சுமார் 45 வயதுடைய ஒருவர் நாடியில் பலன் கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்' என்றேன்.

என் மகன் 10-ஆம் வகுப்பில் பாஸ் செய்துவிட்டான். இப் போது அவனை பிளஸ் 1 வகுப் பில் சேர்க்கவேண்டும். எந்தப் பிரிவு பாடத்தை எடுத்து படித் தால் அவன் வருங்கால வாழ்க் கையில் நன்மை தரும் என்பதை அறிந்து, அந்தக் கல்விப் பிரிவில் சேர்த்துப் படிக்க வைக்கலாம் என்பதைத் தெரிந்து கொள் ளவே நாடியில் பலன் கேட்டு வந்தேன்'' என்றார்.

மகனின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்தால், அவன் எந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்துள் ளான்? அவனுக்குப் பிடித்தப் பாடப்பிரிவு எது? என்பதை அவனிடமே கேட்டு தெரிந்து கொண்டு, அவன் விருப்பம் போல் சேர்த்து படிக்க வைக்க லாமே என்றேன்.

"எனது தந்தை, நான் படிக்கும்போது, நான் விரும் பிய பாடப் பிரிவில்தான் சேர்த்து விட்டார். நானும் நன்கு படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் நான் விரும்பிப் படித்த படிப்புக்கான, வேலை, உத்தி யோகம் கிடைக்கவில்லை. இப்போது நான் பார்க்கும் வேலைக்கும், படித்த படிப்பிற் கும் சம்பந்தமே இல்லை. இது போன்ற கல்விநிலை எனது மகனுக்கும் வரக்கூடாது. அவன் விதிப்படி, வாழ்வை வளமாக அமைத்து தரும் கல்வி, தொழில் எது என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

aa

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

மகனின் கல்வி பற்றியும், எதிர்கால வாழ்வில் அவன் படித்த படிப்புக்கு வேலை கிடைத்து, சம்பாத்தியம் செய்ய உதவ வேண்டும் என்று கூறுகிறார். நான், இவன் மகனின் இந்த பிறவி வாழ்வில், அவன் வம்சமுன்னோர்கள் செய்த தொழிலைச் செய்து, சம்பாதித்து வாழவேண்டும் என்பது }அவன் தொழில் சம்பந்தமாக நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எனவே, இவன் முன்னோர்கள் செய்த தொழில் சம்பந்தமான, கல்விப் பிரிவில் சேர்ந்து படிக்க வைக்கச்சொல். இவன் முன்னோர் செய்த தொழிலைப் பற்றிக் கூறுகின்றேன். அதற்கு தொடர்புள்ள கல்வியை மகன் படிக்கட்டும்.

Advertisment

இவன் வம்சத்தில் நான்கு தலைமுறைக்குமுன்பு, இவன் முன்னோர்கள், ஒரு ஜமீன்தாரரிடம் நிதி நிர்வாகம், மக்கள் குறைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்த்துவைக்கும் உத்தியோகம் பார்த்து, உயர்ந்த அந்தஸ்துடன், மதிப்புடன் வாழ்ந்தவர்கள்.

அவர்கள் செய்த தொழில் சம்பந்தமான படிப்பினைப் படித்தால், அந்தப் படிப்பு சம்பந்தமான உத்தியோகம் செய்து, பணம் சம்பாதித்து, உயர்ந்த பதவி, அந்தஸ்துடன் வாழ்வான். ஆனால் இவன் தனிப்பட்ட முறையில், தான் படித்த படிப்பினைக் கொண்டு சுயமாக தொழில் செய்து வாழக்கூடாது. வம்ச முன்னோர்கள், ஜமீன்தாரிடம் ஊழியம் செய்து வாழ்ந்ததுபோல் அரசு துறையில் ஊழியம் செய்து வாழவேண்டும். வேறு எந்தவகையான கல்வியைப் பயின்றாலும், இவன் வாழ்க்கையில் தொழில், பொருளாதார உயர்வைத் தராது என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் நிதி, மக்கள் தொடர்பு சம்பந்தமான கல்வி நன்மை தரும் என்று கூறிவிட்டார். சரியான ஒன்றைக் கூறவில்லையே என்றார்.

Advertisment

நிதி நிர்வாகம் என்பது பணம் சம்பந்தமானது.

வங்கிப்பணி, ஆடிட்டர், அக்கவுண்டஸ், எல்.ஜ.சி., டிரஸ்ஸரி, நிதித்துறை போன்ற பணம் சம்பந்தமான படிப்பு, தொழில், மக்கள் தொடர்பு என்பது அரசு வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, நகராட்சி, மாநகராட்சி போன்று மக்கள் குறைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்யும் தொழில் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மருத்துவம், பொறியியல் துறை, ஐ.டி. கம்பெனி வேலை சம்பந்தமான படிப்புகளைப் படிக்கக்கூடாது. இவை சம்பந்தமான படிப்பைப் படித்தாலும், அந்தத் தொழிலைச் செய்யமாட்டான். அந்த கல்வித் தகுதியைக்கொண்டு, அரசுத்துறை தேர்வெழுதி தேர்ச்சிபெற்று, அகத்தியர் கூறியபடி உத்தியோகம் பார்த்து, பணம் சம்பாதித்து வாழ்வான். அகத்தியர் கூறிய தொழில் சம்பந்தமாக நிறைய கல்விப் பிரிவுகள் உண்டு, அவற்றில் சேர்த்துப் படிக்க வையுங்கள் என்றேன்.

உண்மையில் என் மகனை ஐ.டி. சம்பந்தமான படிப்பு அல்லது மருத்துவம், தொழிற்கல்வி படிக்க வைக்கவே ஆசைப்பட்டேன். ஆனால் அந்தப் படிப்பு மகனின் வாழ்க்கைக்கு உதவாது என்று அகத்தியர் கூறிவிட்டார். அகத்தியர் கூறிய தொழில் சம்பந்தமான கல்வியைப் படிக்க வைக்கின்றேன் என்று கூறி என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.

ஒருவர் பிறக்கும்போதே, இந்த பிறவியில், என்ன தொழில் செய்து சம்பாதித்து வாழவேண்டும் என்று நிர்ணயித்தே பிறக்கின்றார்.

பிறப்பில் நிர்ணயிக்கப்பட்ட தொழில் அமைந்தவர்கள், சுலபமாக தொழில்செய்து, பணம் சம்பாதித்து, உயர்வாக வாழ்கின்றார்கள். விதிப்படி அமைந்துள்ள தொழில் அறிந்து வாழாதவர்கள் வாழ்வில் சரியான தொழில் அமையாமல் சிரமப்பட்டு வாழ்வார்கள் என்பதை நானும் அறிந்துகொண்டேன்.

செல்: 99441 13267