சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.
சிம்ம லக்ன 5-ல் சனி
சென்ற ஜென்மத்தில் அறிவுத் துரோகம் செய்திருப்பீர்கள். பிறருக்கு தவறான அறிவுரைகள் கூறியிருப்பீர்கள். திருமண விஷயத்தில் சண்டையும், குசும்பும் செய்திருப்பீர்கள். உங்கள் தந்தையுடன் ஏற்பட்ட பிணக்கால், அவரின் ஆரோக்கிய நலனில் அக்கறை இன்றி செயல்பட்டிருப்பீர்கள். ஒரு ஆன்மிக மடத்தை பாழ்பண்ணி இருப்பீர்கள். பசு மடத்தையும் பாழாக்கியிருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் உங்கள் மற்றும் உங்களின் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் மிகவும் சீர்கெட்டு இருக்கும். வாழ்க் கைத் துணையின் பிரிவு இருக்கக் கூடும். அது மிதமிஞ்சிய காதலால் ஏற்பட்ட எரிச்சல் பிரிவாக அமையும். அரசு வேலை என்பது கனவாகவே இருக்கும்.
வியாழக்கிழமைதோறும், பெருமாளை துளசிகொண்டு வணங்கவும்.
சிம்ம லக்ன 5-ஆமிட செவ்வாய்
சென்ற ஜென்மத்தில் பெற்றோரை வேறிடம் துரத்தி யிருப்பீர்கள். அல்லது பெற்றோரிடம் கோபித்து, தனியாக வசித்திருப்பீர்கள். திருமண புரோக்கராக இருந்து, பல உருப் படாத திருமணங்களை ஆயிரம் பொய் சொல்லி சேர்த்திருப்பீர்கள். விவசாய நிலத்தை, வரப்பு தள்ளிவைத்திருப்பீர்கள். அரசு தரும் சலுகைகள், மானியங்கள், உதவிகளை கொடுக்காமல், மறைத்து, நீங்களே அனுபவித்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் தாயோ, தகப்பனோ இன்றி திண்டாட நேரும். உங்கள் திருமண விஷயத்தில், திருமண அமைப்புகள், உங்கள் நிலைக்கு, மிகவும் பொருந்தாத வரனை அமைத்து கொடுத்துவிடும். அரசுவகையில் மிக அல்லல் அனுபவிக்க நேரிடும். உங்களில் சிலரின் நிலம், வயல், தோட்டத்தை, அரசு பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும். அதற் குரிய பணமும் கையில் ஒழுங்காக கிடைக் காது. உடன் பிறந்தவர்கள்வகையில் நன்மை கிடைக்காது.
வியாழக்கிழமைகளில், முருகருக்கு தீபமேற்றி வழிபடவும்.
சிம்ம லக்ன 5-ல் ராகு
சென்ற ஜென்மத்தில் சிம்ம லக்னத்திற்கு 5-ல் ராகு இருந்தால், பரம்பரையின், பெருமையை, தங்களது சீர்கெட்ட நடவடிக்கையால் பாழ்படுத்தி இருப்பீர்கள். வகை, தொகையின்றி பெண் தொடர்பு இருந்திருக்கும். மிக கீழ்மட்ட தொடர்பு, மிக மேல் மட்ட தொடர்பு என அனைத்து லெவல் காண்டாக்ட் இருந்திருக்கும். சொந்த தந்தையை சம்பவம் செய்திருப்பார்கள். சிவன் சொத்தை அபகரித்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில், குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும். சிலர் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு சங்கடம் பெறுவர். சிலர் வெகு பொறுக்கியாக இருப்பர். தந்தையுடன் சதா சண்டை இடுவர். அரசுவகையில் அவமான மும், தண்டனையும் பெறுவர். சிலர் வாரிசு களினால் வெகு துன்பம் கொள்வர். தந்தைவழி சொத்து கைக்கு கிடையாது.
வியாழக்கிழமைகளில் திருவேற்காடு அம்மனை வணங்கலாம். அருகிலுள்ள கோவில்களில், துர்க்கையை வழிபடவும்.
சிம்ம லக்னத்தில் 5-ல் கேது
சென்ற ஜென்மத்தில் குழந்தைகளை, அம்போவென்று விட்டுவிட்டு பிரிந்திருப் பார். அல்லது குழந்தையை வேறு யாரிட மாவது கொடுத்திருப்பார். இவர் குடும்பம் என்பது நச்சு, பிடுங்கல் என அர்த்தம் கொண்டிருப்பார். இவர் யாரிடமும் கலந்து பேசாமல் இருந்திருப்பார். சிலர் சன்யாசியாக காலம் தள்ளியிருப்பர். இதற்கு இவரது இயலாமையும், ஒரு காரணமாக இருந்திருக்கும். மனைவியை ஆயிரம் தொல்லை சொல்லி பிரித்து வைத்திருப்பார். பூர்வீக இடத்தைவிட்டு பிரிந்து, வெகு தூரம் சென்றிருப்பார். காஞ்சி பெரியவர், சாய்பாபா, ராகவேந்திரர், ஸ்ரீரமண மகரிஷி என யாராவது சித்திரை வணங்கவும்.
