Skip to main content

'ஸ்க்விட் கேம்' பிரபலம் மீது பாலியல் புகார்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

women give complaint against Squid Game' Star O Yeong-su

 

'ஸ்க்விட் கேம்' கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் கவனம் பெற்ற கொரியன் வெப் சீரிஸ். இந்த சீரிஸில் 'ஓ இல்-நாம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஓ யோங்-சு (O Yeong-su). 78 வயதான இவர், நெட்ஃபிக்ஸ் ஹிட் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்ற முதல் தென் கொரிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றவர். 

 

இதனிடையே கடந்த 2017ல், தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக நடிகர் ஓ யோங்-சு மீது குற்றம் சாட்டினார் ஒரு பெண். இது தொடர்பாகக் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் ஓ யோங்-சுக்கு எதிராக அந்த பெண்மணி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு ஏப்ரல் 2022ல் ஓ யோங்-சு மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்ததாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்மணியின் வேண்டுதலின் பேரில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை மீண்டும் எழுந்ததைத் தொடர்ந்து சியோலின் கலாச்சார அமைச்சகம் ஓ யோங்-சு நடித்துள்ள அரசாங்க விளம்பரத்தை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lollu sabha actor seshu passed away

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.