எப்பொழுது ட.ட்க் பட்டம் பெற்று வெளிநாட்டில் வேலை கிடைக்கும்? எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் என்ன செய்யவேண்டும்? -ராமு, திண்டுக்கல்.

ss

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 9, 10-க்கு அதிபதியான சுக்கிரன்- புதனுடன் இணைந்து 6-ல் இருக்கும்பொழுது பிறந்து உள்ளீர்கள். தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி 14-7-2027 முடிய நடக்கிறது. சுக்கிரன் 9-ஆம் அதிபதி என்பதால் முனைவர் பட்டத்திற்கான முயற்சிகளில் தற்போது தீவிரமாக முயற்சித்தால் அடுத்து வரும் ஆண்டில் அதனை முழுமையாக முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு ராகு லக்னத்தில் இருந்தாலும் பாவகரீதியாக 12-ல் உள்ளார். உங்கள் ஜாதகத்தில் 9, 12-க்கு அதிபதியான சுக்கிரனும் சூரியனும் இணைந்து உடன் சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் எதிர்காலத்தில் வெளிநாடு முயற்சிகள் மேற்கொண்டால் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிர புக்தி நடப்பதால் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் நல்லது நடக்க வாய்ப்புண்டு. 7-ஆம் அதிபதி நீசம்பெற்று பரிவர்த்தனை பெற்றிருப்பதால் ஒரு தடைக்குப் பிறகு அனுகூலங்கள் நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

எனது மகளுக்கு எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று தெரிவிக்கவும்? -சாந்தி, திருச்சி.

Advertisment

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு புத்திரகாரகன் குரு 7-ல் அமை யப் பெற்று 7-ஆம் அதிபதி சனி 9-ல் அமையப் பெற்று 7, 9 பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. குரு நீசம்பெற்று பரிவர்த்தனை பெற்றிருப்பதால் குழந்தை பாக்கிய விஷயத் தில் முதலில் சில தடை, தடைக்குப்பிறகு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் மகளுக்கு தற்போது ராகு தசையில் சனி புக்தி 15-12-2026 முடிய நடக்கிறது. 2027 தொடக்கத்தில் 5-ல் உள்ள புதன் புக்தி நடக்கும் சமயத்தில் குழந்தை பாக்கியத்திற்கான யோகங்கள் உண்டு. தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

இந்த ஜாதகருக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? ஜே. வடிவேலன், புதுச்சேரி.

பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ல் மறைந்து சனி பார்வை பெற்றதால் திருமணம் தாமதமாகி யது. அடுத்து திருமண வயது காலத்தில் 2015 முதல் 2018 வரை புதன் தசையில் சனி புக்தி நடந்ததும், 2018 ஜனவரிமுதல் 2025 ஜனவரிவரை கேது தசை நடைபெற்றதாலும் திருமணம் நடைபெற இடையூறுகள் ஏற்பட்டது. தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் திருமண முயற்சிகளைத் தீவிரமாக செய்தால் விரைவில் நல்லது நடக்க வாய்ப்புண்டு. ஜாதகத்தில் சூரியன், சந்திரன், கேது சேர்க்கைப் பெற்றிருப்பதாலும், சுக்கிரன்- ராகு சாரம் பெற்றிருப்பதாலும் சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப் பது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

Advertisment