Skip to main content

அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பும் 'ரைட்டர்'... கவனம் ஈர்க்கும் பா. ரஞ்சித் படத்தின் டீசர்

 

writer movie trailer goes viral

 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் 'ரைட்டர்' படத்தை கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ரைட்டர்' படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

 

ad

 

இந்நிலையில், படத்தின் ட்ரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போலீஸ்காரர் நேர்மையாக இருப்பதால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்துப் பேசியுள்ள இப்படத்தின் ட்ரைலர், யூடியூப் தளத்தில் 6 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது.  'ரைட்டர்' திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.