Skip to main content

நிறங்கள் மூன்று - திரைப்பட விமர்சனம்!

Published on 22/11/2024 | Edited on 22/11/2024
moontru nirangal- Movie Review

துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய படங்கள் போதுமான வரவேற்பு பெறவில்லை. இதற்கிடையே இவர் இயக்கத்தில் உருவான நரகாசுரன் படமும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது படி இருக்கிறது. இப்படியான சிக்கல்களில் இருந்து மீண்டு கம்பேக் கொடுக்கும் நோக்கில் தற்பொழுது நிறங்கள் மூன்று படம் மூலம் கோதாவில் குதித்திருக்கும் இயக்குனர் கார்த்திக் நரேன் தனக்கு ஏற்பட்ட சருக்கல்களை இப்ப படம் மூலம் நிவர்த்தி செய்தாரா, இல்லையா?

படத்தில் மூன்று நிறங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் வருகிறது.  ஒன்று, பள்ளியில் படிக்கும் மாணவன் துஷ்யந்த் சக மாணவியான ஆசிரியர் ரஹ்மானின் மகள் அம்மு அபிராமி உடன் காதல் வயப்படுகிறார். இருவரும் காதலிக்கும் சமயத்தில் ஒரு நாள் விடியற்காலை அம்மு அபிராமி காணாமல் போகிறார். அவரை ரகுமானும் துஷ்யம்தும் மாறி மாறி தேடுகின்றனர். மற்றொரு நிறம் கொண்ட அதர்வா சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று கனவோடு சுற்றித் திரியும் போதை ஆசாமியாக வருகிறார். இவர் ஒரு ப்ரொடியூசருக்கு சொல்லி ஓகே செய்ய வைத்திருந்த கதை ஸ்கிரிப்ட் திருடப்படுகிறது. அதை அதர்வா தேடி அலைகிறார். மற்றொரு நிறம் கொண்ட கெட்ட போலீஸ் ஆபிஸர் சரத்குமார் ஒரு அரசியல்வாதி மகனை பிடித்து வைத்துக் கொண்டு அந்த அரசியல்வாதிக்கு தண்ணி காட்டுகிறார். இப்படி ஒவ்வொரு நேரம் கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் நேரத்தில் இவர்கள் அனைவரும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கின்றனர். அப்படி வெவ்வேறு கதைகளாக விரிந்த இப்படம் கடைசியில் ஒரே ஒரு கதையாக எங்கு சென்று முடிந்தது? இறுதியில் போடப்பட்ட முடிச்சுகள் அவிழ்ந்தனவா இல்லையா? என்பதே நிறங்கள் மூன்று படத்தின் மீதி கதை.

படத்தில் மூன்று வெவ்வேறு நிறங்கள் கொண்ட மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்கள் அதை எப்படி தன் திரைக்கதை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து அதற்கான தீர்வுகளை எப்படி சுவாரசியமாக கொடுத்துள்ளார் என்பதை இப்படம் மூலம் தன் கிரேட் மார்க் காட்சி அமைப்புகள் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். ஒரு பெரிய ஷார்ட் பிலிம் கதையை வைத்துக்கொண்டு அதை முழு நீள ஃபியூச்சர் ஃபிலிம் படமாக கொடுத்துள்ள இயக்குநர் கார்த்திக் நரேன் படத்தில் உள்ள கதைக்கும், திரைக்கதைக்கும் தனித்தனி மனிதர்கள் மூலம் அவரவர் கதை மூலமாக கதையை நகர்த்தியவர் பின் கடைசியில் அதை ஒன்றாக சிறப்பான முறையில் நல்ல கதை அமைப்போடு கொடுத்துள்ளார். ஆனால் கதையில் இருக்கும் ஆழமும் சொல்ல வந்த கருத்தும் பெரிதாக நம் மனதிற்கு ஒட்டாமல் இருப்பது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் தான் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் பல இடங்களில் இம்மச்சூரான விஷயங்கள் ஆங்காங்கே படத்தில் தென்படுவதும் பாதகமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பணத்தின் நாயகன் பல்வேறு விதமான போதைக்கு அடிமையாகி சுற்றி திரிந்தாலும் பரவாயில்லை மற்றொரு கதாபாத்திரம் குடிக்கு அடிமையாக அதை மிகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் பெரிய தப்பு போல் காண்பித்து அவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுத்துவது போல் காண்பித்த இயக்குனர் ஏனோ நாயகன் பயன்படுத்தும் போதை பொருட்களால் சொசைட்டியில் ஏற்படும் பிரச்சனைகளை அழுத்தமாக காட்டாமல் அப்படியே விட்டுவிட்டார். இந்த மாதிரியான லாஜிக் மீறல்கள் படம் முழுவதும் தென்பட்டாலும் கதை சொன்ன விதத்திலும் அதை காண்பித்த திரை கதையிலும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் காண்பித்து இருப்பதால் படம் ஓரளவு கையை கடிக்காமல் கரையும் சேர்ந்திருக்கிறது.

படத்தில் நடித்திருக்கும் அதர்வா, அம்மு அபிராமி, சரத்குமார், துஷ்யந்த், ரகுமான் உட்பட பலரும் அவரவர் வேலையை மிக மிக சிறப்பாக செய்திருக்கின்றனர். அவரவர் ஏற்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தனக்கு கொடுத்த பாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக நாயகன் அதர்வா கதாபாத்திரம் ஆங்காங்கே சில அயற்சிகளை கொடுத்தாலும் நடிப்பில் சில இடங்களில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். அதேபோல் கெட்ட போலீசாக வரும் சரத்குமார் தன் குடும்பத்திற்கு நல்ல தலைவனாக இருப்பது போன்று காண்பிப்பதும் அதற்கு ஏற்றார் போல் அவர் செய்யும் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ரகுமானும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் அளவான நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார். பள்ளி மாணவராக வரும் தூசியும் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக அமு அபிராமியின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. மற்றபடி உடனடித்த அனைவர்களும் ஒரு திரில்லர் படத்துக்கான நடிப்பை ஏற்ற இறக்கம் இன்றி சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர்.

ஜேம்ஸ் பிஜாய் பின்னணி இசை ஹாலிவுட் படங்களுக்கு ஏற்றார் போல் சில இடங்களில் ரெட்ரோ இசையும் பல இடங்களில் தற்கால இசையும் கொடுத்து காட்சிகளை என்ஹான்ஸ் செய்திருக்கிறார். டிஜோ டோமி ஒளிப்பதிவில் காட்சிகள் வேறு ஒரு தளத்திற்கு சென்று இருக்கிறது. குறிப்பாக இரவு நேர சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தில் மனிதர்களின் மூன்று நிறத்தை பற்றி கூறியிருக்கிறார்கள். ஒருவர் நல்லவர், ஒருவர் கெட்டவர், மற்றொருவர் நல்லவர் மற்றும் கெட்டவர் போல் நடிப்பவர் என்ற மெசேஜை தனக்கே உரித்தான பாணியில் உருவான திரைக்கதை மூலம் நல்ல ஒரு திரில்லர் படமாக இப்படத்தை கொடுத்த இயக்குனர் ஏனோ கதைக்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னமும் இப்படம் பேசப்பட்டிருக்கும்.


நிறங்கள் மூன்று - அடர்த்தி குறைவு!

சார்ந்த செய்திகள்