இந்த ஜென்மத்தில் வாழ்வில் எந்த எதிர் பார்ப்பும் நிறைவேறாது. அது மனைவி, குழந்தைகள், தந்தை என இந்த வழியில் எல்லாம் பூஜ்ஜியமாக இருக்கும். வாழ்வில் சில காலத்திற்குபின் மடத்தில் சேர்ந்து விடுவார். அல்லது எல்லாராலும் கை விடப்பட்டு தனிமையில் இருப்பார்.
இவ்விதம் சிம்ம லக்ன 5-ஆமிடத்தில் பாபர் இருப்பவர்கள் பழமையான கோவிலி ல் இருக்கும் சிவனை வணங்கவேண்டும். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு அனுதினமும் செல்லவேண்டும். முடிந்தபோதேல்லாம் நிறைய விளக்கேற்றுங்கள்.
கன்னி லக்னத்துக்கு ஊழ்வினை விளைவுகள்
கன்னி லக்ன 5-ஆம் அதிபதி சனி. ராகு மகரம்.
கன்னி லக்ன 5-ல் சனி
இது மகர ராசி ஆதலால், இங்கு சனி ஆட்சி. எனவே பெரும் பாதிப்புகள் இராது.
எனினும் தந்தையின், தாயின் பராமரிப்பில் அலட்சியம் செய்திருப்பீர்கள். மனைவியை விட்டு பிரிந்து, சினன வூட்டுக்குப் போய் கும்மாளம் அடித்திருப்பார். தான்தான் உலகிலேயே வலுவான, வலி மையான ஆண் மகன் என நிரூபிக்க போனவந்த இடத்தில் எல்லாம், குடும்பம் ஏற்படுத்தி இருப்பார்.
இந்த ஜென்மத்தில் கன்னி ராசியின் 5-ஆமிடத்தில் அமர்ந்த சனி தந்தையின் பிரிவால் மனம் வாடும்படி இருக்கும். வெளிநாடு செல்ல நினைத்தால், அது எளிதாக நிறைவேறாது. அரசியலி ல் நுழைய எண்ணினால் வெகு ப்ராயாசைப்பட நேரிடும். தாயுடன் நல்லி ணக்கம் இராது. இளைய சகோதரன் எப்போதும், உங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து, உங்களை அழவைத்து அவன் வெற்றி பெற்றுவிடுவான். நீங்கள் காதல் விஷயத் தில் அவ்வப்போது, இரத்தக் காயம் பெறுவீர் கள்.
பெருமாளை வணங்கவேண்டும்.
கன்னி லக்ன 5-ல் செவ்வாய்
இது மகர ராசி. எனவே இங்கு செவ்வாய் உச்சம் பெறுவார். போன ஜென்மத்தில், பராக்கிரமம் மிகுந்த, மல்யுத்தம் போன்ற சண்டையில் பங்கேற்று, நிறைய பேரை இரத்தம் வரும் அளவு அடித்து, இரத்தக் களறியாக்கி, அவர்களை ஓட ஓட விரட்டி இருப்பீர்கள். அந்த காலத்து பஞ்சாயத்துக்களில், நெளிஞ்ச சொம்பை வைத்து, தலைமை பதவியேற்று, நிறைய பொய் சொல்லி , ஏறுக்குமாறான தீர்ப்பை சொல்லி யிருப்பீர்கள். நிறைய விளையாட்டு போட்டிகளில், கலந்து வம்படியாக முதல் பரிசு வாங்கியிருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் நிறைய விளையாட்டு பந்தயங்களில் கலந்துகொள்ள, வெளி நாட்டுக்குச் செல்வீர்கள். ஆயினும் நிறைய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உங்கள் தாயும், மருமகளும் உங்களை பாடாய்படுத்து வார்கள். அரசியலி ல் திறமை இருந்தும், முன்னேற வெகு தடை வரும். உங்களின் இளைய சகோதரன் வெகு அவமானம் தருவான்.
பழனி முருகரை வணங்குவதும், பைரவரை வழிபடுவதும் ஏற்புடையது.
