என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? -வள்ளியம்மை, புதுகோட்டை.

பதில்: அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் நீசம் பெற்றாலும் உடன் புதன் அமையப்பெற்று நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு உள்ளது. தற்போது குரு தசையில் குரு புக்தி நடப்பதா லும், ராசிக்கு 5-ல் குரு இருப்பதாலும் தற்போது திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.

என் மகனும் மருமகளும் கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவரும் சேர்ந்து வாழ்வார்களா அல்லது விவாகரத்து செய்யலாமா?

Advertisment

-அம்பிகா, அரியலூர்.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் லக்ன கேந்திரம் பெற்றிருப்பதும் குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பது நல்ல அமைப்பு ஆகும்.. சுக்கிரன் 5-ல் நீசம் பெற்றாலும் உடன் புதன் அமையப்பெற்று நீசபங்கம் ஏற்பட்டிருப்பதும் அனுகூலமான அமைப்புதான்.

உங்கள் மருமகள் ஜாதகத்தில் அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, துலா லக்னத்தில் பிறந்திருக்கிறார்.அந்த ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி செவ்வாய் 11-ல் இருப்பதும் நல்ல அமைப்புதான். உங்கள் மருமகள் ஜாதகத்தில் அஸ்த நட்சத்திரமாகி உங்கள் மகன் கிருத்திகை நட்சத்திரம் ரிஷப ராசியாக இருப்பது நட்சத்திர பொருத்தரீதியாகவும் ஒரு சிறப்பான அமைப்புதான். உங்கள் மருமகளுக்கு தற்போது லக்னத்துக்கு 2-ல் உள்ள ராகு தசை 17-1-2026 முடிய நடக்கிறது. கணவன்- மனைவியிடையே யாராவது ஒருவருக்கு 2-ல் பாவ கிரகம் இருந்து தசை நடந்தால் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் கொடுக்கும். சற்று அனுசரித்து சென்றால் இருவரும் இணைந்து வாழக்கூடிய அமைப்புகள் உண்டாகும். தற்போது நடக்கக்கூடிய ராகு தசை முடிந்து 2026 தொடக்கத்தில் குரு தசை வருகின்றபொழுது இருவருக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள் உண்டு.

Advertisment

எனக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை. கணவர் வெளியூரில் வேலை செய்கிறார். எனது உடல்நலம் மற்றும் கணவருடன் சேர்ந்து வாழ்வது குறித்து தயவுசெய்து கூறுங்கள்?

பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது குரு தசையில் குரு புக்தி 5-5-2025 முடிய நடக்கிறது. குரு வக்ரகதியிலிருந்து குரு தசையில் குரு புக்தி நடப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உடல்சோர்வு, தேவையில்லாத நிம்மதி குறைவுகள் ஏற்படுகிறது. 2025 மே மாதத்திற்கு பிறகு குரு தசையில் சனி புக்தி வருகின்றபொழுது தற்போது இருக்கக்கூடிய உடல் பிரச்சினைகள் எல்லாம் சற்று குறைந்து ஒரு நல்ல நிலை அடையக்கூடிய அமைப்பும், குடும்பத்தில் கணவனுடன் இணைந்து வாழக்கூடிய அமைப்பும் உண்டாகும். தற்போது குரு தசையில் குருபுக்தி நடப்பதால் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, மற்றவர்களை நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது நல்லது. தற்போது குரு தசையில் குருபுக்தி நடப்பதால் நீங்கள் எதிர்பார்க்கின்ற வாய்ப்புகள், எதிர்பார்க்கக்கூடிய மதிப்பு, மரியாதைகள் யாவும் வெளிநபர்களிடம் இருந்து கிடைக்காது. தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும்.

சொந்த வீடு எப்போது அமையும்? -மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர்.

பதில்: உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன் லாப ஸ்தானத்தில் லக்னாதிபதி புதன் சேர்க்கைப் பெற்றிருப்பது அற்புதமான அமைப்பாகும். 4-ஆம் அதிபதி குரு 4-ல் வலுவாக இருப்பதால் சொந்த வீடு யோகம் உண்டு. தற்போது 4-ஆம் அதிபதி குருவின் தசையில் சுயபுக்தி நடப்பதால் சொந்த வீடு வாங்க முயற்சிப்பது நற்பலனை தரும். குரு வக்ரகதியில் இருப்பதால் தனித்து வாங்காமல் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு வாங்க முயற்சித்தால் விரைவில் நல்லது நடக்கும். 2025 மே மாதத்திற்குபிறகு ஒரு நல்லவாய்ப்புகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.