/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_309.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, அவ்வபோது நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். அந்தவகையில், இவர் நடித்த ‘கூர்க்கா’, ‘மண்டேலா’ ஆகிய படங்கள்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனைத் தொடர்ந்து நடிகர் யோகி பாபு, இயக்குநர் அனுசரண் இயக்கும் ‘பன்னிகுட்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். திண்டுக்கல் ஐ. லியோனி, கருணாகரன், விஜய் டிவிபுகழ் மற்றும் ராமர் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சதீஸ்ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை லைகா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ‘பன்னிகுட்டி’ படத்தின் தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை11:11 புரொடக்சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)