கன்னி லக்ன 5-ல் ராகு
சென்ற ஜென்மத்தில் அரசாங்கத்திற்கு எதிராக, ஏதேனும் வேண்டாத்தனம் செய்து விட்டு, வேறு நாட்டிற்கு ஓடியிருப்பார். கள்ளச் சாராயம் விற்றிருப்பார். வயதுக்கு மீறிய பெண்களுடன் நட்பு பாராட்டி இருப்பார். வெகு கோபமாக சண்டையிடும்போது, எதிரில் இருப்பவர், சகோதரனோ அல்லது தாய்மாமனோ அல்லது எதிரியோ போட்டுத் தள்ளி சம்பவம் பண்ணி இருப்பார்.
இந்த ஜென்மத்தில் வெளிநாட்டுக்கு சட்ட விரோத பொருட்களை கடத்துவார். தன்னைவிட வயதான பெண்ணுடன் லவஸ்ஸில் இருப்பார். காசை வாங்கிக்கொண்டு, கொலை செய்யும் ஏஜென்சி நடத்துவார். அல்லது இளைய சகோதரனுடன் அல்லது மாமனாரு டன் சேர்ந்து ரௌடித்தனம் செய்வார்.
அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கிக்கொள்ள வேண்டும். அவரவர் சேஃப்டி முக்கியம் அமைச் சரே!
கன்னி லக்னத்துக்கு 5-ல் கேது
சென்ற ஜென்மத்தில் உங்கள் தந்தையை, சொந்த ஊரில் இருந்து, வேறிடத்திற்கு ஓடிப் போகச் செய்திருப்பீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய கிஸ்தியை கட்டாமல் ஏமாற்றி இருப் பீர்கள். வீட்டு மருமகளையும், குழந்தை களையும், சண்டையிட்டு, துரத்தி பிரித்தி ருப்பீர்கள். பணியாட்கள்மீது, வீண் பழி சுமத்தி துரத்தியிருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் வேலைக்காக வெளிநாடு செல்லும்போது, தடை ஏற்பட்டு செல்லமுடியாமல் போகும். இது அரசுமூலம் உண்டாகும். உங்கள் தாயாரின் மனநலம் குன்றும். உங்கள் இளைய சகோதரன் உடல், மனம் பாதித்தவராக இருப்பார். விநாயகரின் அபிஷேகத்திற்கு, நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கவும்.
இவ்விதம் கன்னி லக்னத்திற்கு 5-ஆமிடத் தில் பாபர்கள் அமைந்தவர்கள், ஆஞ்சனேயருக்கு, சனிக்கிழமைதோறும் நெய்விளக்கு ஏற்றி, துளசி மாலை சார்த்தி வழிபடவும். சத்திய நாராயணர் விரதம் பௌர்ணமிதோறும் இருப்பது நன்று.
துலா லக்னத்துக்கு ஊழ்வினை விளைவுகள்
துலா லக்னத்துக்கு 5-ஆமிடம் கும்ப சனீஸ்வர பகவான் இதன் அதிபதி ஆவார்.
துலா லக்ன 5-ல் சனி
துலா லக்னத்துக்கு 5-ஆம் அதிபதி சனி ஆட்சி. சென்ற ஜென்மத்தில் உங்களின் காதல் திருமணம், வீட்டில், குடும்பத்தில் பெரும் வெட்டுக்குத்தை உண்டாக்கி இருக்கும். பூர்வீக, பிறந்த இடத்தை விட்டு வெளியேறி இருப்பார். இவரது சில வேண்டாத செயல்கள், இவரது வீட்டையும், பரம்பரையையும் மிக அவமானம் கொள்ள செய்திருக்கும். இவரது குலப்பெருமைக்கு சற்றும் பொருந்தாத மிக மட்டமான, வேலை, சேவை செய்திருப்பார்.
இந்த ஜென்மத்தில், உங்களுக்கு இஷ்டமான திருமணம் செய்து, தில்லாக வீட்டிற்கே வந்து குடித்தனம் நடத்துவீர்கள். எந்த வேலையை, பழக்கத்தை நம்ம குலம் செய்யாது என்று சொல்வார்களோ, அதை முதல் ஆளாக பழகிகொண்டிருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில், நிறைய வம்பு குசும்பு பேசி, அனைத்து ஊழியர்களையும் இம்சை செய்வீர்கள்.
ஆஞ்சனேயரை, வெண்ணெய் சார்த்தி வணங்கவும்.
துலா லக்ன 5-ல் செவ்வாய்
சென்ற ஜென்மத்தில் உங்களுக்கு பொறுமை என்ற ஒன்று இருந்திருக்காது. எந்த விஷயத் திலும் ரொம்ப முரட்டுத்தனமாக, அடாவடி யாக, ஒழுக்கமற்று நடந்திருப்பீர்கள். அது சண்டையானாலும் சரி, காதலானாலும் சரி, வரைமுறையின்றி வாழ்ந்திருப்பீர்கள். உழைக்காமல், மிரட்டியே பணம் சம்பாதித் திருப்பீர்கள். பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியை நீங்களே வழிநடத்தியிருப் பீர்கள். வியாபார பங்குதாரர் அல்லது குத்தகைக்கு எடுத்த நிலத்தை நீங்களே கைப்பற்றி இருப்பீர்கள். இளைய சகோதரரை வேலை மட்டும் வாங்கிவிட்டு, பணம் கொடுக் காமல் வேலைக்காரன் மாதிரி நடத்தியிருப் பீர்கள்.
