அனுஷம்
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் பயணம் செய்வதை மிகவும் விரும்புவார்கள். பணவசதியுடன் இருப்பார்கள். பலவித ஆடைகள், நகைகள் அணிவதில் விருப்பமுள்ளவர்கள். அலங்காரப் பிரியர்கள்.
நல்ல மனம் கொண்டவர்கள். பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார் கள். மென்மையான குணமுள்ளவர்கள்.
காரியங்களை முழுமையாக முடிப்பார்கள். இயற்கையை ரசிக்கக் கூடியவர்கள். எதையும் சுய விருப்பத்துடன் செய்வார்கள். கொடுக்கல்- வாங்க-ல் மிகவும் கவனமாக இருப்பார்கள். கதாநாயகரைப்போல வாழ்வார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு 'ச' என்னும் ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.
யோனி- மிருக் (மான்); கணம்- தேவகணம்; நாடி- மத்திம நாடி; அதிபதி- சூரியன்; கிரகம்- சனி.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால், அது குணமாவதற்கு 12 முதல் 30 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக, "நமோ மித்ரேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். நெய்யை தானமளிக்கவேண்டும். நாக-ங்க மரதை வழிபடவேண்டும்.
பிறக்கும்போது ஜாதகத்தில் சனி லக்னத்தில் அல்லது சுயவீட்டில் அல்லது உச்சமாக இருந்தால், தலைமைப் பதவிக்கு வருவார்கள். சனி, குருவால் பார்க்கப்பட்டால் வாழ்கையில் பல துன்பங்களை அனுபவித்து பெரிய மனிதர்களாக வருவார்கள். சனி, சந்திரனுடன் 8-ல் இருந்தால், இளம்வயதில் அடிக்கடி ஜுரம் வரும்.
சனி 6-ஆவது பாவத்தில் இருந்தால் பித்தநோய் உண்டாகும். சந்திரன் பலவீனமாக இருந்தால் மனநோய் வரும். சனி, சந்திரனுடன் 12-ல் இருந்தால் தூக்கம் சரியாக வராது. குடிப்பழக்கம் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
2-ல் சனி, சூரியன், புதன் அல்லது சனி, சூரியன், செவ்வாய் இருந்தால் ஜுரம் வரும். உணவில் கட்டுப்பாடு இருக்காது.
சிலர் காரம், மாமிச உணவு, மது ஆகியவற்றை அதிகமாக உண்டு உடலைக் கெடுத்துக்கொள்வார்கள்.
கேட்டை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுய சிந்தனை உள்ளவர்கள். கோப குணம் கொண்டவர்கள். கொடுக்கல்- வாங்க-ல் சரியாக இருக்கமாட்டார்கள். வாத, விவாதத்தில் மன்னர் களாக இருப்பார்கள்.
கடுமையாக உழைப்பார்கள். நினைத்ததை முடிப்பார்கள். சுயமரியாதையுடன் வாழ்வார்கள். மாநிறம் கொண்டவர்கள். சுமாரான பெயர், புகழுடன் இருப்பார்கள். பணவசதி இருக்கும். போராட்ட குணம் கொண்டவர்கள். ஆராய்ச்சி மனம் உள்ளவர்கள். தாய்- தந்தை, சகோதரர்களுடன் நல்ல உறவிருக்காது.
இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு 'ச', 'வ' ஆகிய ஆங்கில எழுத்துக்களில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.
யோனி- மிருக் (மான்); கணம்- ராட்சச கணம்; நாடி- ஆதி நாடி; அதிபதி- இந்திரன்; கிரகம்- புதன்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால், அது குணமாவதற்கு 4 முதல் 9 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக, "த்ரா தர மிந்த்ர மிதி' மந்திரத்தைக் கூறவேண்டும். எள்ளு தானமளிக்கவேண்டும். வேப்ப மரத்தை வழிபடவேண்டும்.
பிறக்கும்போது ஜாதகத்தில் புதன் அஸ்தமனமாக இருந்தால், மெலிந்த தோற்றத்தில் இருப்பார்கள். வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்கும்.
புதன், சூரியனுடன் லக்னம் அல்லது 6, 8-ல் இருந்தால் அடிக்கடி ஜுரம் வரும். புதன், உச்சமாக லக்னம் அல்லது 4, 10-ல் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள். பத்ர யோகத்தால் வாழ்வின் நிலை படிப்படியாக உயரும்.
புதன், சந்திரனுடன் 6, 8-ல் இருந்தால் மார்பில் கபம் கட்டும்.
புதன், குருவால் பார்க்கப் பட்டால், கணக்குத் துறையில் (சார்ட்டட் அக்கவுன்ட்) நிபுணர் களாக இருப்பார்கள்.
புதன், சனியுடன் 7-ல் இருந்தால், பிறப்பில் சற்று பிரச்சினை இருக்கும். சிலர் அரவாணிகளாக இருப்பார்கள்.
புதன், செவ்வாய், சூரியன் லக்னத் தில் இருந்தால், பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப் பார்கள். தான் நினைத்ததைச் செய்யவேண்டு மென்று நினைப்பார்கள். புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், இளம்வயதில் தவறான செயல்களில் ஈடுபடுவார்கள்.
(தொடரும்)
செல்: 98401 11534