ஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழுடன் இருப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். கால்களைத் தரையில் அழுத்திவைத்து, மிடுக்காக நடப்பார்கள். அனைவரும் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமென்று நினைப்பார்கள். தசா காலங்கள் நன்றாக இருந்தால், ஆடம்பரமாக வாழ்வார்கள். நல்ல பண வசதியுடன் இருப்பார்கள். கலாரசிகர்கள்.

Advertisment

ss

எங்கு சென்றால் நமக்கு நன்மை நடக்கு மென்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி செயல்படுவார்கள்.

Advertisment

சிலர் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும், மனவியல் நிபுணர்களாகவும் இருப்பார்கள். வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து, நிறைய அனுபவங்களைப் பெறுவார்கள்.

தேடிவரும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள். வர்த்தகத் தில் அரசர்களாக இருப்பார்கள்.

Advertisment

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைக்கு சு, சே, சோ, ல என்று ஆரம்பமாகும் பெயர்களை வைக்கவேண்டும். ஆங்கிலத்தில் ஈ, க ஆகிய எழுத்துகளில் ஆரம்பமாகும் பெயர்களை வைக்க வேண்டும். இந்த நட்சத்திரததில் பிறப்பவர்கள் தெய்வ கணத்தில் பிறப்பார்கள்.

யோனி- அஸ்வ யோனி.

நாடி- ஆதிநாடி.

நட்சத்திர அதிபதி- அஸ்வினி குமாரர்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் வந்தால், அது ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும். நோய் குணமாவதற்கு உணவு தானமாளிக்க வேண்டும். மிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறவேண்டும். தேத்தான் கொட்டை மரத்தை பூஜை செய்ய வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்திற்கான கிரகம் கேது.

பிறக்கும்போது கேது, லக்னத் திலிருந்து 6, 8-ல் இருந்தால், தசாகாலங்களில் நோய்வரும். பலருக்கு காலில் அல்லது வயிற்றில் தழும்புகள் இருக்கும். லக்னாதிபதியும் சந்திரனும் சனியுடன் 8-ல் இருந்தால், உயிருக்கு ஆபத்து இருக்கும்.

பிறக்கும்போது குரு பகவானுடன் கேது 3-ல் இருந்தால், அவர் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைக் காண்பார். வெளிநாடுகளுக்குப் பயணிப்பார். சந்தோஷமாக வாழ்வார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரவில் துணி துவைக்கக்கூடாது. வீட்டில் கத்தரிக் கோலைத் தொங்கவிடுவதோ, கத்தியை செங்குத் தாக வைப்பதோ கூடாது.

பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாநிறம் கொண்டவர்கள் பலர் பேராசை பிடித் தவர்களாக இருப்பார்கள். சுயமாகத் தொழில் செய்து, பணம் சம்பாதிப்பார்கள். கைத் தொழிலில் நிபுணர்களாக இருப்பார்கள்.

சுயநலம் மிக்கவர்கள். எல்லா விஷயங் களிலும் மிக கவனமாக இருப்பார் கள். எதையும் மிகுந்த உற்சாகத்துடன் செய்வார்கள். ஆராய்ச்சி செய்யக்கூடிய வர்களாகவும், அறிவாளியாகவும் இருப்பார் கள். பலரைப் பணிக்கு வைத்து வேலைகளைச் செய்பவர்களாக இருப்பார்கள். பலர் உயர்ந்த பதவிகளிலும், சிலர் நடிகர்களாகவும், கலை ஆர்வலருமாகவும் இருப்பார்கள்.

குடும்பத்திற்குள்ளும், நாட்டிலும், நாடுகளுக்கிடையிலும் நல்ல உறவு ஏற்பட பாடுபடக்கூடியவர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். புகழுடன் வாழ்வார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைக்கு "க' என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரை வைக்கவேண்டும்.

யோனி- கஜயோனி.

கணம்- நர கணம்.

நாடி- மத்திம நாடி.

நட்சத்திரத்திற்கு அதிபதி- எமராஜன்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய்வந்தால், அது 11 நாட்கள் நீடிக்கும்.

நோய் குணமாவதற்கு யமாயத்வேதி மந்திரத்தைக் கூறவேண்டும். பசுவை தானமளிக்கவேண்டும். நெல்லி மரத்தை வழிபடவேண்டும்.

பரணி நட்சத்திரத்தின் கிரகம் சுக்கிரன்.

இந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந் தால், அந்த நட்சத்திர கிரக மான சுக்கிரன் லக்னத்திலிருந்து 8-ல் இருந்தால், அந்த குழந்தைக்கு உணவு சரியாக ஜீரணமாகாது. அடிக்கடி வயிற்றுப்போக்கு உண்டாகும். சுக்கிரன், சந்திரனுடன் இருந் தால், எட்டு மாதங்கள் வரை உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும்.

சுக்கிரன் ஜாதகத்தில் 9, 10, 11, 2-ல் இருந் தால், வசதியான குடும்பத்தில் பிறப்பார்கள்.

சுக்கிரன் 12-ஆவது பாவத்தில் இருந்தால், அதை குரு பார்த்தால், வாழ்க்கையின் பிற்பகுதியில் மன்னரைப்போல வாழ்வார்கள்.

ஜாதகத்தில் சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்து, அதை குரு அல்லது சந்திரன் பார்த் தால், குடும்பத்தில் நல்ல பொருளாதார நிலை, பல வாகனங்கள் இருக்கும். எந்தவிதப் பிரச் சினைகளும் இல்லாமல், மிகவும் சந்தோஷ மாக வாழ்வார்கள்.

(தொடரும்)

செல்: 98401 11534