எனக்கு பிப்ரவரி 2025-ல் விவாகரத்து கிடைத்தது. மறுமணம் செய்வதற்கு வாய்ப்பு உண்டா? -கணேசன், சிவகிரி.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் உச்சம்பெற்று 12-ஆம் அதிபதி குரு 7-ல் அமையப்பெற்று 7, 12-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. தற்போது உங்களுக்கு ராகு தசையில் கேது புக்தி 23-5-2025-ல் முடிந்து அடுத்து உச்சம்பெற்ற சுக்கிர புக்தி வருவதால் அந்த நேரத்தில் மறுமணத்திற்காக முயற்சி செய்தால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. சூரியன், ராகு சேர்க்கை பெற்றபாழுது பிறந்திருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் முயற்சி செய்வது நல்லது.

எனக்கு மன அழுத்தம் சார்ந்த உடல்நலம் உபாதை அதிகமாக உள்ளது. என்ன வழிபாடு செய்யலாம் என்று கூறுங்கள்? -கோகுல் நாத், சென்னை.

Q&A

புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி 9-9-2027 முடிய நடக்கிறது. தேய்பிறையில் பிறந்த உங்களுக்கு சந்திரன் வீட்டில் கேது அமையப் பெற்றிருப்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படுகிறது. சந்திரன், குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் கெடுதி இல்லை. பெருமாள் வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது தசை புக்தி சாதகமாக இருப்ப தால் அனுகூலமான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கடந்த வருடத்தில் கேது புக்தி நடந்தபொழுதுதான் அதிகப்படியான பிரச் சினைகள் இருந்திருக்கும். இனி பிரச்சினைகள் குறைந்து ஒரு வளமான பலன்கள் உண்டாகும்.

நான் தனியார் மருத்துவமனையில் பணியில் உள்ளேன். எனக்கு அரசாங்க வேலை எப்பொழுது கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -ஸ்ரீசூரஜ், அருப்புகோட்டை.

Advertisment

மக நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் துக்கு 10-ஆம் அதிபதி சனி, ராகு சேர்க்கை பெற்று ஜென்ம லக்னத்தில் உள்ளார். சூரியன், புதன், சனி, ராகு சேர்க்கை பெற்றிருக் கின்றபொழுது பிறந்து உள்ளீர்கள். தற்போது சூரிய தசை நடப்பதால் அரசாங்கவழியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணங்கள் இருந்தாலும் உங்களுக்கு கிரக அமைப்புரீதியாக சனிக்கு அருகில் ராகு இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவது, பன்னாட்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் பணிபுரிவதுமூலமாக வளமான பலன்களை அடையமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, குலதெய்வ வழிபாடு மேற் கொள்வதன்மூலமாக அனுகூலங்கள் உண்டாகும்.

ஒற்றை மகன் இருக்கும் வீட்டில் கறி வேப்பிலை மரம் வளர்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இது உண்மையா? ஆர். ராஜி, சென்னை-4.

ஜோதிடத்தில் விருட்ச சாஸ்திரம் என்றே ஒரு பகுதி உள்ளது. மேலும் சில தோஷங்களுக்கு மரம்நட்டு வளர்ப்பதே தோஷ நிவர்த்தியாகும். மேலும் கறிவேப் பிலை மரம், அவ்வளவு சீக்கிரத்தில் வளர்ந்து விடாது. உங்கள் வீட்டில் கறிவேப்பிலை மரம் வளர்வது நல்லதுதான். அப்படியும் உங்களுக்கு மன சஞ்சலம் இருப்பின், உங்கள் வீட்டு கறிவேப்பிலையை நிறைய பேருக்கு இலவசமாக் கொடுங்கள். அதுவே பல நன்மைகளைக் கொடுக்கும்.

Advertisment