vijay antony mirnalini ravi romeo movie review

அதிகமாக கிரைம் கில்லர் மற்றும் சென்டிமென்ட் படங்களில் நடித்து வரவேற்பைப்பெற்ற விஜய் ஆண்டனி இந்த முறை காதல் திரைப்படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக வெளியாகி இருக்கும் ரோமியோ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா?

Advertisment

தன் குடும்பத்திற்காக வாங்கிய கடனை அடைத்து நல்ல நிலைமைக்கு வர மலேசியாவுக்கு சென்று வேலை செய்துவிட்டு நன்றாக சம்பாதித்து அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்புகிறார் விஜய் ஆண்டனி. இதனாலேயே அவருக்கு வயது முதிர்ந்து விடுகிறது. இருந்தும் தன்னுடைய பிரைம்டைமில் செய்ய முடியாத காதலை இனிவரும் நாட்களில் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் விஜய் ஆண்டனி, ஒரு மரண நிகழ்வில் நாயகி மிருணாளினியை பார்க்கிறார். விஜய் ஆண்டனிக்கு கண்டவுடன் காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே தன் குடும்பத்துக்கு தெரியாமல் சென்னையில் ஐடியில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற முனைப்பில் கிடைக்கின்ற சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டு சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கும் மிருணாளினி வீட்டில் மாட்டிக்கொள்கிறார்.

Advertisment

vijay antony mirnalini ravi romeo movie review

இதைத்தொடர்ந்து அவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பொழுது மிருணாளினி, விஜய் ஆண்டனிக்கு கண்டிஷன் போட்டு தான் சென்னையிலேயே வசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு விஜய் ஆண்டனியும் சம்மதிக்க திருமணம் ஜோராக நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு சென்னை வரும் விஜய் ஆண்டனிக்கு மிருணாளினியின் சுயரூபம் வெளிப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அவர் பிறகு தன்னை தேத்திக்கொண்டு மிருணாளினியின் ஆசையை நிறைவேற்ற தானே ஒரு தயாரிப்பாளராக மாறுகிறார். இதையடுத்து மிருணாளினி பெரிய கதாநாயகியாக மாறினாரா, இல்லையா? விஜய் ஆண்டனியும் அவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

பாலிவுடில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரப்னே பனாதி ஜோடி’ படத்தை உல்டா செய்து அதை தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி சுவாரஸ்யமான ஒரு காதல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். என்னதான் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு திரைக்கதை வைத்து உருவாகிய படமாக ரோமியோ இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாதவாறு சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள்யூகிக்கும்படி இருந்தாலும், அதே போல் படத்தின் முடிவும் நாம் ஏற்கனவே யூகித்தபடி இருந்தாலும் படம் பார்ப்பதற்கு எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் செல்வது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

Advertisment

திருமணமே பிடிக்காத கதாநாயகிக்கு திருமணத்திற்குப் பிறகு நாயகியை நாயகன் ஒன்சைடாக காதல் செய்து எப்படி கரெக்ட் செய்கிறார் என்ற கதைக் கருவை வைத்துக்கொண்டு தமிழுக்கு ஏற்றாற் போல் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தியில் வெளியான ரப்னே பனாதி ஜோடி படத்தில் எந்த அளவு கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருந்து ரசிகர்களை ரசிக்க வைத்ததோ, அதேபோல இந்த படத்திலும் வேறு ஒரு கதைக் கருவை வைத்துக் கொண்டு அதே மாதிரியான திரைக்கதை மூலம் அதே ஆழமான அழுத்தமான கதாபாத்திரத்தொடர்பை சரியாக கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார்கள்.

vijay antony mirnalini ravi romeo movie review

விஜய் ஆண்டனி வழக்கம்போல் அமைதியான நடிப்பின் மூலம் கவர்கிறார். எந்த வகையான கதையாக இருந்தாலும் தனது ட்ரேட் மார்க் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கொடுக்க முயற்சி செய்கிறார். அந்தந்த கதைக்கு ஏற்றவாறு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை சரியாக கொடுத்து படத்திற்கும் பக்கபலமாக அமைகிறார். அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நாயகி மிருணாளினி நாம் இதுவரை பார்த்த படங்களில் இல்லாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருத்தமாக இருக்கும் படியான தோற்றமும் நடிப்பும் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி சுவாரசியமாக அமைந்து படத்துக்கு பிளசாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல் யோகி பாபு வந்து செல்கிறார் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இவரை காட்டிலும் விடிவி கணேஷ் பல இடங்களில் நன்றாக கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறார். இவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்றபடி படத்தில் வரும் மற்ற நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

பரத் தனசேகர் மற்றும் ரவி ராய்ஸ்டர் இசையில் பாடல்கள் வித்தியாசமான முயற்சியில் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவில் படத்தின் சென்னை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தி சினிமாவுக்கும் இது பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு இந்த கதை புதிது. இந்தி சினிமாவை பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கும், பார்த்த தமிழ் ரசிகர்களுக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இப்படம் அமைந்திருக்கிறது.

ரோமியோ - மினிமம் கியாரண்டி!