கணவன்- மனைவி இருவர், நாடியில் பலன் காண வந்தனர். அவர்களிடம், "என்ன? தெரிந்து கொள்ள வந்துள் ளீர்கள்' என்றேன்.
"ஐயா, மூன்று தலைமுறைகளாக, எங்கள் குடும்பத் தில் பிறக்கும் பெண்கள், யாராவது ஒரு பெண், திருமணம் ஆகாமல் இறந்துபோவது, புத்திர பாக்கியம் இல்லாது, இளம்வயதில் கணவன் இறந்து விதவையாவது அல்லது கணவனைப் பிரிந்து வாழ்வது போன்ற நிகழ்வுகள் உண்டாகின்றது. இது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மட்டும் நிகழ்வது அல்ல. ஒவ்வொரு தலைமுறையிலும், எங்கள் இரத்த சம்பந்தமான உடன்பங்காளிகள் குடும்பத்தில் மாறி, மாறி தொடர்ச்சியாக நடந்துவருகிறது. பெரும்பாலும் எங்கள் குடும்பத்தில் பிறக்கும் பெண்களுக்கே இந்தப் பலன்கள், பாதிப்புகள் நிகழ்கின்றது. இதற்கு உண்மையான காரணம் என்ன? என்று அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agathiyar_24.jpg)
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக் கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தி யர் எழுத்து வடி வாகத் தோன்றி, காரணம் கூறத் தொடங்கினார். இவன் வம்ச முன்னோர்கள், நிலம், சொத்து களுடன் வசதி யாக வாழ்ந்தவர் கள். பணபலம், ஆள்பலம் இருந்த தால், தாங்கள் வைத்ததே சட்டம் என்று மற்றவர்களுக்கு பல இன்னல் களை கொடுத் தார்கள். ஆணவம், அகங்காரம், மற்றவர்களை அலட்சியப்படுத்தியே வாழ்ந்தார்கள். குடும்பத்திலும் கட்டிய மனைவியும், பெற்ற பெண்களையும், ஆணாதிக்க குணத்தால் அடிமையாக வைத்திருந்தார்கள்.
இவன் வம்சத்தில், மூன்று தலைமுறைக்கு முன்பு, பாட்டன் காலத்தில், நிகழ்ந்த ஒரு சம்பவமும், அதில் பாதிக்கப்பட்ட, இவன் குடும்பத்தில் பிறந்த பெண்விட்ட சாபம்தான், இவன் குடும்பத்தில் பிறக்கும் பெண்கள் பாதிப்பு அடையக் காரணம்.
முன்னோர்கள் காலத்தில், இவன் வம்சத்தில் ஒரு பெண் பிறந்து வளர்ந்தாள். இவர்களிடம், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன், பண்ணையாளாக வேலை செய்துவந்தான். இவன் குடும்பத்துப் பெண் பருவ வயது. இவள் அந்த இளைஞன் மீது ஆசைகொண்டு, அவனிடம் தன் விருப் பத்தையும் கூறினாள். ஆனால் அவனோ, இந்தக் குடும்பத்தினரின் நடவடிக்கை தெரிந்தவன் என்பதால், அவளிடம், தன் ஏழ்மை நிலையைக் கூறி, இருவரும் பழகினால், உன் குடும்பத்தார், என் குடும்பத்தையே அழித்து விடுவார்கள் என்று கூறி அவளின் கோரிக்கையை நிராகரித்தான்.
இவன் வம்சத்துப் பெண்ணால், அவன் மீதுகொண்ட ஆசையைவிட முடியவில்லை. மறுபடியும் மறுபடியும் அவனிடம் தன் விருப்பத்தைக் கூறினாள். கொஞ்சம், கொஞ்சமாக அவனும் மனமாறி இவள் விருப்பத்தை ஏற்றுக்கொண்டான். இவர்கள் இருவரும் பழகுவது, சிறிது காலத்திலேயே அவளின் குடும்பத்தாருக்கு, தெரியவந்தது. ஆள்பலமுடைய இவள் முன்னோர்கள், அவனை அடித்து, கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி, தன் குடும்பத்து பெண்ணுடன் பழகக்கூடாது என்று கூறி அவனை வேலையை விட்டே நிறுத்திவிட்டார்கள். அந்தப் பெண்ணையும், இவனையும் பிரித்து விட்டார்கள். அவளும் தன் குடும்பத்தார் சொன்னதைச் செய்வார் கள், நம்மால் அவன் உயிர் துறக்க நேரிடும் என்று நினைத்து, கொஞ்சம், கொஞ்சமாக அவனை மறந்துவிட்டாள்.
