பிரிந்து விட்ட இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை ஏற்படுமா அல்லது ஆணுக்கு மறுமணம் செய்ய லாமா? எப்பொழுது செய்யலாம் என்று கூறுங்கள்? ஏ. செல்வராஜ், சென்னை- 63

ரேவதி நட்சத்திரம். மீன ராசி. மிதுன லக்னத்தில் பிறந்த ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் 11-ஆம் வீட்டில் அமைந்து குரு பார்வை யுடன் இருப்பதும், 7-ஆம் அதிபதி குரு 3-ல் இருப்பதும் நல்ல அமைப்பு தான். சுக்கிரன், குரு இருவரும் கேது நட்சத் திரத்தில் இருப்பதால் குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறைவு ஏற்படுகிறது. ஆண் ஜாதகம் ரேவதி நட்சத்திரமாக இருப்ப தும், பெண் ஜாதகம் அனுஷ நட்சத் திரமாக இருப்பதும் நட்சத்திர பொருத்தரீதியாக சிறப்பு என்றா லும் பெண் ஜாதகத்தில் 7-ல் கேது இருப்பதும், 7-ஆம் அதிபதி சனி 10-ல் நீசம்பெற்று கேது நட்சத்திரத்தில் இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். பெண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ர கதியில் இருந்து ராகு நட்சத் திரத்தில் இருப்பதும், செவ்வாயை சனி பார்ப்பதும் அவ்வளவு சாதக மான அமைப்பு என கூறமுடியாது. பெண் ஜாதகரீதியாக தற்சமயம் புதன் தசையில் சனி புக்தி 6-5-2026 முடிய நடப்பதும், அடுத்து 7-ஆம் வீட்டிலுள்ள கேது தசை நடக்க இருப்பதும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சென்றால் நல்லது. பெண் ஜாதகத்தில் 7-ல் கேது இருப்பதாலும் ஆண் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி குருவும் சுக்கிரனும் கேது சாரம் பெற்றிருப்பதா லும் ஒருவருக்கொருவர் அனுசரித்துக் கொண்டு வாழவேண்டும் என்று நினைத்தால் வாழலாம். அப்படியில்லை என்றால் ஆணுக்கு மறுமணம் செய்வது நல்லது. பெண் ஜாதகத்தில் அடுத்து 7-ல் உள்ள கேது தசை நடக்க இருப்பதாலும், செவ்வாய் வக்ரகதியில் இருப்பதாலும் மண வாழ்வில் பெரிய பிடிமானம் இருக்காது.

ss

என் மகனுக்கு 35 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. மூலம் நட்சத்திரம் என்பதால் பெண்வீட்டார் வேண்டாம் என்று கூறுகின்றனர். நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பின்பாவது திருமணம் நடைபெறுமா? பெண் எந்த திசையில் இருந்து அமையும், மணவாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -பாலன், சென்னை.

மூல நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி புதன் 7-ல் ஆட்சி பெற்றிருப்பதும், செவ்வாய், சுக்கிரன் 8-ல் இணைந்திருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பொதுவாக மூல நட்சத்திரம் என்றால் மாமனாருக்கு ஆகாது என்ற ஒரு கருத்து உண்டு. அதுவும் பெண் மூலம் என்றால்தான் கெடுதி, ஆண் மூலம் அரசாளும் என்று பழமொழி உண்டு. ஆனால் நடைமுறையில் அதனை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை. நாங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் ஒரு ஆண் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் பெண் கிடைப்பதில் நிறைய இடையூறுகள் இருக்கிறது. தற்போது சந்திர தசையில் குரு புக்தி 12-5-2025 முடிய நடக்கிறது. அடுத்து சனி புக்தி நடந்தாலும் சனி- சுக்கிரன் சாரம் பெற்ற இருப்பதாலும், 14-5-2025 முதல் ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிக்க இருப்பதாலும் தற்போது நீங்கள் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும். சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. 7-ல் புதன் பலமாக இருந்து குரு சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் ஜாதகர் இருக்கக்கூடிய இடத்தில் இருந்து வடக்கு திசையில் பெண் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

Advertisment

இந்த பெண்ணின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை பற்றி கூறுங்கள்? -பாலகிருஷ்ணன், சுரண்டை.

அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகிக்கு கல்வி காரகன் புதன், செவ்வாய், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்க்கைப்பெற்று 9-ஆம் வீட்டில் உள்ளது. புதன், செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்றிருப்பதால் ஒரு சின்ன தடைக்குப்பிறகு கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. பெண்ணின் ஜாதகத் தில் சனி, கேது ராசியிலும் இணைந்து நவாம்சத்திலும் இணைந்திருப்பதால் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குறிப்பாக சனி புக்தி, கேது புக்தி நடக்கும் சமயங்களில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம் என்பதால் அக்காலங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தற்போது சந்திர தசை நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக வளமான பலன்கள் ஏற்படும்.

நடப்பு தசையில் இவருடைய வாழ்க்கை எப்பயிருக்கும் என்று கூறுங்கள்? -எம். கார்த்திகேயன், திருநெல்வேலி.

Advertisment

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 3, 7-க்கு அதிபதியான குரு- சந்திரன் பரிவர்த் தனை பெற்று 11-4-2024 முதல் சந்திர தசை நடக்கி றது. மகர லக்னத்திற்கு சந்திரன் 7- ஆம் அதிபதி என்பதால் உடல்நலத் தில் கவனம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. பரிவர்த்தனை பெற்ற சந்திர தசை என்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலங்கள், பயணங்களால் முன்னேற் றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெருமாள் வழிபாடுகள் மேற்கொள்வதன்மூலமாக வளமான பலன்களை அடையமுடியும்.

சிறுவயதில் படிப்பில் ஆர்வம் காட்டினான். ஆனால் கல்லூரியில் சேர்த்ததும் கல்லூரிக்கும் போகவில்லை. வெளியே எங்கும் செல்லாமால் ஐந்து வருடமாக வீட்டிலேயே இருக்கிறான். இது எதனால்? இந்த நிலை எப்பொழுது மாறும் என்று கூறுங்கள்? -விஜயலட்சுமி, கோயம்புத்தூர்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு கல்விகாரகன் புதன் நீசம்பெற்று புதன்- குரு பரிவர்த்தனை பெற்றபொழுது பிறந்துள்ளார். தற்போது ஜாத கருக்கு குறிப் பாக சிம்ம லக் னத்தில் பிறந்த ஜாதகருக்கு சனி- ராகு சேர்க் கைப் பெற்று ராகு தசை நடப்பதால் தேவையற்ற நட்புகள் பேச்சில் ஸ்திரத் தன்மை இல்லாத நிலை ஏற்படக்கூடிய நேரமாகும். ராகு தசையில் தற்போது சந்திர புக்தி நடப்பதும் அவ்வளவு சாதகம் அல்ல. 2026 மே முதல் ஜாதகருக்கு குரு தசை தொடங்க இருக்கிறது. குரு தசை காலத்தில் ஒரு இடமாற்றத்துடன் கல்விரீதியாக ஒரு முன்னேற்றமும், ஜாதக ருடைய வாழ்வில் ஒருசில நல்ல மாற்றங் களும் ஏற்பட வாய்ப்புண்டு. தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.