இந்த ஜென்மத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்த காதல், உங்களின் சில பல பழக்கத்தைப் பார்த்து, பயந்து ஓடிவிடும். இவரது வாழ்க்கைத்துணை சற்று விபத்தை சந்திக்க நேரிடும். இவரது திருமண வாழ்க் கையை, இவரது மாமனாரே கெடுத்து, கோர்ட்வரை கொண்டுபோய் விட்டுவிடுவார். அல்லது தம்பதிகளின் சண்டைக்கு, இவரது இளைய உடன்பிறப்பு காரணமாக இருக்கும்.
சென்னிமலை முருகனை தரிசிக்கவும். அரு கிலுள்ள முருகரை, விளக்கேற்றி வணங்கவும்.
துலா லக்ன 5-ல் ராகு
இவருடைய எதிர்மறை அறிவை, வியாபாரத் தில் பயன்படுத்தி, கணக்கில்லா வருமானம் சேர்த்திருப்பார். சொத்து கிடைப்பதற்காக, உறவினர் வீட்டு குழந்தைகளையும் போட்டுத் தள்ளியிருப்பார். வெற்றிபெறுவதற்கு, விஷம் வைக்கவும் தயங்கி இருக்கமாட்டார். மன தைரியம் மிக அதிகமாக இருந்திருக்கும். இத னால் கோவில் சொத்து, கல்விக்காக, மருத்துவ மனைக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளை தன் பெயருக்கு மாற்றி எழுதியிருப்பார்.
இந்த ஜென்மத்தில் தீவிரவாத சம்பந்தம் பெற்று, அதன்மூலம் நிறைய பணம் சம்பாதிப் பார். எதிர்மறை, செயல்கள் வெளிநாட்டிற்கும் துரத்தும். எதிர்மறை செயல்களால் ஒரு நாட்டை அழிப்பது எப்படி என சொல்லி க் கொடுக்கும் ஆசிரியத்தன்மை கொண்டிருப் பார். அலைபேசிமூலம் அடுத்தவரை ஏமாற்று வதில் கில்லாடியாக இருப்பார். வெளிநாட்டு வேலை ஏற்பாடு செய்கிறேன் என பலரையும் நம்பவைத்து ஏமாற்றுவார்.
சரபேஸ்வரரை வணங்கவும்.
துலா லக்ன 5-ல் கேது
நிறைய பெண்களை காதலி த்துவிட்டு, பின் பிரிந்திருப்பார். வியாபார பங்குதாரருக்கு பட்டை நாமம் சாற்றியிருப்பார். சென்ற ஜென் மத்தில் ஆயிரம் பேரைக் கொன்று, அரை வைத்தியனாகி இருப்பார். இவருடைய சகோதர னின் காதலுக்கு தடை கூறி, திருமணம் ஆக விடாமல் தடுத்திருப்பார். இவருடைய தாயா ருக்கு காசு கொடுப்பதை நிறுத்தியிருப்பார். இவருடைய மைத்துனருக்கு சொத்து கிடைக்க விடாமல் தில்லாங்கடி வேலைகள் செய்திருப் பார். மது பயன்பாடு அதிகமிருக்கும்.
இந்த ஜென்மத்தில் இவருடைய காதல், இவரின் தாயாரால் தடைப்படும். போதை பயன்படுத்துவார். ஒரு வேலையில் நீடித்து நிலைக்க இயலாது. படிப்பு, கல்வி என்பது சுட்டுப் போட்டாலும் வராது. முளை, புத்தி இவை வாழை மட்டை தன்மையில் அமையும்.
இதனால் இவரை யாரும் தொடர்ந்து வேலையில் வைத்திருக்க மாட்டார்கள். திருமண வாழ்க்கை தொல்லை தரும். விநாயகருக்கு விளக்கேற்றி வணங்கவும்.
இவ்விதம் துலா ராசியின் 5-ஆமிடத்தில் பாபர்கள் இருந்தால், கருடருக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். ஆஞ்சனேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபடுங்கள்.
வெள்ளிக்கிழமைகளில், பெருமாளையும் தாயாரையும் சேவிப்பது சிறப்பு.
சென்னை அருகே திருநீர்மலை பெருமாளை சேவிப்பது நல்லது.
செல்: 94449 61845