குழந்தைகள் பிறந்தால், மூலிகைச் சாற்றைக் கொண்டு, அந்தப் பெண்கிசுக்களை கொள்வது போன்ற பாவச் செயல் களில் ஈடுபட்டு, பணம் சம்பாதித்தார்கள். பணமும் சேர்ந்தது, பாவமும், கூடியது, வம்சமுன்னோர் கூறிய குரு வாக்கை மீறியதால், குரு சாபமும் வளர்ந்தது.

இவன் குடும் பத்தில் மட்டும் குறை இல்லை, குரு சாபத்தால், இவன் வம்சத்தை சேர்ந்த, ஒவ்வொரு குடும்பத்திலும், பிறந்த ஆண்- பெண் யாருக்காவது புத்திர பாக்கியம் இல்லாமல் போவது, பிறந்த குழந்தைகள் அற்ப ஆயுளில் இறப்பது, சரீர குறையுடன் குழந்தை பிறப் பது, கர்ப்பம் கூடிக் கூடி கலைவது, ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, பெண்களுக்கு கர்ப்பப்பை, கோளாறு, கருக்குழாய் அடைப்பு போன்று ஏதாவது ஒரு காரணத்தால், வம்சத்தை சேர்ந்தவர்கள் குருசாப பாதிப்பினை அடைந்துகொண்டுதான், இருக்கின்றார்கள். அகத்தியன் கூறியது உண்மையா? என்று கேள்.

அகத்தியர் ஓலையில் கூறியது அனைத்தும் உண்மைதான். எங்கள் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒருவகையில், இதுபோன்ற பாதிப்பினை அடைந்து கொண்டுதான் இருக்கின்றோம். அதே போன்று, எங்கள் குடும்பத்தினர் வம்ச முன்னோர்கள்செய்த மருத்துவ தொழிலை, டாக்டர், மருந்துவிற்பனை என ஏதாவது ஒருவகையில் மருத்துவத்து டன் தொடர்புகொண்டு தொழில் செய்துவருகின்றோம்.எங்கள் வம்ச முன்னோரின் வாக்கைமீறி, பண ஆசையால், நாங்கள் செய்த தவறுகளால், இந்த தண்டனையை அனுபவித்து வருகின்றோம் என்பதை தெரிந்துகொண்டோம். இந்த பாவ- சாப- பாதிப்புகள் நிவர்த்தியாகி என் வம்சம் விளங்க, வாரிசு பிறக்க, அகத்தியர்தான் வழிகாட்டவேண்டும்.

முன்னோர் வாக்கை அலட்சியப்படுத்தியதால் உண்டான குரு சாப பாதிப்பு நீங்க நிவர்த்தி முறையையும், இவன் மகனுக்கு, புத்திர பாக்கியம் உண்டாக, நடைமுறை வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டிய வழிமுறைகளையும், கூறிவிட்டு,அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

புத்திர பாக்கிய தடைக்கு காரணத்தை அறிந்து கொண்ட கணவன்- மனைவி இருவரும் என்னிடம் விடைபெற்று சென்றனர்.

செல்: 99441 13267