Skip to main content

“இன்னைக்கு வரைக்கும் வருத்தம் என்னனா?”- புலம்பித் தீர்த்த ஆர்.கே.சுரேஷ்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 

"What is the regret till today?"- RK Suresh Regret!

 

அதர்வா நடிப்பில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தின் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது பேசிய திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், "பட்டத்து அரசன் டைட்டில் கேட்கும் போதே, டைரக்டர் சற்குணம் பங்காளிகிட்ட நல்லாருக்குனு சொல்லியிருந்தேன். அப்பறம் நான் கேட்டேன் யாரு ஹீரோனு. அதர்வா தான் பங்காளினு சொன்னாரு. அப்ப உண்மையிலே தம்பிக்கு கரெக்ட்டா இருக்கும்னு சொன்னேன். 1986-ல எங்க அப்பா தயாரிச்ச முதல் படத்துல நடிச்சது முரளி சார். உங்களுக்கு தெரியுமானு தெரியாது. இப்ப தான் சொல்றன். அப்ப நான் ரொம்ப குட்டி பையன். சினிமா சூட்டிங்க்கு போவேன். அப்போது, முரளி சரோடு உட்கார்ந்து சாப்பிடறது, அப்பறம் அவர் எங்க வீட்டுக்கு வரது, அந்த மாதிரிலாம் இருந்துச்சு.

 

எதுக்குங்க... நம்ம சொத்தெல்லாம் போயிடும்னு எங்க அம்மா திட்டிட்டே இருப்பாங்க. இன்னைய காலகட்டங்களில் இருக்கும் சினிமா வேற, அப்ப இருந்த காலகட்டங்களில் இருந்த சினிமா வேற. நாம் பார்த்த விதமே வேற. ராஜ்கிரண் சாருக்கு அதெல்லாம் தெரியும். அடிக்கடி தம்பிட்ட பேசுவேன். என் சொந்த தம்பி மாதிரி தான் நினைப்பேன். இன்னைக்கு வரைக்கும், தம்பி நீங்க வந்து யூத்-ஆ பண்ணுங்க. ஃப்ரெஷ் ஆர்ட்டிஸ்ட் அவரு. அவர் அடுத்தடுத்த கட்டத்திற்குக் கண்டிப்பா போயிட்டு இருக்காரு. அவரது முதல் படமே நூறு நாள் ஓடிய படம்.

 

ராஜ்கிரண் அப்பா, இனிஷியலா டிஸ்ட்ரிபியூட்டர் ஆகி, புரொடியூசர் ஆகி, அப்பறம் ஆக்டரா வந்தாரு ஐயா. அப்ப இருந்தே அவர் மேல பெரிய மரியாதை எனக்கு. ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் சார்ட்ட ராஜ்கிரண் சார் மாதிரியே அந்த ஒரு பஞ்ச் எனக்கு கத்துக்கொடுங்க சாருனு கேட்பேன். அவர் ஃபோர்ஸ் கொடுக்கறத மூஞ்சிலேயே காட்டிடுவாரு. அதுலயே 10 பேர் பறந்து போய் விழுவான். எங்களுக்கெல்லாம் பெரிய ஐகான் அவரு. விசித்திரன் திரைப்படம் எல்லாருடைய பாராட்டுக்குரிய ஒரு படம் அது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 47 இண்டர்நேஷனல் அவார்டு, டொமெஸ்டிக் அவார்டு 20 கிட்ட வந்துருக்குனு நினைக்கிறன். இதுக்கு எல்லாத்துக்கும் எல்லாருக்கும் நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்.  