ஒருநாள், அந்தப் பெண், அவன் இருக்கும் பாதையில், சாதாரணமாகச் சென்றாள். இவள் செல்வதைப் பார்த்த ஒருவன், இவள் குடும்பத்தாரிடம் தவறாக கூறிவிட்டான். இதனைக்கேட்ட குடும்பத்தார், இவள் திருந்தமாட்டாள். அவனை மறக்கமாட்டாள். ஒருநாள் வீட்டைவிட்டு, அவனுடன் ஓடிப் போனாலும் போய்விடுவாள். அப்படி நடந்தால், இவளால் நமது குடும்ப மரியாதை போய்விடும், கௌரவம் குறைந்து விடும், ஊரில் உள்ளவர்கள் அதன்பிறகு நம்மைக் கண்டு பயப்படமாட்டார்கள் என்று எண்ணி இவளைக் கொன்று விடலாம் என்று முடிவுசெய்து, அந்தப் பெண்ணை, தானியங்கள் கொட்டி வைக்கும் குதிருக்குள் இறக்கி, அந்த குதிர் நிரம்ப கம்பு தானியத்தைக் கொட்டி, மூடிவிட்டார்கள். எந்த தவறும் செய்யாத அந்தப் பெண், குதிரின் உள்ளே மூச்சுவிடமுடியாமல் திணறி, இறந்துபோனாள்.
இந்தப் பெண் இறக்கும்போது, அவனை மறந்து, மனம்மாறி நான் இருக்கும்போது, என்மீது சந்தேகம்கொண்டு, என்னைக் கொல்லுகின்றீர்கள். இனி இந்த வீட்டில் என்னைப்போல் பிறக்கும் பெண்களில், சிலர், கன்னிப் பெண்ணாக திருமணம் ஆகாமல் இறப்பார்கள். சில பெண்கள், வீட்டை விட்டு வெளியேறி, தங்கள் விருப்பம்போல், திருமணம் செய்துகொள்வார்கள், சில பெண்களுக்கு திருமணம் தாமதமாக நடக்கும். சில பெண்களுக்கு திருமணம் நடக்காமலேயே, வயது முதிர்ந்த கன்னிகளாகவே வாழ்ந்து இறப்பார்கள். பொதுவாக இந்த வம்சத்தில் பிறக்கும் பெண்கள், ஏதாவது ஒருவகையில் தங்கள் வாழ்க்கையில் பாதிப்புகள், சிரமங்களை அடைந்து வாழ்வார்கள். தவறே செய்யாமல் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்விட்ட சாபம்தான் இன்னும் நிவர்த்தியாகாமல், இந்த வம்சத்தில் பிறக்கும் பெண்களை தங்கள் வாழ்வில் பாதிப்படையச் செய்துவருகின்றது என்று காரணத்தைக் கூறினார்.
இந்தக் கன்னியின் சாபம் நிவர்த்தியாக, கோபம் குறைந்து அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தியடைய, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற வழிமுறைகளையும், இனி எங்கள் குடும்பத்தில் பிறக்கும் பெண்கள் நல்ல வாழ்வுபெற அகத்தியர்தான் வழிகாட்ட வேண்டும் என்றார்.
வம்சத்தில் பிறந்து, பாதிக்கப்பட்டு, இறந்துபோன கன்னிப்பெண் சாபம் நிவர்த்தியாகவும், ஆத்மா சாந்தியடைய தங்கள் வாழ்வில், நடைமுறை செயல்கள்மூலம் கடைப்பிடித்து வாழவேண்டிய வழிமுறைகளையும், சில பிரார்த்தனைகளையும் கூறிவிட்டு ஓலையில் இருந்து அகத்தியர் மறைந்தார்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/agathiyar-t.jpg)