murugan

இந்த (ஆண்) ஜாதகருக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா? இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Advertisment

பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 5-ல் ராகு இருந்து சூரியன்- ராகு சாரம் பெற்றிருப்பது பூர்வபுண்ணிய தோஷம் ஆகும். இதற்கு பரிகாரமாக குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, இராமேஸ்வரம் சென்றுவருவது நன்மைத் தரும்.

ஒரு ஜாதகத்தில் குரு, சனி சேர்ந்திருந்தால்தான் பிரம்மஹத்தி தோஷம் ஆகும். நீங்கள் கேள்வியை மாற்றி கேட்கிறீர்கள். இந்த ஜாதகத் தில் பூர்வபுண்ணிய தோஷம் இருக்கிறது. இதற்கான இறை வழிபாடுகளை மேற்கொள்ளவும். எவ்வளவு பெரிய கெடுதி யாக இருந்தாலும் ஜாதகரின் குலதெய்வத்தை வழிபாடு செய்வதன்மூலம் இருக்கக்கூடிய பாதிப்புகள் குறைந்து வளமான பலன்கள் ஏற்படும். தற்போது ராகு தசை நடப்பதால் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.

Advertisment

எனக்கு முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணம் எப்போது நடைபெறும்? வரும் வரன் அரசு துறையில் உள்ளவரா? எந்த திசை எந்த புக்தியில் திருமணம் நடைபெறும்?

-உமாமகேஸ்வரி, சங்கரன்கோவில்.

பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு லக்ன கேந்திரம் பெற்றிருப்பதும், திரிகோண ஸ்தானமான 9-ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதும் நல்ல அமைப்பாகும். இதன் காரணமாக சிறப்பான இல்லற வாழ்க்கை யோகம் உண்டுஎன்றாலும் உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ஆம் வீட்டில் சனி, ராகு இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். 8-ஆம் வீட்டில் பாவ கிரகம் இருந்தால் யாரை திருமணம் செய்தாலும் கணவர்வழி உறவினர்கள்மூலமாக நிறைய இடையூறுகளை சந்திக்கவேண்டிய நிலை இருக்கும். முதலில் ஏற்பட்ட திருமணத்திலும் கணவர்வழி உறவினர்கள்தான் உங்களுக்கு ஒரு இடையூறுகளை ஏற்படுத்தி இருப்பார்கள்.

தற்போது புதன் தசையில் ராகு புக்தி 29-6-2026 முடிய நடப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. குறிப்பாக உங்கள் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி ராகு சாரம் பெற்றிருப்பதால் அந்நியத்தில் வரன் பார்ப்பதன்மூலம் ஒரு வளமான பலன்கள் உண்டாகும். அப்படி திருமணம் அமைந்தால் ராகு புக்தி முடியும்வரை விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். அடுத்து வரக்கூடிய குரு புக்தியில் ஒரு வளமான பலனை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை தரும்.

இந்த ஜாதகருக்கு ஒரு காலி மனை உள்ளது. இந்த மனையை நல்ல விலைக்கு விற்க என்ன பரிகாரம் செய்ய

வேண்டும்?

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்தஜாதகருக்கு 4-ஆம் அதிபதி சந்திரன் லக்ன கேந்திரம் பெற்றிருப்பதும், பூமி காரகன் செவ்வாய் ஆட்சி பெற்றிருப்ப தும் சொத்துரீதியாகஅனுகூலமான பலனை தரக்கூடியஅமைப்புதான். நீங்கள் உங்கள் பெயரிலுள்ள இடத்தை விற்கவேண்டும் என்று கேட்கிறீர்கள். ஜாதகத்தில் சூரியன்- ராகு சேர்க்கை பெற்றிருப்பது பிதுர்வழி தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பா கும். இதன் காரணமாக ஜாதகருக்கு ஒரு நல்லது நடக்க இடையூறுகள் ஏற்படுகிறது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, உக்கிர தெய்வத்தை வழிபாடு செய்வதன்மூலம் தற்போது குரு 2-ல் இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்?அரசு பணி கிடைக்குமா, இல்லை வெளிநாடு சென்று பணி செய்யலாமா?

-மகாலட்சுமி, மதுரை.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் நீசம்

பெற்றாலும் புதன்- சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நீசபங்க ராஜயோகம் உள்ளது. ஜாதகிக்கு தற்போது சூரிய தசையில் புதன் புக்தி 7-8-2024 முடிய நடக்கிறது. வரும் ஜனவரிமுதல் ஜாதகிக்கு சூரிய தசையில்சுக்கிர புக்தி நடக்கும். சுக்கிரன் 7-ஆம் அதிபதிஎன்ற காரணத்தினால் சுக்கிர புக்தி காலத்தில் ஒரு நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜாதகத்தில் செவ்வாய்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் மண வாழ்வில் ஒற்றுமை குறைவு, சிக்கல்கள் வர வாய்ப்பு உண்டு. கேது சேர்க்கைப்பெற்ற செவ்வாய் என்ற காரணத்தால் ஜாதகிக்கு உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பதுநல்லது. இந்த ஜாதகத்தில் 9-ல் ராகு இருப்பதால்வெளியூர், வெளிநாடு சம்பந்தப்பட்ட பணிக்காக முயற்சித்தால் நன்மை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறக்கின்ற போதே சனி, குரு வக்ரம் பெற்றிருப்பதால் அதாவது குரு வக்ரகதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அனைத்து விஷயத்திற்கும் கௌரவம் பார்ப்பார்கள். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் முதலில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால்அதன்பின்பு ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஜாதகிக்கு அடுத்து சந்திர தசை நடக்க இருப்பதால்பிறந்த இடத்தைவிட வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாக்கும். மணவாழ்வில் விட்டுக் கொடுத்து சென்றால்தான் வாழ்வில் ஒற்றுமை இருக்கும். மகத்தில் பிறந்திருப்ப தால் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.