 

போஜ்பூரில இருந்து போன் பண்ணி என்னை பாராட்டினார்கள். பாலிவுட் ,தெலுங்குவில் இருந்து பெரிய ஆர்ட்டிஸ்ட் கால் பண்ணி பாராட்டினாங்க. இன்னைக்கு வரைக்கும் வருத்தம் என்னனா? நம்ம தமிழ்ல உள்ள ஆர்ட்டிஸ்ட்ல பெருசா யாருமே போன் பண்ணி சொல்லல. நான் போஜ்பூரில நடிக்கறேன், தெலுங்குல மகேஷ் பாபு சார் கூட நடிச்சிட்டு இருக்கேன். மலையாளத்துல நடிச்சிட்டு இருக்கேன். கன்னட படம் பண்ணிட்டு இருக்கேன். எட்டு படம் பண்ணிட்டு இருக்கேன் நானு. அங்க போயிட்டு இங்க விட்ற கூடாதுங்கிறத்துக்காக தமிழ் படத்துல சூப்பர் ஸ்டார் படத்துல பண்ணப் போறேன். இங்க விட தெலுங்குல ஜாஸ்தியா கொடுக்கறாங்க.

 

போஜ்பூரில பாத்தீங்கன்னா, இங்க விட ரொம்ப கம்மி. ஆனாலும், கேரக்டருக்காக போய் நடிக்கறேன். அப்பறம் மலையாளம் பாத்தீங்கன்னா, இதுல இருந்து 50% கம்மியாத்தான் கொடுப்பாங்க. இருந்தாலும் அதுக்கு போய் நடிக்கிறதுக்கு காரணம் என்னனா? நம்ம நடிப்பு போய் எல்லாருக்கும் தெரியணும். உலக அளவுல தெரியணும். எல்லாரும் ஒற்றுமையா இருப்போம். எல்லாருக்கும் எல்லாரும் கைக்கொடுக்கணும்". இவ்வாறு ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கி தொழில்நுட்பக் குழுவைப் பாராட்டித் தள்ளிய திரிஷா

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Trisha praise Raangi technical team

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் சினிமா கிராஃப் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து வெளியாக இருக்கிற ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பேசியதாவது..

 

“ஒரு நடிகையாக நான் நடித்து முடித்து போய்விடுவேன். அதற்குப் பிறகு இந்தப் படம் வெளிவர உழைப்பது தொழில்நுட்பக் குழு தான். அவர்களுக்கு என் வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் தான் ஒரு படம் சிறப்பாக அமைய முக்கியக் காரணமாகும். படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் இவர்களை வேலை வாங்குகிற இயக்குநர் ஆகியோரின் பங்களிப்பு மிக மிக முக்கியம்.

 

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. நீங்க வாங்க, நாம பார்த்துக்கலாம் என்று தைரியமாக களம் இறக்கியவர் அவர்தான். ஸ்பாட்ல போயி தான் ரிகர்சலே பண்ணுவோம். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தராமல் ரொம்ப ஜாலியாக இருந்ததற்கு காரணமே படப்பிடிப்பின் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்கள் தான். இந்த நிகழ்விற்கு பல உதவி இயக்குநர்கள் வரல. ஆனால், பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு அர்ப்பணிப்பு நிறைந்தது.” என்றெல்லாம் பாராட்டினார்.


 

Next Story

"இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்தி..." - நடிகர் கமல்ஹாசன்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

"Even if I have a small cough, I have big news..."- Actor Kamal Haasan Anguish!

 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'DSP' திரைப்படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (25/11/2022) நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், "சகோதரர் விஜய் சேதுபதியின்  'DSP'-க்காக இங்கு வந்திருக்கேன். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள். ட்ரைலர் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்துச்சி. விழாவின் போது சொன்னேன், முன்பெல்லாம் பெரிய விபத்து நேரும் போது கூட, அடுத்து எப்ப ஷூட்டிங் வரீங்கனு கேட்பாங்க. அடுத்தப் படம் எப்ப ரிலீஸ்னு கேட்பாங்க.

 

இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்துட்டு இருக்கு. அதற்குக் காரணம் ஒன்று ஊடகம், மற்றொன்று பெருகியிருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். நன்றாக இருக்கிறேன். ‘இந்தியன் 2’ படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது" எனத் தெரிவித்தார்.