"வார்த்தைகளுடையனாகும் வழக்கறிந்துரைக்க வல்லான்
கூத்தக மனத்தனாகுங்க் குணமுடைக் க்ளையனாகும்
போர்த்தது சூரியனாகும் புகழ் பெற பொருளுந்தேடுங்
கார்த்திகை நாளிற் தோன்றுங் கருத்துள காளைதானே.'
-விரும கண்டிகை
பொருள்: கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் வாக்கு வல்லமையுடையவர். பொன்னும், புகழும் அவரைத் தேடி வரும்.
ஒரு மரத்தைப் பார்க்கும்போது, அதன் தண்டு, இலை, பூ, காய் போன்றவையே கண்ணுக்கு புலனாகும். ஆனால், இவை எல்லா வற்றிற்கும் ஆதாரமாக விளங்குவது வேர்தான் என்பதை அறிய மாட்டோம். மனித வாழ்க்கையை தீர்மானிப்பது, அவரவர் எண்ணங்களே.
அந்த எண்ணங்களுக்குக் காரணமான, மனமும், மனதிற்குக் காரககனாகிய சந்திரனும், சந்திரன் அமர்ந்த நட்சத்திரமும்தான் ஒருவரின் செயலுக்கு வடிவமாகிறது. ஜனன காலத்து நட்சத்திரத் தையும், கோட்சார கதியையும் கணக்கிட் டால் வருங்காலத்தை அறியலாம்.
3- கார்த்திகை
பொதுவான குணம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் நீதிக்கு மரியாதை தருபவர் களாக இருப்பார்கள். கல்வியில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். வைகாசி, அமாவாசை கூடும் நாளில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர், உலகப் புகழ்பெறுவார்.
கார்த்திகை நட்சத்திரம் (ஆண்)
* குணம்: அறிவாளிகளாக இருந்தாலும், பொறுமையற்றவர்கள். பிறருக்கு ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருந்தா லும், தன் சொந்த வாழ்க்கை யில் தவறான முடிவுகளை யெடுப்பார்.
* குடும்பம்: குடும்ப நன்மைக்காக எதையும் தியாகம் செய்யும் மனமுடையவர். எவ்வளவு துன்பம் வந்தாலும், குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாதவர். தனது தாயுடன் மிகுந்த பாசத்துடன் இருப்பார்.
* கல்வி: சில தவிர்க்கமுடியா காரணங்களால் கல்வியில் தடை ஏற்படும். போராடினால் வெற்றிபெறலாம்.
* தொழில்: கூட்டுத் தொழில் உதவாது. 30 வயதிற்கு பிறகுதான், வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை அடைவார்.
திருமணப் பொருத்தம்
பரணி, பூரம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
திருமண வாழ்க்கை
குடும்பத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதால், தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழமுடியாமல் போகும்.
* ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால் குரு தசை நடக்கும் காலத்தில், பற்களில் பிரச்சினை ஏற்படும். பலவீனமான கண்பார்வையால் பாதிக்கப்படுவார்.
கார்த்திகை நட்சத்திரம் (பெண்)
* குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், தந்திரமாக பேசக்கூடியவர். வீரம் மிகுந்தவர்.
* குடும்பம்: திருமண வாழ்க்கைப் போராட்டம் மிகுந்ததாக இருக்கும். இந்த நட்சத்திரத்தில் சனிக் கிழமையில் பிறந்தால், "விஷ கன்னிகா' யோகத்தால் பாதிக்கப்படுவார். திருமணம், புத்திர பாக்கியத்தில் தடை உண்டாகலாம்.
* திருமணப் பொருத்தம்: புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி, மிருகசிரீடம், சித்திரை, பூராடம் நீங்கலாக மற்ற நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
* ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் 27 வயதுக்குமேல், ஆரோக்கியத்தில் கோளாறு கள் உண்டாகும்.
நட்சத்திர பலன்கள்
கார்த்திகை நட்சத்திரக் காரர்கள், அன்றைய தினத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு தின பலனறியும் குறிப்பு.
-கார்த்திகை நட்சத்திரம் வரும் இதழிலும் தொடரும்!
செல்: 63819 58636