முழு சந்திர கிரகணம் இந்த சுபகிருது ஆண்டு, ஐப்பசி மாதம் 22-ஆம் தேதி (8-11-2022) செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி, மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சம்பவிக்கிறது. இது இந்தியாவில் பெரும்பாலும் தெரியாது. எனவே, எந்த நட்சத்திரக்காரர்களும் சாந்திப் பரிகாரம் செய்யவேண்டிய அவசியமில்லை. அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோவிலில் அர்ச்சனை செய்துகொள்ளலாம்.
கிரகண சக்தியானது மிகுந்த உச்சசக்தியாக பரிணமிப்பதோடல்லாமல், கிரகணம் தெரியக்கூடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரபஞ்சத்தின்மீதான, இயற்கையின்மீதான தாக்கங்களும் சில காலங்களுக்குத் தொடர்கின்றன. சந்திர கிரகணத்தினால் ஏற்படும் தாக்கங்களானது உடனடியாக பாதிப்புகளை அளித்தாலும், சூரிய கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பு சில மாதங்கள் தாமதமாகவே ஏற்படுகிறது அல்லது உணரப்படுகிறது.
பண்டைய ஜோதிட நூல்களில், மிக நெருக்கமான காலங்களில் அல்லது அரைமாத கால இடைவெளிகளில் ஏற்படும் சூரிய- சந்திர கிரகணங்கள் போர் அழிவுகளுக்கான நிமித்தமாகக் கொள்ளப்படுகிறது. மேலும், வணிக விலையிறக்கப் போக்கு, பின்னடைவு, சரிவு, விலை மந்தம், வியாபார சுணக்கம் ஆகியவற்றால் பொருளாதார மந்தநிலை, தொழில் பின்னடைவு ஆகியவையும் ஏற்படலாம்.
சந்திர கிரகணமானது தென்- வட அமெரிக்கா, பசிபிக், இந்து மகாசமுத்திரப் பகுதிகள், ஆசியா, ஆஸ்திரேலியா, வட மற்றும் கிழக்கு ஐரோப்பா, சிட்னி, மெல்போர்ன், சான்பிரான்ஸிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, மெக்ஸிகோ, கொல்கத்தா, கௌஹாத்தி, சில்லிகுரி, காட்மாண்டு, பாட்னா ஆகிய இடங்களில் தெரியும்.
சந்திர கிரகணம் செவ்வாயை அதிபதியாகக்கொண்ட காலபுருஷனுக்கு முதல் பாவமான சரம் மற்றும் நெருப்பு ராசியான மேஷ ராசியில் ஏற்படுகிறது. இது பாஞ்சாலம், (உத்தரகாண்ட், உத்திரப்பிரதேச மேற்குப் பகுதி), கலிங்கம், (தெலங்கானா, ஆந்திரப் பிரதேச வடகிழக்குப் பகுதி, ஒடிசா, மத்தியப் பிரதேசத்தில் சில பகுதிகள்) சௌரஸ்வனா (மதுரா) போன்ற பகுதிகளிலுள்ள வேட்டைக்காரர்கள், காட்டுவாசிகள், மலைவாழ் மக்கள் மற்றும் தீ, வெப்பத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு இன்னல்கள் ஏற்படலாம்.
மேஷத்தின் அதிபதியான செவ்வாய் தைரிய பாவமான மூன்றாமிடத்தில் உள்ளார். எனவே, ரயில், விமான விபத்துகள் ஏற்படலாம். அல்லது அதில் பணிபுரிபவர்கள் வேலைநிறுத்தம் செய்யலாம். இதற்குமுன் நிகழ்ந்த சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் ஏற்பட்டது செவ்வாய் நாளில்தான். லக்னத்திலுள்ள சந்திரன் ராகுவுடன் இணைந்து பாதிப்பிலுள்ளதால் நாட்டில் சுகாதாரமின்மை, மனஅழுத்தம், நிலையற்ற தன்மை ஆகியவை ஏற்படும். நெருப்பு ராசியில் இடம்பெற்றுள்ள ராகு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும்.
