Skip to main content

'ஆத்மன் என்றால் என்ன' - ரகசியம் பகிர்ந்த சிம்பு

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

'What is Atman' - Simbu shared the secret

 

கடந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று 'ஆஹா' தமிழ் ஓடிடி தளத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 'ஆஹா' செயலியின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் சிம்புவும் இசையமைப்பாளர் அனிருத்தும் இருக்கின்றனர். அனிருத் இசையில் சிம்பு நடித்திருக்கும் விளம்பரம் கூட இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது.இந்த செயலியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்த கொண்ட சிம்பு பேசியது பின்வருமாறு...

"கடவுள் எனக்காக என்ன கொடுத்துள்ளாரோ அதே எனக்கு மகிழ்ச்சி தான். திரையரங்கில் ரசிகர்கள் நம்மை பார்க்கும் போது முதல் தடவை கை தட்டும் அந்த தருணம் ரிப்பீட் ஆகணும்னு ஆசையாக இருக்கும். தமிழ் என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வருவது என் அப்பா. நமது தாய் மொழி தமிழின் அருமை, அதை எப்படிப் பேச வேண்டும், இப்படி எல்லாம் பேசலாம், என அனைத்தும் சொல்லித் தந்தார். என்னுடைய தமிழ்ப் பற்றுக்கு அவர் தான் முழு காரணம். 

 

இன்னைக்கு எல்லாமே டிஜிட்டல் ஆக மாறிவிட்டது. எல்லாரும் கருத்துச் சொல்லுவார்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பது முக்கியமில்லை. நம்ம நம்மை பற்றி என்ன நினைக்கிறோம் என்பது தான் முக்கியம். நம்மள நம்ம நம்பணும் என்னைப் பொறுத்த வரை அது தான் ஆத்மன் என்று நினைக்கிறேன். அதைத் தான் மக்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சினிமாவுக்கு நிறைய ஓடிடி தளம் இருக்கு, இந்த 'ஆஹா' குழுவோடு நான் இணைய காரணம், தமிழுக்கு 'ஆஹா'-வை கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவுதான். அதனால் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த ஒரு விஷயத்தை இங்க கொண்டு வரணும்னு நினைச்சதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம். அல்லு அரவிந்த் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

அவர் தொட்டது எல்லாம் தங்கமாக மாறுகிறது. இந்த வயதிலும் அவருடைய அயராது உழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். அதை அவரிடம் பார்த்து நான் கற்றுக்கொண்டேன்.  நம்ம ஏற்கனவே தெலுங்கில் ஆரம்பித்து நல்ல வெற்றி பெற்று விட்டோம் என எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், முதல் தடவை ஒருவர் ஆரம்பிக்கும் போது எவ்வளவு ஆர்வமாக இருப்பார்களோ அந்த மாதிரி தான் என்னை அணுகினார். அது எனக்கு பிரமிப்பாக இருந்தது. மொத்த 'ஆஹா' குழுவும் அதேபோல் சூப்பராக வேலை செய்கின்றனர். சின்ன சின்ன விஷயத்துக்கு ரொம்ப மெனக்கெடுகின்றனர். ஆரம்பத்திலேயே இப்படி வேலை செய்கிறார்கள், பின்னாளில் எப்படிச் செய்வார்கள் என நினைக்கும்போதே ரொம்ப பெருமையா இருக்கிறது. அனிருத்துடன் முதல் முறை இணைத்து பணியாற்றுவது. அதுவும் தமிழ் மூலமாக நாங்கள் இணைவது ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாகவும் இருக்கு" எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

சிம்பு போல் ராம் சரணுக்குக் கிடைத்த கௌரவம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ram charan get honorary doctorate same like simbu

தெலுங்கு திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து முனனணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ராம் சரணை கோலிவுட் ரசிகரகளிடம் பிரபலமாக்கியது.  

இதையடுத்து மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் உலக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்தது. 

ராம் சரண் இப்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு படமும், சுகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், திரைப்படத் துறை மற்றும் சமூகத்திற்கு ராம்சரண் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்போது நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் சிம்புவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.