இதன்காரணமாக போர் மேகங்கள் சூழலாம். இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள், நிலநடுக்கம், அரசியல் இடையூறுகள், கூட்டு மரணங்கள், குற்றங் கள் அதிகரித்தல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக சீர்கேடுகள் அதிகரிக்கும். விபத்து, குண்டு வெடிப்பு, தீ, எல்லைத் தகராறுகள் போன்றவற்றுக்கு மூன்றாமிட வக்ர செவ்வாய் காரணமாகிறார்.
களத்திர பாவ பாதிப்பால் வெளிநாட்டுப் பிரச்சினைகள், முக்கிய பிரமுகர்களின் வாழ்க்கையில் விவாகரத்து போன்றவற்றால் குடும்பத்தில் புயல் உருவாகக்கூடும்.
5-ஆமதிபதி 7-ல் நீசமடைவதால் பங்குச்சந்தை, 5-ஆம் பாவத் தொடர்புடைய காரகங்கள், கேளிக்கைத் துறைகள் ஆகியவை பாதிப்படையும். புதன் பாதிப்பால் வெளிநாட்டு ஒப்பந்தங்கள், வணிக மற்றும் வியாபார ஒப்பந்தங்கள் முறிவடையும். ஊழல், விவாகரத்து, பெண்களுக்கு எதிரான விவகாரங்கள், ஆகியவை சுக்கிரனின் பாதிப்பால் நிகழும். 10-ஆமிட பாதிப்பால் அரசுக்கு அவமானங் கள், பிரச்சினைகள், பிரபல தலைவர்களின் உடல் பாதிப்பு- மரணம் ஆகியவை நிகழலாம். விரய பாவ பாதிப்பு எதிரிகளின் நாசவேலைக்கு வழிவகுக்கும். ஒற்றர் களால் தொல்லை, அழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவை ஏற்படலாம். வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்பதவி வகிப்பவர்கள், நீதித்துறை, ஆன்மிக குருமார்கள் ஆகியோருக்கு இன்னல்கள் எழலாம்.
ஜனன ஜாதகத்தில் செவ்வாய்மீது ஏற்படும் கிரகணமானது நச்சு நிறைந்தது; கொடுமையானது எனலாம். ஜனன செவ்வாய்மீது சந்திர கிரகணம் ஏற்பட்டபோது மகாத்மா கொல்லப்பட்டார். அதேநிலை அப்ரஹாம் லிங்கனுக்கும் ஏற்பட்டது. சூரிய கிரகணப் புள்ளியில் செவ்வாய் வந்த சில மாதங்களில் கென்னடியும், ஜனன சூரியனுக்கு எதிரில் ரிஷபத்தில் கிரகணம் ஏற்பட்ட 5-ஆவது மாதத்தில் இந்திர பிரியதர்ஷிணியும் கொல்லப்பட்டனர்.
சூரிய கிரகணத்தால் நமது நாட்டுக்கு பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், சந்திர கிரகணத்தின்போது, லக்னமும், ராகுவும் கார்த்திகை நட்சத்திரத்தில் இருப்பதாலும், அது கிரகண நட்சத்திரமான பரணிக்கு பிரத்யக் தாரையாக வருவதாலும் நமது நாட்டுக்கு அந்நிய சக்திகளால் பிரச்சினைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்படலாம். அதுபோல், சனியின் பார்வை குருவுக்கும், கேதுவுக்கும் இருப்பதால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
இரண்டாவது உலகப்போர் நிகழ்ந்த காலத்தே சர ராசிகளில் நான்கு அசுபகிரக இணைவுகள் காணப்பட்டதைப்போலவே தற்போது மூன்று அசுப கிரகங்கள் சர ராசியில் இருப்பதோடு, செவ்வாயும் மிதுனத் தில் இருந்து, சனியைப் பார்வை செய்கிறார்.
செல்: 97891 01742